Thursday, December 09, 2004

தமிழ்முரசு - நேற்றும், இன்றும்...

திரு. மாலன் அவர்கள் இங்கு சிங்கப்பூரில் வெளிவரும் தமிழ்முரசு நாளிதழில் ஒவ்வொரு புதன்கிழமையும் "சொல்லாத சொல்" என்ற ஒரு பத்தி எழுதி வருகிறார். அதில் நேற்று எங்கே உங்கள் பூ என்று வலைப்பதிவு பற்றி எழுதி, யாழ்.நெட், தமிழ்மணம் பற்றியும் தகவல் கொடுத்திருந்தார்.

அந்த கட்டுரையின் இறுதிப்பகுதியில், நமது சிங்கை பதிவாளர்கள் சிலர் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக நமது ஜெயந்தி சங்கர். அவர் சிங்கப்பூர் டைம்ஸ் என்று தமிழோவியத்தில் எழுதும் கட்டுரைகள், தோழிகள் - வலைப்பதிவில் மறுபிரசுரம் செய்வது பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

இறுதியில், சிங்கப்பூர் இன்னும் நிறைய வலைப்பூக்களை மலரச்செய்ய வேண்டும். இணையத்தில் தமிழ் அடியெடுத்து வைக்க சிங்கப்பூர் தமிழர்கள்தான் காரணமாக இருந்தார்கள். அந்த முன்னோடி சிங்கப்பூர் இந்த புதிய முயற்சியில் பின் தங்கி இருக்கலாமா? என்று கேட்டு விட்டு,

வேறு ஒரு காரணத்திற்காகவும் சிங்கப்பூர் படைப்பாளிகள் இதில் அக்கறை காட்டவேண்டும். உலகின் முன் தங்கள் படைப்புக்களைத் தடையின்றி வைக்க இதுவோர் வாய்ப்பு. உலகின் பாராட்டுகளைப் பெற்று பெருமிதம் கொள்ளவும், உலகின் விமர்சங்களைக் கொண்டு வளர்ச்சி பெறவும் இலவசமாகக் கிடைக்கும் இந்த வாய்ப்பு உதவும். இணையம்தான் உலகின் எதிர்காலம் என்று கூறி சிங்கை எழுத்தாளர்களையும், ஆசிரியர்களையும் வலைப்பதிவு பக்கம் வர அறைகூவல் விட்டிருந்தார்.

மாலனின் கட்டுரை படித்துவிட்டு, நேற்றே உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம் சார்பில் - ஆசிரியர் திரு. பொன்மாணிக்கம் தமிழ் மலர் என்ற ஒரு பதிவு ஆரம்பித்திருக்கிறார்கள்.

நல்ல முயற்சி. இதுபோல் இன்னும் பலர் வருவர் என்று நம்பலாம்.

உலகின் முன் தங்கள் படைப்புக்களைத் தடையின்றி வைக்க இதுவோர் வாய்ப்பு இதுதொடர்பில் வேறுவிதமான மாற்றுக்கருத்து வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வலைப்பதிவு ஆரம்பம் என்ற முதல்தகவல் மகிழ்ச்சி அளித்தது. என்னைப்பொருத்தவரை, மாலனின் இந்தக்கருத்து எவ்வளவுதூரம் சாத்தியம் என்பது ஒரு ?

சரி இன்றைய தமிழ்முரசு பற்றி இனி:

இரண்டாம் பக்கத்தில் முனைவர் நா. கண்ணண் அவர்களின் இரு நூல்கள் வெளியீடு (விலைபோகும் நினைவுகள், நிழல் வெளி மாந்தர்) பற்றிய தகவல் புகைப்படத்துடன் வந்திருந்தது. அதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

அடுத்த பக்கம் புரட்டினால், ஒரு முழுப்பக்கத்துக்கு நமது ஜெயந்தி சங்கர் எழுதிய டீன் ஏஜ் ரவுடிகள்... திகிலில் பெற்றோர்! என்ற அவள் விகடன் கட்டுரை பற்றிய எதிர்விளைவு.

கட்டுரை தொடர்பில், பல இளையர்களும், பெற்றோர்களின் எதிர்ப்பு கருத்துக்கள் வந்திருக்கிறது.

