Sunday, November 20, 2005
வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் பிரகாஷ்...
இந்த வார ஆ.வி, நாணயம் விகடன் பகுதியிலிருந்து...
தகவல் விற்று என்ன பெரிதாக சம்பாத்தித்து விட முடியும்? பிரகாஷைச் சந்திக்கிற வரை நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். நம்மூரிலும் குட்டி குட்டி பில் கேட்ஸ்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது அப்போதுதான் புரிந்தது. கோயம்பேடு பகுதியில் இருக்கிற பி.எஸ்.சி படித்த பிரகாஷ், (044-24781452) ‘என் வழி... தகவல் வழி’ என்று சூப்பர் சம்பாத்தியம் பார்க்கிறார்.
தினசரி பேப்பர் படித்ததும் என்ன ஆகிறது. மாதக் கடைசி எடைக்குத் தயாராகிறது. ஆனால், பிரகாஷ§க்கோ பேப்பர் என்பது தினசரி காலை எழுந்ததும் வீட்டுக்குள் வரும் களஞ்சியம். அதுதான் அவருக்குக் காசு! பேப்பர்கள் மட்டுமல்ல, இணையம், பிரபல நிறுவனங்களின் வருடாந்திர நிதி அறிக்கைகளைச் சேகரிப்பார்.
அவர் செய்வது, தகவல் சேகரிப்பதும் அதை, வகை வகையாகப் பிரிப்பதும். இந்தியாவில் எங்கே யார் என்ன தொழில் ஆரம்பிக்கிறார்கள்... அவர் களின் தொழில்நுட்பம் என்ன... தேவைப்படும் மூலப்பொருள் என்ன? என்பதுபோன்ற எல்லாத் தகவல் களையும் திரட்டுவார்.
உதாரணமாக, ஒரு டூவீலர் நிறுவனம் இவரை அணுகினால், யார், யார் எப்போது, என்ன வகையான வண்டிகள் தயாரித்தார்கள்? என்பதில் ஆரம்பித்து, அரசாங்க திட்டங்கள், ரோடுகளின் வளர்ச்சி, போட்டியாளர்களின் செயல் பாடுகள், உலக மார்க்கெட்டில் உள்ள தேவை, உதிரி பாகத் தயாரிப்பாளர் களின் ஜாதகம்... போன்ற செய்தித் தகவல்களை புள்ளி விவரங்களோடு தொகுத்து, ஒரு ஃபைலாகத் தரும் அளவுக்கு கையில் விவரங்கள் வைத்திருக்கிறார்.
இவரிடம் தகவல் பெறுபவர்களில் சிலர்... (மத்திய அரசின்)பெல், ஆல்ஸ்தாம், கிர்லோஸ்க்கர், கோத்ரெஜ், எஸ்கார்ட்ஸ், டாடா எனர்ஜி இன்ஸ்டிடியூட், ஜெர்மன் நாட்டின் சீமென்ஸ். இப்படி 1,700 நிறுவனங்கள்!
1999ல் ஒரு டேட்டா பேஸ் நிறுவனத்தில் வேலை செய்த பிரகாஷ் தைரியமாக, தானே தனியாகக் களமிறங்கி விட்டார். இந்தியாவில் இப்படிபட்ட நிறுவனங்கள் மொத்தம் ஏழு. அதில் ஐந்து மும்பையில். ஒன்று டெல்லியில். மீதமிருக்கிற ஒன்று & பிரகாஷ் நடத்துவது!
அவ்வளவு பெரிய நிறுவனங்கள், பிரகாஷ் மாதிரி நபர்களை ஏன் நாட வேண்டும்? அவர்களுக்கு வேறு வேலைகள் இருக்கின்றன. சம்பளத்துக்கு ஆள் வைத்து, அவரை முடுக்கி விட்டுக்கொண்டு இருப்பதைவிட, காண்ட் ராக்ட் முறையில் இப்படி தகவல் வாங்குவது குறைந்த செலவுதானே!
பிரகாஷைப் பொறுத்தவரை, ஒருவருக்காக மட்டும் செய்தால், அது எனர்ஜி வேஸ்ட்! பத்து, நூறு என்று க்ளையண்ட்கள் பெருகப் பெருக அவருக்கு காசு கொட்டும். அதுதான், ECONOMY OF SCALE! பார்த்தீர்களா, மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து எல்லாவற்றுக்கும் ஒரு சந்தை வந்து விட்டது. தகவலுக்கு உள்பட.
