ஆஸ்கர் என்பது ஆங்கிலேயர்களால் ஆங்கிலப்படத்துக்கு கொடுக்கும் ஒரு கௌரவம். அவர்களில் பிற மொழிப்படங்கள் என்ற வரிசையில் உலகில் உள்ள மற்ற மொழிகள் அனைத்துக்கும் சேர்த்து ஒரு பிரிவு வைத்துள்ளனர். தமிழ் படம் ஆஸ்கர் வாங்கவேண்டுமானால் தமிழ், ஹிந்தி மற்றும் உலக மொழிகள் அனைத்தும் போட்டியிடும் ஒரு பிரிவில்தான் போட்டியிடவேண்டும். நமது தமிழ்படத்துக்கு மேலை நாட்டவர் கொடுக்கும் ஆஸ்கர், அங்கீகாரம் எதற்கு?
நமது தமிழ் திரைப்படத்தை, தமிழ் அறிந்த, தமிழர் உணர்வறிந்த நமது மக்கள் கொடுக்கும் கௌரவம்தான் பெரிது, முக்கியம், தலையாயது... என்று (அல்லது இந்த பொருள்பட) கமல் அவ்வப்போது கூறுவார்... (அது சரி, அதுக்கென்ன இப்போ:).
வலைப்பதிவுகள் 15 நிமிட புகழுக்காக எழுதப்படவில்லை என்பது இப்போது பலராலும் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும் இங்கு வலைப்பதியும் வெகுசிலரைத்தவிர வலைப்பதிவாளார் பலர் வலைக்கும், எழுத்துக்கும், தமிழுக்கும் புதியவர்கள். அவர்கள் ஒரு பதிவை, கருத்தை எழுதும்போது - அதிலும் ஒரு விஷயத்துடன் கூடிய பதிவை எழுதும்போது அதற்கு பின்னூட்டம் என்பது (எனக்குத்தெரிந்து) அனைவராலும் எதிர்பார்க்கப்படும் ஒன்று. இந்த விஷயத்தில் படிக்கும் வாசகர்கள் மட்டுமல்ல, சகவலைப்பதிவாளர்களில் பின்னூட்டமிடுபவர்களே மிக, மிகக் குறைவு. அதற்கு காரணம் என்ன... போன்ற விவாதங்களை விட்டுவிட்டு, அதற்கு ஓரளவு ஈடு கொடுக்கும் முயற்சி - தமிழ்மணத்தின் புதிய நட்சத்திர குறியீடு.
இது ஒரு பதிவைப்படித்து ஒரு வரி கூட எழுத இயலாத நமது மேலான ஜனங்களுக்கு, பிடித்திருக்கிறது/இல்லை என்று ஒரு கிளிக் மூலம் சொல்ல உதவும் ஒரு நல்ல முயற்சி. இதில் சில மேம்பாடுகளும் நடந்துவருவதாக அறிகிறேன். (பதிவுகளில் வந்திருக்கும் வாக்குகளைப் பார்க்கையில், இதையும் பயன்படுத்துபவர்கள் மிகக்குறைவு போல் தெரிகிறது. இருந்தபோதும் இதில் முன்னேற்றம் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இப்போது அந்த நட்சத்திரக்குறியீட்டுடன், திசைகள் & கிழக்கு பதிப்பகம் வழங்க இருக்கும் சிறப்பு வலைப்பதிவாளர்களுக்கு கிடைக்கும் ஒரு நல்ல ஊக்கம். இந்த ஏற்பாட்டுக்கும், உதவும் அனைவருக்கும் நன்றி.
என் இனிய வலைப்பதிவாள நண்பர்களே தொடர்ந்து சிறப்பாக செய்யுங்கள். நமது ஒவ்வொரு பதிவும் அனைவராலும் படிக்கப்பட்டே வந்திருக்கிறது, தொடர்ந்து படிக்கப்படும். அதனால் நல்லவை தொடருவோம்.
மேலும் இந்த மாத திசைகள் இதழில், தமிழில் குறுஞ்செய்தி பற்றிய முரசுமுத்து நெடுமாறனின் நேர்காணல் வந்திருக்கிறது.
இங்கே இன்னொரு தகவல்:
கடந்த வாரயிறுதியிலும் செல்லினம் இறக்கி/பயன்படுத்த சிரமப்படும் பயனர்களுக்கு உதவுவதற்காக அதை விற்கும் ஒருகடைக்கு சென்றிருந்தேன். நான் அங்கு சென்று சேரும்போது, நண்பர், சோனி எரிக்ஸனுடன் வந்திருந்த ஒருவருக்கு உதவி செய்து கொண்டிருந்தார். நான் போனவுடன் "அது என்னான்னு தெரியலங்க... http://www.murasu.com/smsனு கொடுத்தா Kuppai...???? ????-னு வருது. இப்படி குப்பை-ன்னு சொல்லுதுன்னு இப்போதான் முத்துவிடமும் தொலைபேசியில் சொல்லியிருக்கிறேன்" என்று கூறி, என்னிடம் முயற்சி செய்து பார்க்கச் சொன்னார்.
அப்புறம் பார்த்தால், go to address... என்ற பகுதிக்கு செல்லாமல் Google மூலம் Go To சொல்லியதில் அது என்னுடைய குப்பை க்கு கொண்டுவந்துவிட்டது:)
அப்போது அவர் பகிர்ந்துகொண்ட இன்னொரு சேதி:
அவர்: முத்து... சில நேரம் தமிழ்ல்ல அனுப்பும்போது I/Oன்னு error வருதுங்க.
முத்து: அய்யய்யோ...
அவர்: அய்யய்யோ இல்லிங்க வெறும் அய்யோ-தான்...
4 comments:
//அப்புறம் பார்த்தால், go to address... என்ற பகுதிக்கு செல்லாமல் Google மூலம் Go To சொல்லியதில் அது என்னுடைய குப்பை க்கு கொண்டுவந்துவிட்டது:)//
அய்யோ அய்யோ, சிரிச்சு ரசிச்சேன். (இது உண்மையிலேயே அய்யோங்க!)
என்னமோ ஜாவாஸ்க்ரிப்ட் பிரச்னை இருக்கு. என்னன்னு தெரியலை. :-(
"......அது என்னான்னு தெரியலங்க... http://www.murasu.com/smsனு கொடுத்தா Kuppai...???? ????-னு வருது...."
அச்சச்சோ.... :-)
(அப்பாடி, I/O சொல்லாம சமாளிச்சுட்டேன் :-)
அப்படிப் போடு சபாஷு..... எப்பயோ எழுதின கிறுக்கல் தான் ஞாபகத்துக்கு வருது.
"ஃபக் இல்லா கோடு வேண்டி
பிரார்த்திக்கிறேன் பில் கேட்ஸ் நோக்கி!!"
(பில் கேட்ஸ் தூக்கிட்டு, வேணும்னா சாம் மெக்நிலி பேரைப் போட்டுக்குங்க. ஒரகிள்ள பிரச்சனை வந்தா லேரி எலிசன் பேருப் போட்டுக்குங்க ;-) )
Post a Comment