Wednesday, September 29, 2004

ஓவியா - கோபி

ஆம் அது ஓவியா - என்று எழுதநினைத்தத்தான் டைப்பினேன்(உள்ளிட்டேன்). ஓவியர் கோபியை, எனக்குப்பிடித்த பெயரான ஓவியா என்றுதானே கூப்பிடவேண்டும்? நண்பர் கோபியின் கற்பனை இல்லம் என்ற தனது சுயமான முதல் ஓவியத்துக்கு நான் எழுதிய பின்னூட்டம்.

என்ன கோபி நான் எதாவது சொல்லுவேன்னு அதுக்கு முன்னாடியே ஒரு லிஸ்ட்லாம் வந்திருக்கு?

உண்மையில் நம்பமுடியவில்லை... பார்த்துவரைவதற்கும், பார்க்காமல் வரைவதற்கும் இவ்வளவு வித்தியாசமிருக்குமா என்று. இதில் அதிசயமான விஷயம் என்னவென்றால்... மற்ற எல்லா பாகங்களைவிடவும் - கஷ்டமான முகம் மிக அழகாக வந்திருக்கிறது. அதிலும், அந்தப்பெண் முகம் அமர்க்களம். (தங்கம் சொல்வது சரிதானோ!?:)

இது சுயமென்றால்... உங்களுக்குள்ளே ஒரு களத்தை நினைத்து, உருவங்களை உள்ளத்தில் உள்வாங்கி ஓவியத்தில் படைத்ததா?

அல்லது

ஓவியத்தைப் பார்க்காமல், மற்ற புகைப்படங்களை மாதிரியாக வைத்து வரைந்ததா?

இது முதல்வகை என்றால் - இரண்டாவவது வகைமூலம் சிறிது முயற்சி செய்துவிட்டு, முதல்வகையை முயலலாமே!?

இங்கு இந்த நிமிடம், இந்தப் பின்னூட்டத்தை எழுதும்போதுதான் உணர்கிறேன், ஓவியம் எவ்வளவு உன்னதம் என்று. பத்து பொருளை சில நிமிடம் காட்டி பிறகு மறைத்துவிட்டு, எது எங்கிருந்தது என்று கேட்டாலே ரெண்டுக்குமேல் காட்ட சிரமப்படும் எனக்கும் - நீங்களே கற்பனைசெய்து (கதா)பாத்திரங்கள் & உண்மையான பாத்திரங்கள் (கூஜா, ஊஞ்சல் இன்ன பிற...) என்று முடிவுசெய்து - அதை ஓவியமாக்குவதென்பது எவ்வளவு பெரிய திறமை? இதை யோசிக்கும்போது இன்னும் கல்சிற்பம்? எதுவும்குறையென்றால் அழித்து/அடித்து செதுக்க முடியுமா என்ன?

எது எப்படியோ கோபி - இந்த 34 வருட வாழ்க்கையில் ஒங்களோட ஒரு ஓவியத்தின் மூலம் - ஓவியத்தின் மீதும், சிற்பங்களின் மீதும் - அதை படைக்கும் உங்களைப்போன்ற ஓவிய, சிற்பக்கலைஞர்களின் மீதே பெரிய மதிப்புக் கொண்டுவந்துவிட்டீர்கள் - என் மனதில்.

மிக மிக நன்றி. தொடர்ந்து வரையுங்கள், வாழ்த்துக்கள்.

என்றென்றும் அன்புடன்,
அன்பு

1 comment:

தகடூர் கோபி(Gopi) said...

அன்பு!

நான்கு வருடம் முன்பு அந்த ஓவியத்தை முடித்தபின் நான் அடைந்த அதிர்ச்சியில் அந்த ஓவியமே இன்றுவரை சுயகற்பனையில் வரைந்த ஒரே ஓவியமாகிப் போனது

முகங்களிரண்டும் நன்கு மனதில் பதிந்தவை. ஒன்று நான் தினமும் கண்ணாடியில் பார்ப்பது. மற்றது ஒவ்வொரு கணமும் என் மனதில் வந்து மறைவது. காட்சி நிஜமாக காத்திருக்கிறேன் (ஊஞ்சல் எல்லாம் இருக்கு. 28 வயசாகிப்போச்சி.. ஆனா அம்மணிய தான் இன்னும் காணோம்... ஹும்.. )

/இரண்டாவது வகைமூலம் சிறிது முயற்சி செய்துவிட்டு, முதல்வகையை முயலலாமே!?/

இப்பல்லாம் ரெண்டாவது வகை மட்டும் தான். முதலாவது எதுக்குங்க நமக்கும் ரிஸ்க் அடுத்தவங்களுக்கும் ரிஸ்க்

இந்த சாதாரணனின் ஓவிய(ா) முயற்சிகளை அலசுவதற்காக நீங்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தைக்கு நன்றிகள் பல.. (குறிப்பாக கோடுகளும் வளைவுகளும் ஓவியத்தில் முகவாயின் தோய்வு பற்றிய உங்களின் பின்னூட்டத்திற்கு பிறகே ரெனால்ட்ஸ் பேனா செய்த சதி எனக்கு உறைத்தது)