பிரகாஷ் போலவே நீங்களும் முயன்று பார்க்கலாம். உங்களுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. எந்த மாதிரி நிறுவனங்கள், எங்கே தொழில் தொடங்கப் போகின்றன என்பதை முன்கூட்டித் தெரிந்துகொண்டு, ஆட்களின் திறமை பற்றிய தகவல்களையும் இணைத்தால், வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருபவராக இருவழி சம்பாத்தியம் பார்க்க முடியும். முந்துகிற பறவைக்குத்தான் இரை கிடைக்கும்.
‘மாநில முதல்வர், இன்று பஸ் நிலைய அடிக்கல் நாட்டப் போகிறார்’ என்று பேப்பர் செய்தி படிக்கிறீர்கள். ‘இன்று, அங்கே டிராஃபிக் அதிகமாக இருக்கும். மாற்றுப் பாதை தேடிவைத்துக் கொள்வது நல்லது!’ என்று உஷார் பார்ட்டிகளாக ஒதுங்காமல், ‘அங்கே கிரவுண்ட் என்ன விலை?’ என்று விசாரிப்பது, ‘பஸ் ஸ்டாண்டை ஒட்டிய வியா பாரங்களில் எது சூப்பர் லாபம்?’, ‘அங்கே என்னென்ன காண்ட்ராக்ட்கள் எடுக்க முடியும்?’ என்றெல்லாம் யோசிக்க ஆரம்பியுங்கள். பணம் உங்கள் பர்ஸைத் தேடிவரும். இந்தத் தகவல்களை, நாமேதான் பயன்படுத்த வேண்டும் என்பதுகூட இல்லை. இத்தகவல்களை யாரிடம், எப்படிக் காசாக்கலாம் என்று திட்டமிட்டால், சரியான லாபம் பார்க்க முடியுமே!
பஸ் ஸ்டாண்ட் என்றுதான் இல்லை. கோயில் கும்பாபிஷேகமாகட்டும்... புதிய கல்லூரியின் வரவாகட்டும். எல்லாவற்றிலும் உங்களுக்கான வாய்ப்பும் வருமானமும் இருக்கத்தான் இருக்கின்றன. இன்னும் எவ்வளவோ தேவைகள்! கொடுப்பதற்கு ஆளிருந்தால், வாரி எடுத்துக் கொள்ள எத்தனையோ பேர் தயாராக இருக்கிறார்கள்.
இதையே உங்கள் திறமைக்கான சவாலாக எடுத்துக்கொண்டு, யார் எதைத் தேடுகிறார்கள் என்று பாருங்கள்.
மிகப் பெரிய வியாபார வெற்றிக்கு, மூளையைவிட, ‘யாருக்கு எது தேவை... எது விலை போகும்?’ என்பதைச் சரியாக கணியுங்கள்... அதை, நேரத்தோடு செய்யுங்கள். அப்படி ஒரு திறன்தான் இந்த வேகம் நிறைந்த தகவல் காலத்தில் உங்களை செல்வபுரிக்கு அழைத்துச் செல்லும்.
வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் நண்பரே...
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
குப்பையில் மாணிக்கம். :)
வாழ்த்துக்கள் பிரகாஷ். உங்களை என் நண்பன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை படுகிறேன். இந்த வரிகளை வாழ்க்கையில்
முதன் முறையாய் பயன்படுத்துகிறேன் :-)
அன்பு செய்தியை முந்தி தந்ததில் உங்களுக்கும் நன்றி
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பிரகாஷ், வலை பதிந்த அன்புவிற்கு நன்றி
வாழ்த்து பிரகாஷ். வலைப்பதிவுகள் குறித்தும் தகவல்கள் சேகரித்து வைத்திருக்கின்றீர்களா பிரகாஷ் :-) ?
...
அன்பு, தகவலைப் பதிந்தமைக்கு நன்றி.
வாழ்த்துக்கள் பிரகாஷ்!
தகவலுக்கு நன்றி அன்பு!
Prakash, you the man! Congratulations, and good wishes!
Anbu, thanks for the heads-up!
சூப்பர் நியூஸ்... சூப்பர் போஸ்!
ஹை..நம்ம வலைப்பதிவு வட்டத்துலே இவ்வளவு பிரபலங்களா?? வாழ்த்துகள் ப்ரகாஷ்..நல்ல செய்தியை பகிர்ந்துகிட்டீங்க அன்பு!
நண்பர் பிரகாசிற்கு என் வாழ்த்துக்கள். வளம் சிறக்கட்டும்.
