Friday, October 22, 2004

சீரியஸ் மேட்டர்...

என்ன பண்றது அப்பப்போ ஏதேதோ பதிப்பதின் விளைவு... இந்த தலைப்பு.

சில வாரங்களுக்கு முன்பு திரு. பா.ராவும் திரு. எஸ்.ராவும் சிறந்த நூறு நூல்கள் என்று அவர்கள் படித்த அவர்களுக்கு பிடித்த நூறு நூட்களை பட்டியலிட்டிருந்தார்கள். நண்பர் ஈழநாதன் தனது படிப்பகத்தில் பல நல்ல ஈழத்து நூல்களை அறிமுகம் செய்துவருகிறார்.

இதுபோன்று அல்லது அதைத்தொடர்ந்து வேறு எதாவது நல்ல புத்தகங்கள் பட்டியல் ஏது வெளியிட்டார்களா? ஏதாவது சுட்டி இருந்தால் சொல்லுங்கள். அதுதவிர நீங்களும் உங்களூக்குப் பிடித்த நூல்களை இங்கே பின்னூட்டத்திலே சொல்லுங்களேன். ஏற்கனவே பட்டியலில் இருந்தாலும் பரவாயில்லை, நீங்களும் திரும்ப சொல்லும்போது அதற்குறிய வாக்கு/அபிமானம் கூடுவதாக எடுத்துக்கொள்ளப்படும். இந்தப்பட்டியலை திரட்டி மொத்தமாக ஒரே பட்டியலாக பதிக்கலாம்.

தமிழ் புத்தங்கள் மட்டுமல்ல உங்களின் விருப்பம் ஆங்கிலமாக இருந்தால்கூட வரவேற்கப்படும். நல்லபுத்தகங்களை, அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய, நல்ல, இனிமையான புத்தகங்களை ஒன்றுகூடி திரட்டுவோம்.

இதன் பிண்ணனி இரண்டு:
1) நான் வருடத்தொக்கொருமுறை(யாவது) சில நூட்கள் இந்தியாவிலிருந்து வாங்கிவருவது/வரவழைப்பது வழக்கம். அந்த முறை இந்த தீபாவளியின் போது வருகிறது. (சில நண்பர்கள் ஊர் சென்று திரும்புவதால்)

2) நண்பர் ஈழநாதன் முன்னொருமுறை அழைப்புவிட்டிருந்தார், யாராவது ஒத்துழைத்தால் படிப்பகம் போன்று தமிழகத்திலிருந்து வரும் நூட்களையும் பட்டியலிடலாமென்று. அதற்கு இது ஒரு முதல்படி.

அதனால் உங்கள் கருத்துக்களை, எண்ணங்களை விரைவில், மிகவிரைவில் எதிர்பார்க்கிறேன்.


5 comments:

Anonymous said...

Thinnai Archives would have atleast 2 lists by Jeyamohan. Apart from that you can search for 'Paavannan's articles in thinnai at http://www.thinnai.com/art.html.

hth
dyno

அன்பு said...

ரொம்ப நன்றி டைனோ ரொம்ப பயனுள்ள பக்கம் அது... அதில் பல கட்டுரைகள் நான் முன்னர் படிக்காதது, ஒரேபக்கத்தில் தொகுப்பாக உள்ளது இன்னும் அருமை. மீண்டும் நன்றி.

ஈழநாதன்(Eelanathan) said...

அன்பு படிப்பகப் பக்கத்துக்கு மிக நீண்ட விளக்கம் எனது பதிவில் கொடுக்க இருக்கிறேன்.நீங்கள் இது பற்றிக் குறிப்பிட்டதால்.
ஆளாளுக்கு எழுதி நூல்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்,பெரும்பாலானாவர்கள் அவற்றை ஆவணப் படுத்துவது பற்றியோ அல்லது அவை எட்டப்படும் தூரம் பற்றியோ கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