விகடன் தரப்பு விளக்கம்:

'கருத்தை மாற்றவில்லை'

கட்டுரை ஆசிரியர் திருமதி ஜெயந்தி சங்கர் எழுதி இருந்த கட்டுரையை அவள்விகடனுக்கு ஏற்ற அளவில் குறைத்திருக்கிறோமே தவிர, எந்த வகையிலும் கட்டுரையின் தன்மையை மாற்றவில்லை.

"இது சஞ்சிகை ஆசிரியர் செய்த தவறு"
- எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கர்

"நடந்தது என் தவறல்ல. நான் அனுப்பிய கட்டுரை வெட்டப்பட்டு மாற்றாப்பட்டு வெளியிடப்பட்டதைப் பார்த்ததும் நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன்! சிங்கப்பூர் வளர்ப்புமுறை மற்றும் இளையர்கள் தொடர்பான ஒரு கட்டுரை வேண்டும் என்று 'அவள் விகடன்' சஞ்சிகை ஆசிரியர் என்னிடம் சில வாரங்களுக்கு என்னிடம் சில வாரங்களுக்கு முன்பு கேட்டபோது நானும் எழுத சம்மதித்தேன்.

ஆசிரியர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டபடி சில தினங்களில் நான் கட்டுரை ஒன்றை எழுதி அனுப்பி வைத்தேன். அந்தக் கட்டுரையில் கெட்ட விஷயங்களை மட்டும் அல்லாது நல்ல விஷயங்க்ளைப் பற்றியும் எழுதப்படிருந்தன. ஆனால் அவை ஏதும் வெளியிடப்படவில்லை.

சிராங்கூன் ரோட்டு புத்தகக் கடையில் இந்த வாரம் வெளியிடப்பட்ட சஞ்சிகையைப் பார்த்ததும் அனைவரையும் போல நானும் அதிர்ச்சி அடைந்து ஆசிரியரை இணையத்தின் வழி தொடர்பு கொண்டு கேட்டபோது, கட்டுரை மிகவும் நீளமாக இருந்தது என்றும் கட்டுரையை 'அவர்கள்' பாணியில் எழுத வேண்டி இருந்தது என்றும் கூறினார்கள். என் கட்டுரையை இப்படி வெட்டியதற்கு அவர்களிடம் நான் விளக்கக் கடிதம் ஒன்றையும் கேட்டிருக்கிறேன். அந்த சஞ்சிகையில் நான் எழுதுவது இதுதான் முதன் முறை."

இது எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டமாக இன்னொரு கருப்பு கட்டமொன்று சொல்கிறது:
திருமதி ஜெயந்தி சங்கர் கட்டுரையைக் குறித்து போலிசார் விரைவில் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பர்.

இந்த விஷயம் தொடர்பில், என்முன் இப்போது இருக்கும் ஒரே கருத்து: ஜெயந்தி இந்த விஷயத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் விடுபடவேண்டும் என்பது மட்டும்தான்.

Tuesday, December 07, 2004

7-வது அனைத்துலகத் தமிழ் இணைய மாநாடு

இந்த வார இறுதியில் 7-வது அனைத்துலகத் தமிழ் இணைய மாநாடு இங்கு சிங்கையில் நடைபெற இருக்கிறது. மாநாட்டுக்கு(க்காக சிங்கை) வருகைதரும் அனைவரையும் வருக, வருக என வரவேற்கிறேன்(றோம்).

நமது வலைப்பதிவு குழுமத்தில் இருந்து மாநாட்டில் கட்டுரை படைக்கும் நண்பர்கள்:

- அருள் குமரன் (நாளைய உலகின் தொழில்நுட்பங்களில் தமிழ்)
- பத்ரி (தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்-வணிகத் தளம்)
- வெங்கடேஷ் (பன்மொழி செய்தித் திரட்டுதலை நோக்கி)
- சுபாஷிணி (கல்வி கற்றல்-கற்பித்தலில் Artificial Intelligence)
- முனைவர். கண்ணன் (இலக்க சேமிப்பு: இடர்கள், இலக்குகள், இணைப்புகள்)
- மாலன் (வலைப்பூக்கள் : வளர்ந்து வரும் மாற்று ஊடகங்கள்)

மற்றும் மின்-மஞ்சரியில் கட்டுரை எழுதிய காசி, ஏற்பாட்டுக் குழுவின் ரமா சங்கரன் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

மாநாடு மாபெரும் வெற்றிபெற...
உங்களில் பலரைப்போல் வெளியிலிருந்து ஆதரவு தருகிறேன்.

