Friday, October 01, 2004

லல்லுவின் லொள்ளு

இந்திய ரயில்வே அமைச்சர் மாண்புமிகு லாலு அவர்கள் தான் பதவி ஏற்றதிலிருந்து பல சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். முதலில் காபி,தேனீருக்கு மண்கலையத்தைப் பயன்படுத்தவேண்டும். பின்னர் மோர், இளநீர் விற்க ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று அறிவித்திருந்தார்கள். அதன் பின்னர் ரயிலில் பயன்படுத்தும் இருக்கைகளுக்கு தேங்காய் நார் பயன்படுத்தவேண்டும்.

அந்த வரிசையில் இன்றைய தினசரி ஒன்றில் படித்த ஆக அண்மைய அறிவிப்பு:
ரயில்களில் மக்கள் பல் விளக்க 'வேப்பங்குச்சி' விற்கவேண்டும்.

இது இப்படியே போனால், வேறு என்னென்ன அறிவிப்பு வருமென்று கொஞ்சம் கற்பனைக்குதிரையை ஓடவிடுங்களேன்...

(எனக்கு முதலில் தோன்றியது, கூடியவிரைவில் கோவணம் விற்கப்படும் என்பது - ஆனால் அதைப் பொதுவில் சொல்லி உங்களிடம் வாங்கிக்கட்டிக்கொள்ள விரும்பவில்லை:)

2 comments:

அன்பு said...

நண்பரே, சும்மா நகைச்சுவைக்காகத்தான் அதைப்பதித்தேன். லல்லு சார பார்க்கும்போதெல்லாம் ஒரு சந்தோஷம்(சிரிப்பு)தான் வரும் எனக்கு. அவர் முகத்தை எவ்வளவுதான் சீரியசா வச்சிருக்க முயற்சி எடுத்தாலும் கூட அவரோட ஹேர்ஸ்டைலையும் (தமிழ்ல தெரியல), வெத்தலை/பான் உதப்பும் வாயையும் பார்த்தா சிரிப்பு வந்துடும். அதவிட, தலைவர் சிரிக்காம சில சம்யம் ஜோக் உதிர்ப்பார்:

என்னோட கதைய யாரு வேணாலும் படமா எடுத்துக்கோங்க... நான் ராயல்டி கேக்கப் போறதுல்ல.

என்னைப்பத்தி நீங்கதான் இங்க கேலி பண்ணிண்டிருக்கிறீங்க, அங்க ஹார்வர்ட்ல என்னைப் பற்றி ஆராய்ச்சி பண்ணிட்டுருக்கிறாங்க.

ஜெ என்னோட சகோதரி. அவர் டெல்லியிலிருக்கும்போது இங்கு குடும்பத்தோட வந்திருப்பது தமிழ்நாட பிடிக்கத்தான்.

இது மாதிரி பல... நகைச்சுவை. அதால சீரியசா எடுத்துக்காதிங்க இதை.

Anonymous said...

Dear Anbu,
Greetings. This is Arun here. Thanks a lot for all your comments in my blog:) Yday, I tried to post some nice comments for 'Andhimazai'...it was a good writeup , but blogger never allowed me to post comments. Keep up the good job !!!
Love,Arun