வணக்கம்.
"ஔ" என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் ஏதாவது ஒரு (திரைப்படப்)பாடல் உங்களுக்குத் தெரியுமா!?
அல்லது அப்படி ஒரு பாடலே இல்லையா!?
அதோடு "ஃ"ல் ஏதாவது பாடல் சொன்னால்கூட இன்னும் வசதி.
அது சரி... ஏன் இப்படி ஒரு ஆராய்ச்சி என்று யாராவது கேட்பவர்களுக்கு:
இங்கு சிங்கையின் ஒலி 96.8 பண்பலையை வானொலியிலும், இணையம் மூலமாகவும் பலரும் கேட்டிருப்பீர்கள். காலைநேர நிகழ்ச்சி படைப்பாளர் கீதா தன்னுடைய ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியையும் அவருக்கேயுரிய தனித்தன்மையுடன், கலகலப்பாக, சுறுசுறுப்பாக, நேயர்களும் கலந்துகொள்ளும் வகையில் ஒவ்வொருநாளும் ஏதாவது ஒரு புதிய சிறப்புடன் படைப்பார்.
அதுபோன்று இனறைய நிகழ்ச்சியில் உயிரெழுத்துக்களில் ஆரம்பிக்கும் பாடல்களை வரிசையாக ஒலிபரப்பினார். ஆனால் "ஔ" என்ற எழுத்துக்கே பாடலே கிடைக்கவில்லை. நேயர்களுக்கும் பெரும்பாலும் தெரியவில்லை - சிலர் அதே ஒலி கொண்ட
'ஹவ் ஆர் யூ'... போன்ற பாடல்களை அனுப்பியிருந்தனர். இறுதியில் அவர், கூலி படத்திலிருந்து 'அவ்வோரா...' (அல்லது அது போன்ற - கையில் குறித்து வைத்திருந்ததைமதியம் கை கழுவிவிட்டேன்:) என்றொரு பாடலை ஒலிபரப்பினார்.
சரி இப்ப மீண்டும் கேள்வி:
"ஔ" என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் ஏதாவது ஒரு (திரைப்படப்)பாடல் உங்களுக்குத் தெரியுமா!?
அல்லது அப்படி ஒரு பாடலே இல்லையா!?
அதோடு "ஃ"ல் ஏதாவது பாடல் சொன்னால்கூட இன்னும் வசதி.
16 comments:
எனக்குத்தெரிந்த 'ஔ'எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களே:
ஔவையார்
ஔடதம் (அப்படின்னா என்ன!?)
ஔகாரம்
ஔளோதான்:)
அட நீங்கள் வேற.
ஒளவையாரயே 'அவ்வை' எண்டு எழுதத் தொடங்கீட்டாங்கள். இதுக்க சில மேதாவிகள் 'ஒள' தேவயில்லாத எழுத்து அதை நெடுங்கணக்கிலயிருந்து நீக்கிவிடலாம் எண்டும் சொல்லிறாங்கள்.
ஒளவையை வச்சுப் பாட்டெழுதினாலும் அவ்வை எண்தான் எழுதுவினம்.
ஆத்திச்சூடியில் "ஔவியம் பேசேல்" என்று ஒரு வரி உள்ளது.
(பொருள் - வஞ்சனையான சொற்களைப்பேசக்கூடாது)
ஒளடதம் என்றால் ஆங்கிலத்தில்... Yatch
//ஒளடதம் என்றால் ஆங்கிலத்தில்... yatch //
அப்படி என்றால் ஃ என்றால் Z தானே?:-))
oudatham - marunthu
OWL pondra kangalnu yaarathum paatu ezudhinadhan undu
பின்னூட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
ஔடதம் (அப்படின்னா என்ன!?)
பாய்மரம்/படகு அல்லது மருந்து!?
இது தெரிந்தால், நானே ஒரு பாடல் எழுதிவிடலாம் என்று இருக்கிறேன்:)
(சினிமாவில் யாரும் எடுத்துக்காட்டி, 'ஆல்பம்' வெளியிட்டடாலாம்!)
பாலராஜன்கீதா,
ரொம்ப நாளைக்குப்பிறகு இந்தப்பக்கம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
உயிரெழுத்து/அன்புடன் பக்கம் வர இன்னும் நேரம் வாய்க்கவில்லையா!?
ஒளவை சன்முகி,
எண்ணாண்ணா நம்ம கமலாண்ணாச்சிய மறந்திட்டிங்க,
பல்லவி:
ஒளவை சன்முகி
டொய்ங், டொடொய்ங் (மியூசிக்)
...
..
அத்தனைக்கும் மேல எப்பவும் தான் வேலை,
சன்முகா, ஒளவை சன்முகி,
அன்புடன்,
சோலை
கலக்கிட்டீங்க....
அந்தப் பாடலே
"ஔவை சண்முகி...."ன்னுதான் ஆரம்பிக்கும் இல்ல.
பாராட்டுக்கள். கீதா-ட்ட சொல்லி உங்க பெயரைச்சொல்லி அந்தப்பாடலை ஒலியேற்றச்சொல்லிடலாம். நன்றி.
கலக்கிட்டீங்க சோலை
அன்பான ரசிகப்பெருமக்களே,
இந்த எழுத்துலே பாடல் இருக்கிறதா இல்லையா என்பதிலே எனக்கு ஆர்வம் இல்லாத காரணத்தால் (எனக்கு தெரியவில்லை என்று எதிர்க்கட்சிக்காரர்கள் சொல்வார்கள்; சொல்லட்டும்!) ஒன்றே ஒன்றை மட்டும் இந்தப்பொன்னான நேரத்தில் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
கீதா என்ற இந்த படைப்பாளரின் 'அன்பான' ரசிக நேயர்களில் நானும் ஒருவன் என்பதை இங்கே சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். :-)
எம்.கே.
பாராட்டுக்கு நன்றி,
இந்த சீனனுங்க, நம்ம சினிமாவை, மரம் சுற்றி சுற்றி பாடரதை தவிர ஒன்னுமில்லேன்னு சொன்னாங்களா, நானும் விடல,
ஐயா, உங்களை மாதிரி மரத்துக்கு மேல 'டொய்ங்' னு சத்தம் போட்டு பறக்குற சக்தியெல்லாம், எங்க கதாநாயகர்களுக்கோ, குறிப்பா
கதா நாயகிகளுக்கு இல்லை, எங்களால் முடிந்தது மரத்தை சுத்தரது மட்டும் தான்னு பதில் சொல்ல, சீனன் அசடுவழியரத அன்னைக்குதான் பார்த்தேன்.
அன்புடன்,
சோலை
உங்க தமிழ் யுனிகோட் பதிவ blogger தின்னுடிச்சி போல. லிங்க் குடுக்க முடியல :(
http://pari.kirukkalgal.com
இதேபோல், ச வரிசையில்...
சௌக்கியமா கண்ணே சவுக்கியமா:)
தவிர வேறேதும் பாடல் தெரியுமா!?
Post a Comment