நன்றி.

என்றென்றும் அன்புடன்,
அன்பு
lsanbu@gmail.com

பி.கு:
நான் முன்னொருமுறை வலைப்பூவில் எழுதியபடி 'முதுகலை' என்பதை தவறாகப் புரிந்துகொண்டு தற்போது மேலும் படித்துவரும்(M.Tech) தேர்வு அடுத்தவாரம் இருப்பதாலும், வாரயிறுதியில் வகுப்பு இருப்பதாலும் மாநாட்டில் கலந்துகொள்ள இயலாது என்று கண்டுகொள்ளாமல் இருந்துவந்தேன், இதுவரை. இன்றுதான் முடிந்தால் போகலாமே என்று, உத்தமம் பக்கம் போனால் பதிவு 4-ந்தேதியே முடிவடைந்து விட்டது போலிருக்கிறது. இருந்தபோதும் மாநாடு நடைபெறும் திரு. அருள்மகிழ்நன் அவர்களின் 'கொள்கை ஆய்வுக்கழகம்' எனது பள்ளியின் (ISS) அருகிலேயே இருப்பதால், இடைவேளையிலோ(எனக்கோ/உங்களுக்கோ) அல்லது பின்னேரம் சந்திக்க இயலும். அதனால் உங்கள் நேரம் அனுமதித்தால் என்னை தொடர்புகொள்ளுங்கள்.

Friday, November 19, 2004

சவம்

உயிரெழுத்து கவிதை குழுமத்தில் இட்ட நண்பர் கிரிதரின் கவிதையிது.

தவறிவிட்டவரைப் பற்றிய
இந்த கவிதையை
தவற விட்டவர்களுக்காக இங்கே.

சவம்
***

தண்ணீர்ப் பஞ்சத்திலும் தாராளக் குளியலிட்டு
பொங்கலுக்கே கிட்டாத புதுத்துணி போர்த்து
காலமும் கண்டிராத சந்தனம் சவ்வாது தீற்றி
படையலுக்கு மட்டுமே பூசிவந்த திருநீரும் அணிந்து
அடுத்தவீடு தாராளமாய் தந்த ஊதுவத்தி மனம் கமழ
அடகுக்கு பயந்து பரணேறிய பித்தளை விளக்கு ஓளிர
திட்டின வாய்களின் அதிசய அழுகைகள் மத்தியில்
போர்வையில் சேதம் மறைத்த நாற்காலியில்
கம்பீரமாய்
புகையுமுன் புகைப்படத்திற்கு காத்திருக்கிறது
சவம்!!

கிரிதரன்

Friday, November 05, 2004

கும்மியடி... கொட்டிக்கும்மியடி...

சமீபத்தில் வந்த
எனக்குப்பிடித்த
இனிமையான
அழகான
அசிங்கமான
நளினமான
வைர
முத்து
பாடலொன்று...

கேட்டிருக்கிறீங்களா...!?

Sunday, October 24, 2004

வலைப்பதிவுகளின் வழி நான் கற்றதும் பெற்றதும்...

சிலகாலமாகவே நம்மில் பலரும் சொல்லிக்கொண்டிருப்பது, முன்னர் திரு. சுஜாதா மட்டுமே எழுதி நாம் தெரிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் போய், இன்று வலைப்பதிவுகளின் மூலம் பல விடயங்கள் தெரிந்தகொள்ள முடிகிறதென்பது. அந்தவரிசையில் இந்தவார கற்றதும் பெற்றதும் தொடரில் வந்துள்ள சூப்பர்மேன் கிறிஸ்டோஃபர் ரீவ் பற்றியும், பிரெஞ்சு தத்துவஞானி ழாக் டெர்ரிடா பற்றிய விஷயமும்.

