Thursday, January 27, 2005

சூப்பர் ஷேரு... தயங்காம ஏறு!

சூப்பர் ஷேரு... தயங்காம ஏறு!
நாகப்பன்,புகழேந்தி

சின்ன வயதில் முதன்முதலில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டது நினைவிருக்கிறதா? அப்போது மற்றவர்கள் கீழே விழாமல் சைக்கிளை ஓட்டுவதை பார்த்து வியந்திருக்கிறோம். ‘கற்றுக்கொள்ளும் போது பேலன்ஸ் தவறி, கீழே விழுந்தாலும் பெரிதாக அடிபட வாய்ப்பில்லை’ என்று நாம் உணர்ந்து கொண்டதும், இயற்கையிலேயே நமக்கு பயம் நீங்கி விடும். உடனே நம்மை அறியாமலேயே சைக்கிள் ஓட்டும் ஆர்வம் அதிகமாகி, பழக ஆரம்பித்து விடுவோம். அதன்பிறகு சைக்கிளைவிடப் பல மடங்கு வேகமாகச் செல்லக்கூடிய மோட்டார் சைக்கிளை எளிதாக ஓட்ட ஆரம்பித்து விடுவோம். அதேபோல்தான் பங்குச் சந்தையும்.

கடந்த இதழ் கட்டுரை மூலமாக ‘மியூச்சுவல் ஃபண்ட்Õ என்ற சைக்கிளை எளிதாக ஓட்டக் கற்றுக்கொண்ட உங்களுக்கு இனி, பங்குச் சந்தை என்ற பைக்கை ஓட்டுவதில் அதிக சிரமம் இருக்காது. ஆனால், இந்த இடத்தில் ஒரு விஷயத்தை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். வேகமாக ஓடக்கூடிய மோட்டார் சைக்கிளை சற்றே கவனமாகக் கையாள வேண்டும் என்பதுதான் அது! பைக்கை வைத்துக்கொண்டு நூறு கிலோ மீட்டர் வேகத்திலும் சீறலாம்; ஆமை வேகத்திலும் ஊர்ந்து செல்லலாம். ஆனால், நல்ல மைலேஜ் வேண்டுமென்றால் சீறிப் போகாமல் சீரான வேகத்தில் போவதுதான் சரி. இதைத் தெளிவாகப் புரிந்துகொண்டால் பங்குச் சந்தையில் எளிதாகப் பணம் பண்ணலாம்.

பங்குச் சந்தை என்றால் லாட்டரி அல்லது குதிரைப் பந்தயம் போல ஏதோ ஒரு சூதாட்டம் ஆடுவதாக நம்மில் பலருக்கும் பயம் இருக்கிறது. ‘பணத்தை பங்கு சந்தையில் போட்டுவிட்டு போண்டியானவர்கள் பற்றித் தெரியுமா?’ என்று இழந்தவர்களைப் பற்றி சரித்திரம் கூறுவதற்கு ஒவ்வொரு ஊரிலும் ஒரு கூட்டம் உண்டு. செடியிலிருந்து ரோஜாவைப் பறிக்கும்போது முள்ளில் கை பட்டால் நிச்சயம் பாதிப்புதான். நாம்தான் கவனமாக முள்ளில் கைபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதை விடுத்து, முள் குத்திவிட்டது என்று முள்ளின் மீது பழிபோடுவதில் நியாயமில்லை.

கடந்த காலத்தில் பங்குச் சந்தையில் தில்லுமுல்லுகளைச் செய்து பல கோடி ரூபாயை ஸ்வாஹா செய்தார்கள் ஹர்ஷத் மேத்தாவும் கேத்தன் பரேக்கும். சட்டத்தில் இருந்த ஓட்டைகளைப் பயன்படுத்தி அவர்கள் செய்த தில்லுமுல்லு காரியங்கள் இனிமேல் நடக்க வாய்ப்பில்லை.

பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களைப் பாதுகாப்பதற்காக செபி (ஷிணிஙிமி) புதிய சட்ட திருத்தங்களையும் பிழையில்லா கண்காணிப்பு முறைகளையும் அமல்படுத்தியுள்ளது. புரோக்கர்களின் செயல்பாடுகள் நெறிமுறைப் படுத்தப்பட்டு மிகவும் வெளிப்படையான பாரபட்சமற்ற வியாபார முறையை கம்ப்யூட்டர் மூலம் ஏற்படுத்தியிருக்கிறது செபி!

