Saturday, October 15, 2005

புதிய தமிழ் யுனிக்கோடு - தமிழக அரசு அறிவிப்பு

புதிய தமிழ் யுனிக்கோடு பற்றிய உங்கள் கருத்தை தமிழக அரசுக்கு சொல்ல..
என்ற இந்தப்பதிவின் முதல் பதிப்பை ப்ளாக்கர் பகவான் ஸ்வாகா செய்துவிட்டதால், மீண்டும் இங்கே...
(தலைப்பு நீளமாக வைக்கும்போதே நினைத்தேன். கபளீகரம் செய்த தகவல் தந்த பரி-க்கு நன்றி!)

வணக்கம்.

தமிழக அரசு புதிய தமிழ் யுனிக்கோடு பற்றிய நமது கருத்துக்களை வரவேற்கிறது. இது பற்றிய அறிவிப்பு இங்கு வெளியாகியிருக்கிறது.
http://www.tunerfc.tn.gov.in/

உங்கள் கருத்துக்களை comments-tune@tamilvu.org என்ற மின்னஞ்சல் மூலமாகவோ
http://www.tamilvu.org/slet/tune_comments/html/tufeedbk.htm என்ற இணையப்பக்கம் மூலமாகவோ தெரியப்படுத்தலாம்.

அதனால், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து யுனிக்கோடை அதிகாரபூர்வ எழுத்துமுறையக்க முயற்சிசெய்வோம். அரசு சட்டத்தின் மூலம் தமிழ் ஊடகங்களையும் யுனிக்கோடுக்கு மாற்ற கோரிக்கை வைப்போம்.

மேலும், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களுக்கான (ITES) புதிய கொள்கைகளும் (2005) வெளியிடப்பட்டிருக்கிறது.

4 comments:

மு. மயூரன் said...

அன்பு,

தகவலுக்கு நன்றி.
பின்னூட்டங்களை எதிர்பார்க்க வேண்டாம் ;-))

புதிய யுனிகோட் குறிமுறையை சோதித்துப்பார்த்தேன். நன்றாக இருக்கிறது.
முக்கியமாக அபிவேர்ட் இல் தமிழ் யுனிக்கொட் பார்த்து மகிழ்ந்தேன். கைகால் பிய்ந்து பிய்ந்து தெரியும் பிரச்சனை இல்லை.

ஆனாலும், புதிய குறிமுறை ஒன்று தேவைதானா என்ற விவாதத்திலும் நாம் கவனம் செலுத்தவேண்டும்.

காலப்போக்கில் இப்படியான மாற்றத்துக்கு போய் சண்டைபிடித்துக்கொண்டு நின்றோமே என்று ஏதாவதொரு தரப்பு கவலைப்படும்.

இதுபற்றி ஏற்கனவே ஏதோ பதிவோ பின்னூட்டமோ வழங்கியதாக நினைவு.

இதுபற்றிய விக்கிபீடியா கட்டுரை ஒன்றை உருவாக்கியுளேன்.
போய் பாருங்கள் பங்களிப்பு தாருங்கள்.

(ஐயோ விக்கிபீடியாவின் மொத்த பக்கங்களையும் புது குறிமுறைக்கு மாற்றுவதுபற்றி ஒருகணம் சிந்தித்துபாருங்கள்....)

அன்பு said...

அன்புக்குரிய மயூரன்,

எதிர்பார்க்காமல் கிடைத்த பின்னூட்டத்துக்கு நன்றி:)

நான் ஏதோ கண்ணில்கண்டதை இங்கு இட்டுவிட்டேனோ தவிர எனக்கும் உண்மையாக பழைய/புதிய யுனிக்கோடுக்குரிய வேறுபாடு நீங்கள் விக்கியில் எழுதியிருப்பதை வாசித்தபின்புதான் அடிப்படையாவது புரிந்தது, மிக்க நன்றி.

இப்போதுமட்டும், எல்லா எழுத்துக்களுக்கும் இடஒதுக்கீடு எப்படி கிடைத்தது!? அல்லது இதில் மாறுபட்ட தொழில்நுட்பம் அல்லது யுனிக்கோடு அமைப்பை விட்டு - அரசே மாற்று எதாவது பரிந்துரைக்கிறதா? போன்ற அடிப்படைக்கேள்விகள் இன்னும் நிறைய உண்டு.

விக்கியில் கலந்துகொள்ளவேண்டும் அவ்வப்போது நினைத்தாலும், பலவற்றையும்போல நினைப்பிலேயே இதுவும் ஓடுகிறது. என்னாலியன்ற பங்களிப்பை தர முயற்சிக்கிறேன்!

மேலும் விக்கியில் நீங்கள் கொடுத்துள்ள சுட்டி அந்த இறுதியில் உள்ள ஒரு கூறியீடால் சரியாக சென்றடைய உதவவில்லை,
http://www.tunerfc.tn.gov.in/|
நேரம் கிடைக்கும்போது மாற்றிவிடுங்கள், நன்றி.

மு. மயூரன் said...

விக்கியில் அந்தமாற்றத்தை நீங்களே செய்திருப்பது கண்டு மகிழ்ந்தேன்.. நன்றி.

இப்போது யுனிகோட் ஒருங்கமையம் இட ஒதுக்கீட்டை செய்து தரவில்லை, சிறப்பு குறியீடுகளுக்கான இடத்தை தற்காலிகமாக பயன்படுத்த அனுமதித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

புதிய குறிமுறையை அவர்கள் ஏற்றுக்கொள்வது அவ்வளவு சாத்தியமில்லை போலும் உணர்கிறேன்.

இப்படி ஒரு மாற்றத்தின் தேவை புரிகிறது ஆனால் காலம் பிந்திவிட்டதோ என பயமக இருக்கு.

சிங்கள நண்பர்கள் இது பற்றி இப்பவே கவனமெடுக்கமுடியும். அவர்களுக்காவது இந்த செய்தி பயன்படட்டும்.

யுனிகோடில் ஒன்றிரண்டு வலைப்பக்கங்களை மட்டும் கொண்டிருக்கும் ஆரம்பநிலை மொழியான அது சிக்கல்களை பெரிதாக எதிர்கொள்ளாது.

Kasi Arumugam said...

அன்பு,

தகவலுக்கு நன்றி. முழுதாகப் படித்துப் புரிந்துகொள்ளவேண்டும். பிறகு தோன்றுவதைப் பகிர்ந்துகொள்கிறேன்.

மயூரன்,
விக்கிப்பீடியாவில் இதை ஏற்றியதற்கு நன்றி.