இது தொடர்பில் பத்ரி முன்னர் எழுதியிருந்த பதிவைத் தேடி இங்கே முடியவில்லை, மன்னிக்கவும். இந்த கட்டுடைக்கும் (deconstruction of the text) வித்தை பெட்டையின் சில பதிவுகளிலும் இருப்பதாகக் கூட குறிப்பிட்டிருந்தார். அனைவருக்கும் நன்றி.

Friday, October 22, 2004

சீரியஸ் மேட்டர்...

என்ன பண்றது அப்பப்போ ஏதேதோ பதிப்பதின் விளைவு... இந்த தலைப்பு.

சில வாரங்களுக்கு முன்பு திரு. பா.ராவும் திரு. எஸ்.ராவும் சிறந்த நூறு நூல்கள் என்று அவர்கள் படித்த அவர்களுக்கு பிடித்த நூறு நூட்களை பட்டியலிட்டிருந்தார்கள். நண்பர் ஈழநாதன் தனது படிப்பகத்தில் பல நல்ல ஈழத்து நூல்களை அறிமுகம் செய்துவருகிறார்.

இதுபோன்று அல்லது அதைத்தொடர்ந்து வேறு எதாவது நல்ல புத்தகங்கள் பட்டியல் ஏது வெளியிட்டார்களா? ஏதாவது சுட்டி இருந்தால் சொல்லுங்கள். அதுதவிர நீங்களும் உங்களூக்குப் பிடித்த நூல்களை இங்கே பின்னூட்டத்திலே சொல்லுங்களேன். ஏற்கனவே பட்டியலில் இருந்தாலும் பரவாயில்லை, நீங்களும் திரும்ப சொல்லும்போது அதற்குறிய வாக்கு/அபிமானம் கூடுவதாக எடுத்துக்கொள்ளப்படும். இந்தப்பட்டியலை திரட்டி மொத்தமாக ஒரே பட்டியலாக பதிக்கலாம்.

தமிழ் புத்தங்கள் மட்டுமல்ல உங்களின் விருப்பம் ஆங்கிலமாக இருந்தால்கூட வரவேற்கப்படும். நல்லபுத்தகங்களை, அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய, நல்ல, இனிமையான புத்தகங்களை ஒன்றுகூடி திரட்டுவோம்.

இதன் பிண்ணனி இரண்டு:
1) நான் வருடத்தொக்கொருமுறை(யாவது) சில நூட்கள் இந்தியாவிலிருந்து வாங்கிவருவது/வரவழைப்பது வழக்கம். அந்த முறை இந்த தீபாவளியின் போது வருகிறது. (சில நண்பர்கள் ஊர் சென்று திரும்புவதால்)

2) நண்பர் ஈழநாதன் முன்னொருமுறை அழைப்புவிட்டிருந்தார், யாராவது ஒத்துழைத்தால் படிப்பகம் போன்று தமிழகத்திலிருந்து வரும் நூட்களையும் பட்டியலிடலாமென்று. அதற்கு இது ஒரு முதல்படி.

அதனால் உங்கள் கருத்துக்களை, எண்ணங்களை விரைவில், மிகவிரைவில் எதிர்பார்க்கிறேன்.


சிரிப்பே அறியா சிடுமூஞ்சி...

சிரிப்பே அறியா சிடுமூஞ்சியை நினைத்து இன்று குமாரும் நேற்று ராஜாவும்
இன்னும் சிலரும் மிக வருத்தப்பட்டிருந்தனர்.

ஆனால் எனக்கென்னவோ அது ஒரு நகைச்சுவையான, மக்களை ஈர்க்கும் விளம்பரமாகத்தான் எடுத்துக்கொள்ளப்படுமே தவிர அதையும் மீறி அதில் தோன்றும் 'பிறன்மனை' பற்றியெல்லாம் என்னைப்போலவே, பெரும்பாலானவர்களும் சிந்திக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. வேண்டுமானால் லியோனி வகை பட்டிமன்றங்களில் 'பிரமாதம்ம்ம்...' என்பதுபோல் இதுவும் சொல்லிக்காட்டப்படும். வேறேதும் அதிர்ச்சியடையுமளவு இதில் அதிகம் ஒன்றுமில்லை.