அதேமாதிரி வலைப்பதிவுகளும் தனியாளின் வலைப்பதிவுகள் என்ற வரையறைக்குள் நின்றுவிடாது பலதையும் பத்தையும் பேசும் இடங்களாக வரவேண்டும்.இலவசமாகக் கிடைத்த இடத்தை பிரயோசனப் படுத்துவதுதான் எனது திட்டம்.நான் படிக்கும் நூல்களை மாத்திரமின்றி பிறரின் குறிப்புகளையும் ஓர் இடத்தில் கோர்வைப்படுத்தும் போது ஒரு பத்துப் பதினைந்து பேரையாவது அந்நூல்களை வாசிக்கும்படி ஈர்க்கலாம்.அதன் மூலம் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிப்பது மாத்திரமன்றி எமது காலத்தில் வந்த நூல்கள்,அரிதாகக் கிடைக்கும் நூல்கள் போன்றதொரு நூல் விபரப்பட்டியலை இணையத்தில் பேணலாம் அதன் முக்கிய பயன் ஒரு நூலை நூலகத்தில் இரவல் பெறவோ அல்லது புதிதாக வாங்கவோ முற்படும் ஒருவர் இந்தப் பக்கத்திற்கு வந்து அந்நூல் பற்றிய விபரங்களைத் தேடிப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.தேடும் வார்த்தைகளை மையமாகக் கொண்டே இந்தப் பக்கத்தை அமைத்திருக்கிறேன்.

உங்களினதும் ராஜ்குமாரினதும்,பெயரிலியினதும் ஆர்வம் எனக்கு முனைப்பைத் தருகிறது விரவில் மற்றவர்களுடனும் கைகோப்போம்

Kannan said...

அன்பு,

இது நல்ல யோசனை. நீங்கள் குறிப்பிட்டு, சுட்டி தந்த இந்த இரண்டு பட்டியல்களில் இருந்தே தமிழில் இனியும் படிக்க நல்ல விஷயங்கள் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். ஈழநாதன் சொன்னது போல, நல்ல, அரிய புத்தகங்களைப் பற்றித் தேடித் தெரிந்து கொள்ள வலைப்பதிவு one stop shop ஆக இருக்கலாம். கடந்த மாதங்களில் வலைப்பதிவுகளில் சிலாகிக்கப் பட்டதாலேயே, ஜே.ஜே சில குறிப்புகள், புலிநகக்கொன்றை போன்ற புத்தகங்களைத் தேடி வாங்கினேன் (இன்னும் படிக்க வில்லை)

நானும் இந்த ஆட்டத்திற்கு வருகிறேன்.

PS: வெள்ளிப் பாதசரம் என்ற அருமையான சிறுகதைத் தொகுப்பு ஒன்று வைத்திருந்தேன் (செ. யோகநாதன் தொகுத்த ஈழத்துச் சிறகதைகள்) நண்பரிடம் இரவல் கொடுத்துத் தொலைந்து விட்டது. ஈழநாதனுக்கு இந்த நூல் பற்றி, இது இன்னும் கிடைக்கிறதா என்று தெரியுமா?

அன்பு said...

நன்றிங்க மூர்த்தி...

திரு. மூர்த்தியின் பட்டியல் இங்கு (யுனிக்கோடு) தமிழில்:

