Saturday, October 15, 2005

புதிய தமிழ் யுனிக்கோடு - தமிழக அரசு அறிவிப்பு

புதிய தமிழ் யுனிக்கோடு பற்றிய உங்கள் கருத்தை தமிழக அரசுக்கு சொல்ல..
என்ற இந்தப்பதிவின் முதல் பதிப்பை ப்ளாக்கர் பகவான் ஸ்வாகா செய்துவிட்டதால், மீண்டும் இங்கே...
(தலைப்பு நீளமாக வைக்கும்போதே நினைத்தேன். கபளீகரம் செய்த தகவல் தந்த பரி-க்கு நன்றி!)

வணக்கம்.

தமிழக அரசு புதிய தமிழ் யுனிக்கோடு பற்றிய நமது கருத்துக்களை வரவேற்கிறது. இது பற்றிய அறிவிப்பு இங்கு வெளியாகியிருக்கிறது.
http://www.tunerfc.tn.gov.in/

உங்கள் கருத்துக்களை comments-tune@tamilvu.org என்ற மின்னஞ்சல் மூலமாகவோ
http://www.tamilvu.org/slet/tune_comments/html/tufeedbk.htm என்ற இணையப்பக்கம் மூலமாகவோ தெரியப்படுத்தலாம்.

அதனால், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து யுனிக்கோடை அதிகாரபூர்வ எழுத்துமுறையக்க முயற்சிசெய்வோம். அரசு சட்டத்தின் மூலம் தமிழ் ஊடகங்களையும் யுனிக்கோடுக்கு மாற்ற கோரிக்கை வைப்போம்.

மேலும், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களுக்கான (ITES) புதிய கொள்கைகளும் (2005) வெளியிடப்பட்டிருக்கிறது.

Thursday, October 13, 2005

அப்படி ஒரு பாடலே.... இல்லையா!?

வணக்கம்.

"ஔ" என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் ஏதாவது ஒரு (திரைப்படப்)பாடல் உங்களுக்குத் தெரியுமா!?
அல்லது அப்படி ஒரு பாடலே இல்லையா!?
அதோடு "ஃ"ல் ஏதாவது பாடல் சொன்னால்கூட இன்னும் வசதி.

அது சரி... ஏன் இப்படி ஒரு ஆராய்ச்சி என்று யாராவது கேட்பவர்களுக்கு:

இங்கு சிங்கையின் ஒலி 96.8 பண்பலையை வானொலியிலும், இணையம் மூலமாகவும் பலரும் கேட்டிருப்பீர்கள். காலைநேர நிகழ்ச்சி படைப்பாளர் கீதா தன்னுடைய ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியையும் அவருக்கேயுரிய தனித்தன்மையுடன், கலகலப்பாக, சுறுசுறுப்பாக, நேயர்களும் கலந்துகொள்ளும் வகையில் ஒவ்வொருநாளும் ஏதாவது ஒரு புதிய சிறப்புடன் படைப்பார்.

அதுபோன்று இனறைய நிகழ்ச்சியில் உயிரெழுத்துக்களில் ஆரம்பிக்கும் பாடல்களை வரிசையாக ஒலிபரப்பினார். ஆனால் "ஔ" என்ற எழுத்துக்கே பாடலே கிடைக்கவில்லை. நேயர்களுக்கும் பெரும்பாலும் தெரியவில்லை - சிலர் அதே ஒலி கொண்ட
'ஹவ் ஆர் யூ'... போன்ற பாடல்களை அனுப்பியிருந்தனர். இறுதியில் அவர், கூலி படத்திலிருந்து 'அவ்வோரா...' (அல்லது அது போன்ற - கையில் குறித்து வைத்திருந்ததைமதியம் கை கழுவிவிட்டேன்:) என்றொரு பாடலை ஒலிபரப்பினார்.

சரி இப்ப மீண்டும் கேள்வி:

"ஔ" என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் ஏதாவது ஒரு (திரைப்படப்)பாடல் உங்களுக்குத் தெரியுமா!?
அல்லது அப்படி ஒரு பாடலே இல்லையா!?
அதோடு "ஃ"ல் ஏதாவது பாடல் சொன்னால்கூட இன்னும் வசதி.

Saturday, October 01, 2005

்வ்வ்வ சக வலைப்பதிவர்களின் கவனத்துக்கு...

என் இனிய நண்பர்களுக்கு,

வணக்கம்.

நாமும் வலைப்பதிகிறோம் என்ற வகையில் ஒரு விடயத்தை இங்கு பகிர்ந்துகொள்ளவே நீண்ட நாள்களுக்குப்பிறகு இந்த ஒரு பதிவு.