சரியான முறையில் அணுகி பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதைவிட அதிக வருமானத்தைத் தரக்கூடியது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு டிரைவர் வைத்து கார் ஓட்டுவதோடு ஒப்பிடலாம். உங்கள் பணத்தை பாதுகாப்பாக பங்குச் சந்தையில் முதலீடு செய்வதுதான் மியூச்சுவல் ஃபண்ட்காரர்களின் வேலை. டிரைவர் ஒழுங்காக வண்டியை செலுத்துகிறாரா என்று மட்டும் கவனமாக நீங்கள் பார்த்துக் கொண்டால் எப்படி ஆபத்தில்லாமல் பயணம் செய்வீர்களோ... அதைப் போலத்தான் இதுவும்.

பங்குச் சந்தை... டிரைவரில்லாமல் நீங்கள் கார் ஓட்டி பயணிப்பது போலத்தான். எந்த நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது முக்கியம் (பங்குச் சந்தையில் பணத்தை போடுவதற்கு முன்னால் எப்படி விழிப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்பதை பின்னர் பார்ப்போம்).

இன்றைய பங்குச்சந்தை சிறு முதலீட்டாளர்களும் முதலீடு செய்யும் அளவுக்கு மாறியுள்ளது. கடைசியாக மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் ஒரு குறுகிய காலத்துக்கு பங்குச் சந்தையில் வீழ்ச்சியை உண்டாக்கினாலும், இப்போது திடமான நிலையில் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மன்மோகன் சிங் அரசு அந்நிய நாட்டு முதலீட்டின் அளவை தொலைத்தொடர்புத் துறை, விமானப் போக்குவரத்து, வங்கிகள் போன்ற துறைகளில் அதிகரித்திருப்பதால் பல வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பார்வை நம்நாட்டை நோக்கித் திரும்பி உள்ளது.

அதோடு, பங்குச் சந்தையை ஊக்குவிக்கும் வகையில் மிக முக்கியமான ஒரு முடிவை கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவித்தார் நமது நிதி அமைச்சர் ப. சிதம்பரம். பங்குச் சந்தையில் நீங்கள் செய்யும் நீண்டகால (ஓராண்டு காலத்துக்கு மேலாக) முதலீட்டின் மீது வரும் லாபத்துக்கு வருமான வரியிலிருந்து பூரண விலக்கு அளிக்கப் பட்டுள்ளது!

மேலும், ஒரு வருடத்துக்குள் வாங்கி விற்கும் பங்குகள் மீது வரும் குறுகிய கால லாபத்துக்கு பத்து சதவிகித வருமான வரி கட்டினால் போதும். பங்கு ஆதாயத் தொகை என்று சொல்லப்படும் டிவிடெண்ட் மீதும் வருமான வரி இல்லாத சூழ்நிலையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு யாருக்கும் தயக்கம் தேவையில்லை.

உதாரணத்துக்கு, ஒரு நல்ல நிறுவனத்தின் பங்கு ஒன்றை நூறு ரூபாய்க்கு வாங்கி ஓராண்டு காலத்துக்கு வைத்திருப்பதாக எண்ணிக் கொள்வோம். இந்தக் காலத்தில் பங்கு ஒன்றுக்கு டிவிடெண்டாக ஐந்து ரூபாய் கிடைப்பதாகவும் வைத்துக் கொள்வோம். பின்னர் இந்தப் பங்கை 120 ரூபாய்க்கு விற்றால் நமக்குக் கிடைக்கும் நீண்ட கால லாபம் இருபது ரூபாய். ஆக மொத்த வருவாய் இருபத்தி ஐந்து ரூபாய். இந்த ஓராண்டில் நமது முதலீடு இருபத்தைந்து சதவிகித லாபம் தந்திருப்பதோடு வருமானத்துக்கு வரியும் கிடையாது. வேறு எந்த முதலீடுகளிலும் எட்டு அல்லது ஒன்பது சதவிகிதத்துக்கு மேல் வரியில்லா வருமானம் கிடைப்பதில்லை. இதைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போதுதான் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் உங்களுக்குப் புரியும்.

சரி, பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எப்படி?

