Sunday, October 10, 2004

என்னாலா மைக்?

சிங்கையின் தமிழ்முரசைச் சேர்ந்த லதா அவர்களின் கவிதை நூலான தீவெளியிலிருந்து ஒரு கவிதை இங்கே. கவிதைக்கும் என்னுடைய சிங்கையில் இந்தியர் நிலை பதிவுக்கும் தொடர்பேதுமில்லை.

என்னாலா மைக்?

உங்கப்பன் யாரோ
எங்கப்பன் யாரோ
யாருலா கண்டா?
நாம கூட்டாளிங்க
பீர் குடித்து
ஜாலியா இருப்போம்
வா லா மைக்
எடுத்துக்கோ 'எக்ஸ்டசி'
சும்மா
என்ஜாய் பண்ணுலா.

உங்கப்பன் யாரோ
எங்கப்பன் யாரோ
நாம மக்கள்ஸ்லா
நமக்குள்ளாற என்னாலா?
எவண்டா முறைச்சான்
காட்ரா
சொருவிடலாம்

உங்கப்பன் யாரோ
எங்கப்பன் யாரோ
யாருக்குலா தெரியும்?
இது உன் 'பசாலுலா'
நமக்கொன்னும் தெரியாது
குத்தினது யாருன்னு
கேட்டான்
சொல்லிட்டேன்லா
தமுளன்லா!

- லதா

8 comments:

அன்பு said...

நண்பரே... இது அந்த-லா இல்லை. சிங்கப்பூரர்களுக்கே உரித்தான ஆமாவாலா!? ஓகேலா அவர்களின் பேச்சை ஏதாவது நேயர் நிகழ்ச்சிகளில், ஒலியில் கேட்கலாம்.
உங்களுக்கு ஒலி பரிச்சயமா? இல்லையென்றால் கேட்டுபாருங்கள் - ஒருகாலத்தில்
அதனுடனே எழுந்து அதனுடனே தூங்கிக்கொண்டிருந்தேன் - இப்போது அது தூங்குவதே இல்லை, 24 நேர ஒலிபரப்பு - oli.com.sg அல்லது http://oli.mediacorpradio.com/ இணையத்தில் கேட்கலாம்.

லதாவை ஒரு பத்திரிக்கையாளரகாத்தான் எனக்குதெரியும். அவருடைய இந்தத் தீவெளிதான் கவிஞராகக் காட்டியது. கால்ச்சுவடுகளில்லாம் கூட அவர் கவிதை வந்திருக்கிறது. அவரும் சிங்கப்பூரர்தான்.

Unknown said...

குறுந்தொகையில் வர்ற "யாயும் ஞாயும்" பாடலை கொஞ்சம் உல்டா பண்ண மாதிரி இருக்கே :-)

அன்பு said...

எனக்குப்பிடித்த இந்த கவிதை சுஜாதா சாருக்கும் இந்தவார எ.பி.க...

பத்மா அர்விந்த் said...

நன்றி அன்பு முழுக்கவிதையையும் தந்தற்கு

Ganesh Gopalasubramanian said...

நன்றி அன்பு
அந்த லதா மேடம் அடிக்கடி இணையத்தில உலா வர்ற லதா மேடம் தானா??

அன்பு said...

இல்ல கணேஷ்... இவங்க லதா... கனகலதா சிங்கையின் தமிழ்முரசு ஆசிரியர் குழுவில் இருக்காங்க.

அன்பு said...

நன்றி பத்மா!

ஆனால் இந்தக் குறுக்கிய கவிதையும் மிக நன்றாக இருக்கிறது
- சொல்ல வந்த விஷயம் சொல்லப்பட்டதாகவே தெரிகிறது.

---------------விகடனில் இருந்து----------
எபிக

உங்கப்பன் யாரோ
எங்கப்பன் யாரோ
யாருக்குலா தெரியும்?
எனக்கொன்னும் தெரியாது!
குத்தினது யாருன்னு
கேட்டான்...
சொல்லிட்டேன்லா.
தமுளன்லா!

- லதா(சிங்கப்பூர்)
தொகுப்பு: 'பாம்புக் காட்டில் ஒரு தாழை)
---------------விகடனில் இருந்து----------

enRenRum-anbudan.BALA said...

Anbu,
கவிதை நல்லாருக்கு !!!

Super, LA :)