Monday, August 02, 2004

குப்பையைப் பற்றி...

மகா சனங்களே வணக்கம்.

இதுவரை 'குப்பை'யைப்பற்றி வலைப்பூக்களில் பிரபலங்கள் பரபரப்பாக எழுதிவந்தார்கள். இந்தவாரம் முதல் குப்பையைப்பற்றி ஒரு சிறப்புத்தொடரே வெளியிட ஆனந்தவிகடன் குழுவில் அவர்களாகவே முடிவுசெய்து (சத்தியமா நான் காசு ஏதும் கொடுக்கலிங்க, மேலும் இது ஆதரவாளர் தொடரும் அல்ல...) குப்பையென்பது இது குடும்ப சமாசாரம் (பொம்பளங்க சமாசாரம்னு எழுதி, அகில உலக மாதர் சங்கம் கொடி பிடிச்சுட்டாங்கண்ணா... - தப்பிச்சேன்) என்பதால் அவள்விகடனில் தொடர் வருகிறது. பிரபல (பெண் - அப்படின்னு சொல்லலமோ அதுக்கும் எதாவது மாதரணி திட்டுவார்களோ!?) எழுத்தாளர் அனுராதா ரமணணும், புகழ்பெற்ற சினிமா, தொலைக்காட்சி பிரபலம் நளினி ராமராசர்(சரியா தெரியல...) அவர்களும் ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.

அதனால... மேல படிங்க...

1 comment:

அன்பு said...

ம்... அப்புறம் என்ன பண்றது, நீங்க எதுவும் சொல்லாட்டி நாமளே கேள்வி கேட்டு நாமளே பதில் சொல்லிக்க வேண்டியதுதான்.

உடன்பிறப்புக்கு எழுதுணா ஒரே பத்திரிக்கையில் மட்டும்தான் வரும், அதையும் எழுதிருக்கேன்னு முரசடிச்சோ, யாரையாவது விட்டு தலைப்புச்செய்திகள்ள கத்தச்சொல்லணும். அதற்குப் பதில் கேள்வி, பதில்னு அறிக்கையா அனுப்பிட்டா எல்லா தினசரியிலும் வந்துடும்ல...

கேள்வி: அதைல்லாம் இருக்கட்டும், இப்போ அதை எதுக்கு இங்க ஒளர்ற...?
பதில்: எதாவத் சொல்லவேண்டியதான்...

கேள்வி: அதுசரி. ஒங்க குப்பையைப்பத்தி யாரு, எங்க பரபரப்பா எழுதுணாங்க?
பதில்: அரசியல்ல இதெல்லாம் சகஜமப்போய்.

கேள்வி: அதாவது பரவால்ல... அவள் விகடன்ல 'குப்பைக்கு குட்பை'ன்னு எழுதியிருக்காங்க, என்னமோ அதைப்பெருசா நாலுகால செய்தியா வெளியிட்டுருக்கீங்க?
பதில்: ஒங்கள மொதல்ல தைலாபுரத்துக்கு பயிற்சிக்கு அனுப்ப ஏற்பாடு பண்ணனும்.

கேள்வி:...
பதில்: மீண்டும் சந்திப்போம் வணக்க்கம்ம்....