இன்று வெறும் ஐந்நூறு ரூபாயை வைத்துக் கொண்டு ஹிந்துஸ்தான் லீவர் போன்ற பிரபல கம்பெனிகளின் பங்குகளை நாம் வாங்க முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

1) பாங்க் (Bank) அக்கௌண்ட் :

நம் எல்லோருக்கும் வங்கிக் கணக்கு இருக்கிறது. அதனால் இது குறித்து விரிவாக சொல்லத் தேவையில்லை. பங்குகளை வாங்கவும் விற்கவும் தேவைப்படும் பணத்தை ரொக்கமாகக் கொடுக்காமல் வங்கிக் காசோலை மூலமாக கையாளுவதே சிறந்தது.

2) டீமாட் (DMAT) அக்கௌண்ட்:

முன்பெல்லாம் பங்குகளை வாங்கும்போது, நமக்கு உயர்ரக காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட ஷேர் சர்டிஃபிகேட்Õகளைக் கொடுப்பார்கள். இதில் போலிகள் ஊடுருவி, பலருக்கும் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியதால், அப்படிப்பட்ட ஒரு நிலையைத் தவிர்ப்பதற்காக மாற்று ஏற்பாடுகளை செய்து விட்டார்கள். நீங்கள் வாங்கும் பங்குகளை இதற்கென உங்கள் பெயரில் ஏற்படுத்தப்படும் ஒரு கணக்கில் வரவு வைத்துவிடுவார்கள். Ôசர்டிஃபிகேட்Õ தருவதில்லை. இதற்காக ஏற்படுத்தப்படும் கணக்குக்குப் பெயர்தான் டீமாட் அக்கௌண்ட். பங்குகளை விற்கும்போது இந்த கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும். ரொக்கத்துக்குப் பதில் வங்கிக் காசோலையை பயன்படுத்துவது போலதான் இதுவும். முன்பைவிட இது மிகவும் பாதுகாப்பானது.

3) டிரேடிங் (Trading) அக்கௌண்ட் :

வங்கிக் கணக்கு ரெடி. டீமாட் கணக்கும் ரெடி. இனி உங்கள் வேலை, நல்ல பங்குத் தரகர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதுதான். அதன்பிறகு, பங்குகளை வாங்கவும் விற்கவும் அவரிடம் ஒரு கணக்கைத் துவக்க வேண்டும். இது சிரமமான வேலையில்லை. உங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உங்களுடைய கையெழுத்து, வீட்டு முகவரி மற்றும் அடையாளத்தை நிரூபிப்பதற்காக டிரைவிங் லைசென்ஸ் அல்லது ரேஷன் அட்டையின் நகல் இருந்தால் போதும். அடுத்து நீங்கள் வாங்க நினைக்கும் பங்கின் மதிப்பில் பத்து சதவிகிதத்தை முன்பணமாகக் கட்டவேண்டும். மீதியை பங்குகள் வாங்கியவுடன் கொடுக்கலாம்.

பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மேற்சொன்னவைகளே போதுமானது. ஆனால், தினசரி பங்குச் சந்தையில் ஈடுபட நினைத்தால் இவை போதாது. பின் வருவனவும் தேவை:

4) பான் (PAN) நம்பர் :

ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் பங்கு வாங்கவோ விற்கவோ செய்தால் வருமான வரித்துறையினரால் வழங்கப்படும் Ôபான்Õ நம்பர் நிச்சயம் தேவை. இது இல்லாதவர்கள் தங்கள் ஆடிட்டர் மூலமாகவோ அல்லது யூ.டி.ஐ வங்கியின் குறிப்பிட்ட கிளை மூலமாகவோ அறுபது ரூபாய் செலுத்தி, இதற்கென உள்ள படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். சில நாட்களிலேயே Ôபான் நம்பர்Õ (கார்டு) உங்கள் வீடு தேடி வரும்.

5) மாபின் (MAPIN) நம்பர் :

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அடையாள அட்டை, ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் பங்கு வர்த்தகம் செய்பவர்களுக்கு அவசியம் தேவை. சொத்து விவரம், கைரேகை உட்பட பங்கு வர்த்தகத்தில் ஈடுபட விரும்புபவரின் விவரங்கள் அனைத்தும் இதில் பதிவு செய்துகொள்கிறார்கள். இதனால் பாதுகாப்பான பங்கு வர்த்தகம் நடைபெற வழி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், ‘இன்டகிரேட்டட் எண்டர்பிரைசஸ்’ என்ற நிறுவனம் Ôமாபின் கார்டுÕகளை வழங்கும் உரிமையை பெற்றுள்ளது.

