வீரப்பன் இறப்பால் வேறென்ன நன்மை தீமை என்று அனைத்துப் பிரபலங்களும் போதுமளவுக்கு வலை பதிஞ்சீட்டீங்க, போதலைன்னா தினமலர், குமுதம், விகடன் பக்கம் போய் பாருங்க.
என(ம)க்கு கிடைத்த நன்மை,
தமிழ்மணம் வலைவாசலின் மேலும் ஒரு மேம்பாடு: சூடான விவாதப் பொருள்
புதுசு கண்ணா புதுசு
Best கண்ணா Best
First கண்ணா First
பாலாஜி சுப்ரா ட்ராக்பேக், பிங்பேக் போன்றவைக்கு எளிய மாற்றாக இருக்கிறது என்று கூறி ஏற்கனவே நன்றி கூறியுள்ளார். (ட்ராக்பேக், பிங்பேக் - எப்படி பயன்படுத்த முடியும் என்று சொல்லுங்களேன்:)
இது manual-ஆக திரட்டப்பட்ட செய்திகளா? அல்லது programmed collection? (அதாவது முக்கியவார்த்தை(keyword - வீரப்பன்) ஒன்றை வைத்து திரட்டப்பட்டதா, இதுபோன்று தினமும் வருமா?)
நன்றி காசி(....). நவன் சொன்னதுபோல உங்களுக்கு மட்டும் நாளுக்கு 30 மணி நேரமல்ல, எங்களுக்கும்தான் - ஆனால் எதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைத்தான் உங்களைப்போன்றவர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டும்.
வாழ்த்துக்கள், தொடர்ந்து செல்லுங்கள், சிறப்பாக செய்யுங்கள்.
2 comments:
இது தானியங்கி சேவையென்பது, என்னுடைய பதிவும் சூடான விவாதப் பொருளாகியதிலிருந்து தெரிந்துவிட்டது. அப்படியானால், நாம் முக்கிய வார்த்தையை கொடுத்துவிட்டால் - பதிவுகளை திரட்டிவிடும் போலிருக்கிறது. பிரமாதம்...!
அன்பு,
பாராட்டுக்கு நன்றி.
இது பலநாளாகவே செய்யணும் என்று முடியாமல் போயிருந்தது. இப்போது இருக்கும் சூட்டில் இனியும் பொறுக்க மனசில்லை செய்துவிட்டேன். தானியங்கி என்பதால் சில குறைகள் இருக்கும். பதிவேட்டில் எழுதியிருக்கிறேன்.
இன்னும் இதில் ஒரு மேம்பாடு வரப்போகுதென்று பட்சி சொல்லுது;)
Post a Comment