இரு வாரங்களுக்கு முன் இங்கு இரு இளையர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாற்றப்பட்டனர். அவர்கள் மேல் உள்ள குற்றச்சாட்டு மத நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தங்களது வலைப்பதிவில் எழுதியதுதான் காரணம். அவர்கள் தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

இந்த வழக்கு தொடர்பான செய்திக்கு...

இந்த செய்தி கேள்விப்பட்டவுடன் இங்கு சிங்கையில் இணையத்தில் எழுதும் சக நண்பர்களிடம் இது தொடர்பாக பகிர்ந்து கொண்டேன்.

ஆனால் அதன் பின்னர் கடந்த வாரத்தில் இங்குள்ள பள்ளி மாணவ/மாணவிகள் தங்களது ஆசிரியர்கள் மீது பழிகூறி தரக்குறைவாக தங்களது வலைப்பதிவில் எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டு - அவர்களுடைய பதிவுகளை முடக்கி அவர்களையும் 3 நாளைக்கு பள்ளியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் மலேசியாவிலும், சில மாணவர்கள் இதுபோல் அத்துமீற - அவர்களை மாணவர்களுக்கு முன்னால் பொதுவில் தண்டணையளிக்கப்பட்டுள்ளது.

இப்படி அடிக்கடி செய்தி வந்து பரபரப்பாக இருப்பதால் இங்கு வானொலியிலும் இது பற்றி செய்திகள், சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது. நமது தமிழ் வானொலி ஒலி 96.8 லும் சிறப்புக்கண்ணோட்டம் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது, சட்ட தகவல்களுடன்.

இன்று Straits Times ஆங்கில ்ன் நாளிதழின் ST PodCastல் இது தொடர்பில் இன்று சிறப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

்ப் பாடொலிபரப்பு (PodCast:) பயன்படுத்தாதவர்களுக்காக அந்த ஒலிபரப்பின் எம்பி3 வடிவம் இங்கே:

பிரபலாகும் வலைப்பதிவுகள்...

வலைப்பதிவுகளைப் பற்றி வலைப்பதிவாளர்கள்

இது தொடர்பான ஒரு நேர்காணல்/கருத்துப் பரிமாற்றம்

அதனால், நாம் எழுதும் ஒவ்வொன்றும் பொதுவில் வைக்கிறோம் என்ற உள்ளுணர்வோடும், எச்சரிக்கையோடும், மனச்சாட்சியோடும் நமது படைப்புக்களை தொடர்வோம் - அது பதிவாக இருந்தாலும், பின்னூட்டமாக இருந்தாலும்.

Friday, July 22, 2005

சிங்கப்பூரின் புதிய சுற்றுலா தளம்...

வணக்கம்.

இன்று சிங்கப்பூரில் புதியதொரு சுற்றுலா தளம் திறப்புவிழா காணுகிறது. இது மற்ற சுற்றுலா தளங்கள் போலல்லாமல், பெரும்பாலும் சிங்கப்பூரில் உள்ள மக்களுக்கானது - சுற்றுலாப் பயணிகளும் இங்கு செல்ல தடையேதுமில்லை. இந்த புதிய இடம், இதுபோன்ற பழைய இடத்தை விட பல மடங்கு பெரியது. இது ஒரு கண்ணாடி மாளிகை. 16 தளங்களுண்டு, இடையிடையே கண்ணுக்கும், மனதுக்கும் ஆறுதலளிக்கும் மரம், செடி, கொடிகள் மற்றும் மூலிகைகள். 16-வது தளத்தில் இருந்து சிங்கப்பூரை கண்களில் கொள்ளை கொள்ள வசதி. எல்லாவற்றுக்கும் மேலாக இங்கு செல்ல அனுமதி இலவசம்



இன்று திறப்புவிழாகாணும்
புதிய தேசிய நூலகத்துக்கு
வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்...

புதிய மேம்படுத்தப்பட்ட இணையத்தளம்...

புதிய நூலகம் பல வசதிகளைக்கொண்டுள்ளது. தேசிய கலைகள் மன்றத்தின் நாடக அரங்கும் இங்கு ஒருங்கமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. மற்ற சிறப்புக்களை இங்கு பட்டியலிடுவதை விட, வாருங்கள் அங்கு சென்று கண்டு கேட்டு படித்து உண்டு வருவோம்...



மேலும் விபரங்களுக்கு...