இளைஞர்களுக்கும் அதிக வருமான வரி செலுத்துபவர்களுக்கும் மட்டுமல்ல; நடுத்தர மக்களும் ஆர்வத்துடன் ஈடுபடும் அளவுக்கு இன்று பங்குச்சந்தை எளிதாகியுள்ளது. பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் வரித் தொல்லை எனத் தயங்கியவர்களும் இனி தைரியமாக முதலீடு செய்யலாம்.

என்ன..? நீங்களும் கிளம்பிட்டீங்களா பங்கு சந்தையில் முதலீடு செய்ய!

நன்றி: ஜீனியர் விகடன் , நண்பர்கள் சுரதா மற்றும் பங்குச்சந்தை சசி

4வது ஆசிய இளம் கண்டுபிடிப்பாளர்கள் விருது

HP நிறுவனமும்,
Far Eastern Economic Reviewயும் இணைந்து அளிக்கும் 4-வது இளம் கண்டுபிடிப்பாளர்கள் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாணவருக்கு முதல் பரிசான தங்கமடல் கிடைத்துள்ளது. வெண்கல மடலை பகிர்ந்து கொள்ளும் இருவர் - சிங்கையின் நீ ஆன் பலதுறைக் கல்லூரியை சார்ந்தவர்கள். இரண்டாவது பரிசான வெள்ளி மடல் - சீனாவில் உள்ள பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாணவர் ஒருவருக்கு கிடைத்துள்ளது.

இறுதிச் சுற்றுக்குத் தேர்வுபெற்றவர்களின் எண்ணிக்கை 12, அதில் ஐவர் சிங்கப்பூரைச் சார்ந்தவர்கள். மற்றவர்கள் ஆஸ்திரேலியா, ஹாங்காங், இந்தியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா மற்றும் தைவானைச் சார்ந்தவர்கள்.

சீனாவின் ஜின்ஹுவா நாளெட்டிலிருந்து மேலும் ஒரு கொசுறு தகவல்... அதாகப்பட்டது, விருது கிடைத்த அனைவரும் சீனாவைச் சார்ந்தவர்கள் அல்லது குடிபெயர்ந்தவர்கள் போலிருக்கிறது.

Wednesday, January 26, 2005

Stem Cells - உயிரணு மருத்துவம்...

சன் டி.வியின் சபாஷ் பேட்டிகள் என்று நண்பர் அருண் ஒரு பதிவிட்டிருந்தார். முதலில் ஷாகுல் அமீது பெயர் பார்த்தவுடன் கடந்த சனிக்கிழமை மதியம் வந்த நலந்தானா பற்றிதான் எழுதியிருக்கிறாரோ, முந்திக்கொண்டாரே என்று நினைத்தேன்...

ஆம், ரொம்ப காலத்துக்குப்பிறகு சனிக்கிழமை வீட்டிலிருந்து காலையிலிருந்து (மகள் கார்ட்டூன் நெட்வொர்க்கிலிருந்து கண்விலகியபோதெல்லாம்) சன் டிவி பார்த்திருந்தேன் - அதில் வாய்த்தது சென்ற வார நலந்தானா-வும்.

வழக்கத்திற்கு மாறாக ஷாகுலுடன், 4 மருத்துவர்கள் (ஒருவர் ஆங்கிலம் மட்டுமே பேசும் வெளிநாட்டினர்) அமர்ந்திருந்தனர். எடுத்துக்கொண்ட தலைப்பு ஸ்டெம் செல் (Stem Cells - உயிரணுக்கள்) பற்றியது.

முதல் மருத்துவர் (அந்தப் பெண்மணி Hematologist என்று நினைக்கிறேன). அவர் எளிமையாக, அருமையாக உயிரணு மருத்துவம் பற்றியும், அது தற்போது மருத்துவத்துறையில் வகிக்கும் பங்கு பற்றியும் எடுத்துரைத்தார். Thalassemia, Leukemia(இரத்தப் புற்றுநோய்), Anemia (இரத்தசோகை) போன்ற இரத்தசம்பந்தமான அகோரவியாதிகளுக்கு மட்டுமல்லாமல், இருதய, சிறுநீரக, நரம்பியல் போன்ற பல வியாதிகளுக்கும் உயிரணு மருத்துவம், ஒரு தீர்வாக அமைவதாக எடுத்துரைத்தார்.