அன்புடன்,
இராம.கி.
மனமார்ந்த வாழ்த்துகள் பிரகாஷ்
நன்றி அன்பு
வாழ்த்துக்கள் பிரகாஷ்!!!
// சூப்பர் நியூஸ்... சூப்பர் போஸ்!//
அதே!
அன்பு, நன்றி.
நண்பர் பிரகாசிற்கு என் அன்பும் வாழ்த்துக்களும்.
அட! நம்ம பிரகாஷ்!!
வாழ்த்துகள் பிரகாஷ்.
-மதி
இந்த வேலையைச் செய்யத் துவங்கி ஆறு வருஷம் முடியப் போகிற நிலையிலே, ஒட்டு மொத்தமா இத்தனை பேர் கிட்டேந்து ( மின்னஞ்சல் மூலமாக வாழ்த்துச் சொன்னவர்களையும் சேர்த்துத்தான்) ஷொட்டு வாங்கியதில்லை... ரொம்ப 'சென்ட்டி' ஆகிவிட்டேன்...i'm honoured..
பொழைக்க ஏராளமான நேர்மையான வழிகள் இருக்கிற அற்புதமான இடம் சென்னை என்று எங்க வாத்யார் அடிக்கடி சொல்லுவார்...உண்மை..
வெள்ளிக்கிழமை காலையிலேயே தொலைபேசியில் வாழ்த்துச் சொன்ன காசியில் துவங்கி, வலைப்பதிவில் எடுத்துப் போட்ட அன்பு, மின்னஞ்சல் மூலமாக வாழ்த்துச் சொன்னவர்கள், பொதுவிலே வாழ்த்துச் சொன்னவர்கள், அனைவருக்கும் நன்றி..
விகடன் வெளிச்சம் போட்டுக் காட்டியதில், தொழில்ரீதியாக எவ்வளவு அனுகூலம் இருக்கும் என்பதை இன்னும் அனுமானிக்கவில்லை எனினும் தனிப்பட்ட வகையில் ஒரு சந்தோஷம்... தொலைந்து போன இரு நண்பர்களை கண்டு பிடிக்க முடிந்தது...
மீண்டும் நன்றி... அனைவருக்கும், அனைத்துக்கும்...
இன்னும் மேன்மையடைய வாழ்த்துக்கள் பிரகாஷ்!
அட,
இவர் 'நம்ம' பிரகாஷா?
வாழ்த்துக்கள் பிரகாஷ்.
நல்லா இருங்க.
அன்பு,
செய்திகளை( அதாவது விகடன் செய்திகளை) முந்தித் தருவது 'குப்பை'ன்னு ஒரு விளம்பரம் போட்டுறலாமா?:-))
பிடியுங்கள் வாழ்த்துக்களை பிரகாஷ். உங்களைப் போன்றவர்களின் ஊண்டுதல் நம் நாட்டு இளைஞர்களுக்கு தேவை.
ஆஹா, இப்படியாக நான் உங்களைப் பற்றிய தகவலைச் சேகரித்துக்கொள்கிறேனே ;-)
வாழ்க
பிரகாஷ் தலைய பார்த்து இவரு பெருசா எதோ சிந்திச்சிருக்கார்ன்னு எதிர்பார்த்தேன்..இப்போ தான் விடை கிடைச்சது .பாராட்டுக்கள் பிரகாஷ்!நன்றி அன்பு.
நியூஸ் எழுதி பிரசுரம் ஆவதை விட, நியூஸா பிரசுரம் ஆவணுமுன்னா, அது இப்படித்தானா..??
பெரகாசராயரே..கலக்கிட்டீங்க போங்க. !!!
பிரகாஷ்,
பாராட்டுக்கள்.
அன்பு,
நன்றி. 044-24781452 is not working :-(
பாலா, என்னோட எண் , 24791452. விகடன்ல தப்பா போட்டுட்டாங்க.. typo (:
G,
Kalkkal. Ilakkiyavathi cum businessman matter varave ille...let it be.
//பொழைக்க ஏராளமான நேர்மையான வழிகள் இருக்கிற அற்புதமான இடம் சென்னை என்று எங்க வாத்யார் அடிக்கடி சொல்லுவார்...உண்மை..
intha vathiyar yarungooo.....ethanai vaathiyar irukkunnum sollidungoo..
வாழ்த்துகள் பிரகாஷ். தகவலுக்கு நன்றி அன்பு.
நிர்மலா.
பிரகாஷ் சூப்பர்...!!!!.
Post a Comment