1.கு.ப.ராவின் 'விடியுமா',
2.அண்ணாவின் 'ஓர் யிரவு',
3.புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்',
4.தி.ஜானகிராமனின் 'மோகமுள்',
5.சுந்தரராமசாமியின் 'ஒரு புளிய மரத்தின் கதை',
6.விந்தனின்'பாலும் பாவையும்',
7.கு.அழகிரிசாமியின் 'ராஜா வந்திருக்கார்',
8.கிருஷ்ணன் நம்பியின் 'மாமியார் வாக்கு',
9.ஜி.நாகராஜனின் 'நாளை மற்றுமொரு நாளே',
10.கி.ராஜநாராயணனின் 'கோபல்ல கிராமம்',
11.க.நா.சுவின் 'பொய்த்தேவு',
12.கல்கியின் 'தியாகபூமி',
13.பா.ஜெயப்பிரகாசத்தின் 'யின்னொரு ஜெருசலேம்',
14.ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்',
15.நீல.பத்மனாமனின் 'பள்ளி கொண்டபுரம்',
16..மாதவனின் 'சாலைக்கடைத் தெருக் கதைகள்',
17.பொன்னீலனின் 'உறவுகள்',
18.கு.சின்னப்பபாரதியின் 'தாகம்',
19.சுஜாதாவின் 'ஊஞ்சல்',
20.சோ.தர்மனின் 'நசுக்கம்',
21.மையத்தின் 'கோவேறு கழுதைகள்',
22.பா.செல்வராஜின் 'தேனீர்',
23.பாமாவின் 'கருக்கு',
24.ராஜம் கிருஷ்ணனின் 'அமுதமாகி வருக',
25.கிருத்திகாவின் 'வாசவேச்வரம்',
26.அம்பையின் 'சிறகுகள் முறியும்',
27.பிரபஞ்சனின் 'வானம் வசப்படும்',
28.தோப்பில் முகம்மது மீரானின் 'ஒரு கடலோரக் கிராமத்தின் கதை',
29.சே.யோகநாதனின் 'மீண்டும் வந்த சோளகம்',
30.பெ.கருணாகரமூர்த்தியின் 'அகதி உருவாகும் நேரம்',
31.நகுலனின் 'நிழல்கள்',
32.அசோகமித்திரனின் 'பதினெட்டாவது அட்சக் கோடு',
33.யிந்திரா பார்த்தசாரதியின் 'குருதிப் புனல்',
34.ஜெயமோகனின் 'ரப்பர்',
35.மா.அரங்கநாதனின் 'காடன் மலை',
36.பாவண்ணனின் 'பாய்மரக் கப்பல்',
37.வண்ண நிலவனின் 'எஸ்தர்',
38.வண்ணதாசனின் 'தனுமை',
39.திலீப் குமாரின் 'மூங்கில் குருத்து',
40.எம்.வி.வெங்கட்ராமின் 'காதுகள்',
41.தஞ்சை பிரகாஷின் 'கள்ளம்',
42.குமார செல்வாவின் 'உக்கிலு',
43.பெருமாள் முருகனின் 'நிழல் முற்றம்',
44.நரசய்யாவின் 'கடலோடி',
45.தமிழவனின் 'ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள்',
46.லா.ச.ராவின் 'அபிதா',
47.சி.சு.செல்லப்பாவின் 'சுதந்திர தாகம்',.
48.நாகூர் ரூமியின் 'குட்டியாப்பா',
49.சாரு நிவேதிதாவின் 'எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும்',
50.பா.விசலத்தின் 'மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்',
51.பாவை சந்திரனின் 'நல்ல நிலம்',
52.ஜெயந்தனின் 'நினைக்கப்படும்',
53.கோமல் சாமிநாதனின் 'தண்ணீர் தண்ணீர்',
54.எஸ்.பொவின் 'நனவிடைத் தோய்தல்',
55.வல்லிக்கண்ணனின் 'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்',
56.ந.பிச்சமூர்த்தியின் 'காட்டு வாத்து',
57.சி.மணியின் 'வரும்,போகும்',
58.கலாப்ரியாவின் 'எட்டயபுரம்',
59.ஞானக்கூத்தனின் 'அன்று வேறு கிழமை',
60.மனுஷ்யபுத்திரனின் 'என் படுக்கையறையில் யாரோ
ஒளிந்திருக்கிறார்கள்',
61.மீராவின் 'ஊசிகள்',
62.சுதேசமித்திரனின் 'அப்பா',
63.யுகபாரதியின் 'மனப்பத்தாயம்',
64.சோ.வைத்தீசுவரனின் 'நகரத்துச் சுவர்கள்',
65.பிரம்மராஜனின் 'கடல் பற்றிய கவிதைகள்',
66.மஹாகவியின் 'குறும்பா',
67.மு.மேத்தாவின் 'கண்ணீர்ப் பூக்கள்',
68.காமராசனின் கறுப்பு மலர்கள்',
69.அ.சீனிவாசராகவனின் ('நாணல்') 'வெள்ளைப் பறவை',
70.சுகுமாரனின் 'பயணத்தின் சங்கீதம்',
71.அப்துல் ரகுமானின் 'பால்வீதி',
72.அபியின் 'மவுனத்தின் நாவுகள்',
73.கல்யாண்ஜியின் 'புலரி',
74.பழமலயின் 'சனங்களின் கதை',
75.கலாந்தி கைலாசபதியின் 'ஒப்பியல் யிலக்கியம்',
76.எஸ்.ராமகிருஷ்ணனின் 'கற்பின் கனலி',
77.ஆர்.கே.கண்ணனின் 'புதுயுகம் காட்டிய பாரதி',
78.சிட்டி-ஜானகிராமனின் 'நடந்தாய் வாழி காவேரி',,,,,,
79.காஞ்சனா தாமோதரனின் 'வரம்',
80.கீல் கண்ணனின் சிறுகதைத் தொகுப்பு
81.விஷ்ணுபுரம்---ஜெயமோகன்
82.பின்தொடரும் நிழலின் குரல்---ஜெயமோகன்
83.ஜண கண மண---மாலன்
84.அக்னி---இந்திரா பார்த்தசாரதி
85.குறிஞ்சி மலர்---நா.பார்த்தசாரதி
86.பொன்னியின் செல்வன் ---கல்கி
87.சிவகாமியின் சபதம் ---கல்கி
88.பொன்னகரம் ---புதுமைப்பித்தன்
89.மேரி என்ற ஆட்டுக்குட்டி ---பிரபஞ்சன்
90.சொல்லித் தெரிவதில்லை---கோவி.மணிசேகரன்