மற்ற மூன்று மருத்துவர்களுமே Dermatalogist(தோல் வியாதி மருத்துவர்), Plastic Surgens (ஒடடி/வெட்டியல் நிபுணர்கள்:) என்பதால் உயிரணுக்களை Aging பிரச்னைக்கு எப்படி பயன்படுத்தலாம், முக சுருக்கத்தை தள்ளிப்போடுவது போன்றவற்றை எடுத்துச் சொன்னார்கள். அதுபோக, அதில் ஒரு மருத்துவர் சொன்னார் "நாங்கள் உயிரணு என்றொன்று பற்றி தெரியாமலேயே பல வருடங்களாக தொடையிலிருந்தோ, வேறுபகுதியிலிருந்தோ சதையை வெட்டி கன்னக்குழிகள், மற்றப் பகுதிகளை அடைத்தபிறகு - முகம் வழக்கத்துக்கும் மாறாக மிக விரைவில், அதிக பொலிவுடன் திகழ்ந்தது. சமீபத்திய ஆராய்ச்சிதான் சொல்கிறது, அதற்கு காரணம் அதிலுள்ள உயிரணுக்கள்தான்..." என்று.

மற்றப்படி உயிரணுக்கள் அதிகம் இருப்பதாக சமீபத்தில் கண்டுபிடித்துள்ள தொப்புள்கொடி இரத்தம் (Cord Blood Bank) சேமிப்பைப் பற்றியும் பேசினார்கள். இது பரவலாக்கப்படவேண்டும். தற்போது சேமிக்க ஆகும் செலவு சற்றே அதிகம் - ஆனால் அதன்
பலன் அளவிட இயலாதது. இது பற்றிய மேல் விபரத்திற்கு : சிங்கப்பூரில் உள்ள கார்ட்லைஃப் மற்றும் இதனால் பயனடைந்த விபரங்களுக்கு...

அந்த மருத்துவரே கூறியபடி இந்தியாவிலும் பல இடங்களில் இந்த வசதி இருக்கிறது. இப்படி சேமித்து வைப்பதனால், அந்த குழந்தைக்கு மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பத்தினருக்கோ, தாத்தா, பாட்டிக்கு வரும் இருதய, சிறுநீரக, இரத்த சம்பந்தப்பட்ட உயிர்க்கொல்லி நோய்களுக்கு (HLA ஒத்துவரும் பட்சத்தில்) பயன்படுத்த இயலும்.

இது எல்லாவற்றுக்கும் மேலாக, சொந்தத்தில் திருமணம் செய்துகொண்டவர்கள், தற்போது தாய்மை அடைந்துள்ளவர்கள், அடைய இருப்பவர்கள், திருமண ஏற்பாட்டில் இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த இரத்தம் சம்பந்தப்பட்ட மேல்விவரங்கள் தெரிந்துகொள்வது சாலச்சிறந்தது.

பி.கு:
இந்தப் பதிவு தொடர்பான மேல் விபரம், இந்த எச்சரிக்கையின் நோக்கம், அவசியம் அறிய விழைவோர் என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

Tuesday, January 25, 2005

செம்மொழி

தடுக்கி விழுந்தால்
மட்டும் அ...ஆ...
சிரிக்கும்போது
மட்டும் இ..ஈ..
சூடு பட்டால்
மட்டும் உ...ஊ..
அதட்டும்போது
மட்டும் எ..ஏ...
ஐயத்தின்போது
மட்டும் ஐ....
ஆச்சரியத்தின்போது
மட்டும் ஒ...ஓ...
வக்கணையின் போது
மட்டும் ஒள
விக்கலின்போது
மட்டும் .....
என்று தமிழ் பேசி
மற்ற நேரம்
வேற்று மொழி பேசும்
தமிழரிடம்
மறக்காமல் சொல்
உன் மொழி
செம்மொழியென்று

- தமிழ் பயணி(யிலிருந்து), தகவல். Raju M. Rajendran - தமிழ் ஆராய்ச்சி யாஹீ குழுமம்.