தமிழ்த் தொகுப்பு பற்றிய விபரங்கள் நூலகத்தின் இணையத்தளத்தில் இருந்து....
( நன்றி: தேசிய நூலக வாரியம்)

லீ கொங் சியன் மேற்கோள் நூலகத்தின் தமிழ்ப் பிரிவில் புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகள் அடங்கியத் தொகுப்புகளைக் காணலாம். தமிழ்ப்பிரிவில் அனைத்து நூல்பிரிவுகளிலும் புத் தகங்கள், தமிழ்நாடு, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. பொதுப்பிரிவு, மெய்யியல், சமயம், சமூகவியல், மொழியியல், அறிவியல், கலைகள், இலக்கியம், புவி யியல், வரலாறு என்று எல்லாப்பிரிவுகளிலும் புத்தகங்களைக் காணலாம். உயர்நிலை, தொடக்கக் கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என்று பலருக்கும் ஏற்றவாறு புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

19 ஆம் நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளர்களான பாரதியார், பாரதிதாசனார், கல்கி, அறிஞர் அண்ணா, அக லன் இன்னும் பலரின் சிறந்த படைப்புக்களும், தற்போதைய எழுத்தாளர்களின் படைப்புக்களும் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் துறையின் சிறப்பம்சம்

இத்துறையின் சிறப்பம்சமாக சமயம், மொழியியல், கலை, இலக்கியம் ஆகிய நான்குப் பிரிவுகளைக் கூறலாம்.

சமயம்
குறிப்பாக, சைவ, வைணவத் திருத்தலங்கள் பற்றிய புத்தகங்கள், இந்துக்கலாச்சாரம், குலதெய்வ வழிபாடு கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், யோகம், போதனைகள், இராமாயணம், மகாபாரதம், பெரியபுராணம், தி ருவிளையாடற்புராணம் இஸ்லாமியப் புத்தகங்கள் மற்றும் பல சைவ வைணவ நூல்கள் அடங்கும்.

மொழியியல்
தமிழ் மொழி வரலாறு, சுவடி மொழிபெயர்ப்புகள், இலக்கண நூல்கள், அகராதிகள் போன்றவை அடங்கும்.

கலை
நாட்டுப்புறக் கலைகள், நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்துகள், நாடக வரலாறு, மேடை நாடகம், கர்னாடக இசை வரலாறு, கீர்த்தனைகள், திரைப்பட வரலாறு, திரைப்படத்துரையினரின் நினைவுகள், திரையிசை க் கலைஞர்களின் வரலாறு என்று பல தகவல்கள் அடங்கிய அரிய புத்தகங்கள் உள்ளன.

இலக்கியம்
தமிழ்த் துறையின் முக்கிய அம்சமாக இப்பகுதி விளங்கும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் அக்கால இல க்கியத்திலிருந்து இக்காலம் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் சேகரிக்கப்ப்ட்டுள்ளன. சங்க கால இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெருங்காப்பியங் கள், இலக்கிய வரலாறுகள், இலக்கிய ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகள், சைவ வைணவ இலக்கி யங்கள், பாரதியார், பாரதிதாசனார், அரிஞர் அண்ணா மற்றும் பலரின் இலக்கியப்படைப்புகள், மலேசி ய, இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகள், பிறமொழிக்கதைகள், என்று பரந்த அளவில் படைப்புகள் சேக ரிக்கப்பட்டுள்ளன. நிச்சயம் இலக்கிய ஆர்வலர்களுக்கும் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கும் ஒரு சிறந் த கருவூலமாக விளங்கும்.

சஞ்சிகைகள்
மொத்தம் 45 சஞ்சிகைகள் இந்தியா, மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து தருவிக்கப்படுகின்ற து. இயல், இசை, சினிமா, அரசியல், சமூகம், இலக்கியம், சமயம், சிறுவர் மலர், வர்த்தகம், கணினி, மருத்து வம் என்று அனைத்துப் பிரிவுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான பத்திரிகைகள் வாங்கப்படுகின்றன.

Tuesday, July 05, 2005

No more kuppai.com - இனியெல்லாம் குப்பை.வணி (வாணி!?)

வணக்கம்.

வழக்கம்போல சிங்கை தகவல்தொழிநுட்பததின் மூலம் தமிழுக்கு மேலும் ஒரு சிறப்பு செய்திருக்கிறது. தகவல் மேம்பாட்டு ஆணையம் (Infocomm Development Authority - IDA) வெளியிட்ட நேற்றைய அறிவிப்பின் படி இனி தமிழிலேயே வலைத்தளமுகவரி (URL - உரல்) வைத்துக்கொள்ள இயலும். அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு இங்கே...
இந்த திட்டம் முதல் ஆறுமாதத்துக்கு பரீட்சாத்தமுறையில் அமையும்.

இதைப்பற்றிய மேல் விபரத்திற்கு:http://www.idn.sg/

அது எப்படி செயல்படப்போகிறது?

பி.கு:
கடந்த நான்கைந்து வருடங்களாகவே இந்த முயற்சியில் i-dns.net என்ற நிறுவனம் இருந்தது தெரியும். அவர்களுடைய தளத்தில் இதுதொடர்பில் மேல்விபரம் உள்ளது. அந்நிறுவனத்தின் திரு. மணியம் சில தமிழ் இணைய மாநாடுகளில் இதுதொடர்பில் உரைநிகழ்த்தியதாக நினைவு.