Tuesday, January 25, 2005

செம்மொழி

தடுக்கி விழுந்தால்
மட்டும் அ...ஆ...
சிரிக்கும்போது
மட்டும் இ..ஈ..
சூடு பட்டால்
மட்டும் உ...ஊ..
அதட்டும்போது
மட்டும் எ..ஏ...
ஐயத்தின்போது
மட்டும் ஐ....
ஆச்சரியத்தின்போது
மட்டும் ஒ...ஓ...
வக்கணையின் போது
மட்டும் ஒள
விக்கலின்போது
மட்டும் .....
என்று தமிழ் பேசி
மற்ற நேரம்
வேற்று மொழி பேசும்
தமிழரிடம்
மறக்காமல் சொல்
உன் மொழி
செம்மொழியென்று

- தமிழ் பயணி(யிலிருந்து), தகவல். Raju M. Rajendran - தமிழ் ஆராய்ச்சி யாஹீ குழுமம்.

1 comment:

enRenRum-anbudan.BALA said...

நல்லா இருக்கு, அன்பு!
ஆனால், நான் அந்த கவிதை குறிப்பிடுகிற 'சாதி' இல்லை :-)
என்றென்றும் அன்புடன்,
பாலா