Friday, January 14, 2005

இதோ இன்னொரு குறுந்தொகை...

வணக்கம்.

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

இன்று பொங்கல் என்று தெரியாதவர்கள் - தெரிந்துகொள்வோம்,
தெரிந்தவர்கள் முடிந்தவரை கொண்டாடுவோம்,
பாரம்பரியம் போற்றுவோம், மனிதம் தழைக்கட்டும்.

(காலையிலே பொங்கல் செய்து(கொண்டாடி) சாப்பிட்டுவிட்டு, அலுவலகத்திலிருந்து எழுதுகிறேன். இங்கு சிங்கையில் தீபாவளிக்குதான் அரசு விடுமுறை, பொங்கலுக்கல்ல. அவங்கதான் லீவு விடல, நீங்களாவது லீவு போடலாம்ல என்ற மனைவி, மகளுக்கு வழக்கம்போல ஏதோ காரணம் கூறி மீண்டுவந்தேன்.)

சரி அது இருக்கட்டும், இந்த பதிவின் நோக்கம் பொங்கலைப்பற்றியது அல்ல - புதிய குறுந்தொகை பற்றியது.

முதல் குறுந்தொகையை எழுதியவர்...(யாரென்று தெரியவில்லை)
இந்த புதிய குறுந்தொகையின் காரணகர்த்தா - முரசு நெடுமாறன் அவர்கள். ஆம் குறுந்தகவல்/குறுஞ்செய்தி அதாங்க தமிழில் 'SMS'ஐத்தான் குறுந்தொகை என்று குறிப்பிடுகிறேன்(றோம்).



இந்த தமிழில் குறுந்தகவல் பற்றி கடந்த வருடத்திலிருந்து பேசிவந்தாலும், சோதனைமுறையில் சில இடங்களில் நம்மில் ஒரு சிலர் பார்த்திருந்தாலும் நடைமுறையில், தமிழ்கூறும் நல்லுலகுக்கு அறிமுகப்படுத்தப்போவது நாளைதான். href="http://oli.mediacorpradio.com/tamilsms.htm">சிங்கையின் ஒலி 96.8 ஆனந்தபவன் உணவகத்தின் (கடையில் கணிணி மூலம் கொடுக்கும் ரசீதில், முழுக்க முழுக்க தமிழில்தான் இருக்கும்) ஆதரவுடன் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. கவியரசு வைரமுத்து கலந்துகொண்டு ஆரம்பித்து வைக்கிறார்.

என்னைப்பொருத்தவரை தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வது, தொழில்நுட்பத்தின் உதவியால்தான் முடியும். அந்த முயற்சிக்கு திரு. முத்து நெடுமாறன் பேருதவி செய்துள்ளார், செய்து வருகின்றார். அவருக்கு மீண்டும் எனது பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
அதே போல், தொழில்நுட்ப தமிழை ஊக்குவிப்பதில் சிங்கை ஊடகங்களில் தலையாயது ஒலி 96.8. முதலில் ஒலியுடன் தமிழில் (தமிழில் மின்னஞ்சல்), யுனிக்கொடு தளம், இப்போது குறுந்தகவல். அதை மனமுவந்து ஆர்வத்துடன் செய்யும் அதன் தலைவர் திரு. அழகிய பாண்டியன் அவர்களுக்கும் நன்றி.

நிகழ்ச்சி சிறப்புற நடைபெறவும், தமிழ்குறுந்தகவல் சேவை எல்லாருக்கும் கைகூடவும் வாழ்த்துக்கள்.

தமிழில் குறுந்தகவல் பற்றிய மேல் விபரத்துக்கு...

2 comments:

அன்பு said...

எழுதநினைத்து விடுபட்டவை:

1) இன்னொரு குறுந்தொகை - திரு. முத்து திசைகளில் தொடர் எழுத ஆரம்பித்தபோது திரு. மாலன் கட்டுரைக்கு தேர்ந்தெடுத்த தலைப்பு(என்று முத்து சமீபத்திய ஒலி செவ்வியில் கூறியதாக நினைவு).

2) கடந்தவருடம்/முந்தைய வருடமே முரசு அஞ்சல் பயன்படுத்தி தமிழில் எழுதுவதை .jpeg வடிவில் MMS-ஆக அனுப்பும் ஒரு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப/பொருளாதார காரணங்களால் மக்களை சரியாக சென்றடையவில்லை. அதை இந்த புதியமுறை நிவர்த்திசெய்யும் என்று நம்பலாம்.

3) அண்ணா பல்கலைக்கழகமும், தமிழ் (virtual!பல்கலைக்கழகமும் சேர்ந்து ஆங்கிலம் அறியாதவர்களும் பயன்படுத்தும்படி தமிழ் keypad அமைக்கும் ஆராய்ச்சிப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கும் முரசு நெடுமாறன் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கி வருவதாக அறிகின்றேன்.
http://www.chennaionline.com/colnews/newsitem.asp?NewsID={C28B7D4B-4D84-43B3-A544-FD657AAFFD3C}&CategoryName=TAMNA

Kasi Arumugam said...

//என்னைப்பொருத்தவரை தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வது, தொழில்நுட்பத்தின் உதவியால்தான் முடியும்.//

மெத்த சரி.

பயன்படுத்திப்பார்த்து எழுதுங்க.