ஆபாசமான மற்ற விளம்பரங்களைப் பற்றி அல்ல என்னுடைய கருத்து. இதுதான் இதுக்குத்தான்!

அதுபோக இன்னொருவகையில் பார்த்தால், நம் ஊரில் (ஏன் உலகத்தில் பல இடங்களிலும்) இருக்கும் சாதி/மத/சொந்தம்/பணத்துக்காக செய்துகொள்ளும் இதுபோன்ற அதிக வயதுவித்தியாசமான திருமணம் செய்பவர்களுக்கும், அதற்கு துணைபோவர்களுக்கும் கொடுக்கும் சாட்டையடியாக தோன்றுகிறது.

மேலும், இப்போதெல்லாம் பலரும் வேலையில் மூழ்கி குடும்பத்தை, குறிப்பாக மனைவியை/துணையை மறந்து திரியும் இதுபோன்ற சிடுமூஞ்சிகளுக்கு கொடுக்கும் ஒரு எச்சரிக்கையாக கூட எடுத்துக்கொள்ளலாம்.

சரி... சரி... நிறுத்திட்டேன்.

Wednesday, October 20, 2004

இதழ்கள்

சிங்கப்பூரில் தமிழ் இந்திய நாள்/வார/மாத இதழ்களின் தேவை, விற்பனை பற்றி நேற்று உள்ளூரின் பிரபல (ஓரே) ஆங்கில நாளிதழான Striats Timesல் வந்த செய்தி இது. இவ்வளவு தேவையிருந்தாலும் உள்ளூரில் செயல் படும் ஒரே தமிழ்பத்திரிக்கையான தமிழ்முரசோ, வெளிவரும் ஒரு சில சிற்றிதழ்களோ(உள்ளடக்கதில் அல்ல எண்ணிக்கையில் - இந்தியன் மூவி நியூஸ், சிங்கைச் சுடர் (இதுவும் மூட இருப்பதாக கேள்விப்பட்டேன்)) இதுபற்றி கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அவர்களுக்கே உரிய சில பிரச்சனையில் மூழ்கியுள்ளனர் (இதுபற்றி விரிவாக பின்னர் எழுதுகிறேன்).

அவர்கள் கவலைப்படாவிட்டாலும் பராவாயில்லை என்னைப்போலவே தமிழ்மொழி பண்பாட்டுக்கழகத்தின் தலைவர் திரு. ஹரிகிருஷ்ணனாவது கவலைப்படுக்கிறாரே.

குறும்புக்காரரு...

எனக்கு இந்த குறும்புக்காரருன்னு சொல்லுவாங்களே, அப்படி சொன்னாலே ஞாபகத்துல வர மனுசர் (சத்தியராஜ், கவுண்டமணி இல்லைங்கோ:) விர்ஜின் நிறுவனத்தின் அதிபர் ரிச்சர்ட் பிரான்சன் அவர்கள்தான். அவரு மற்ற எல்லா வர்த்தகர்களையும் விட வித்தியாசமானவர். அவர் செய்யும் ஒவ்வொரு தொழிலும் வித்தியாசம். சாதராண குடிபாங்களிலிருந்து, கைத்தொலைபேசி சேவை, விமான சேவை என்று எல்லாவற்றிலும் அகல கால். பேரே வித்தியாசம்தானே. இப்போது அவர் செய்யும் இன்னொமொரு புதுசு விமானத்தில் DoubleBed (இருவர் படுக்கும் படுக்கை என்று தமிழ்படுத்தினால் என்னை அசிங்கமா பார்ப்பீங்களே :)



இதுபற்றி அவர் என்ன சொல்றார் தெரியுமா?

'You can do it at home, in a hotel, on cruise ships and on trains. Why not on an airliner?'

மேலும் படிக்க....

வீரப்பனால் என(ம)க்கு கிடைத்தது...

வீரப்பன் இறப்பால் வேறென்ன நன்மை தீமை என்று அனைத்துப் பிரபலங்களும் போதுமளவுக்கு வலை பதிஞ்சீட்டீங்க, போதலைன்னா தினமலர், குமுதம், விகடன் பக்கம் போய் பாருங்க.

என(ம)க்கு கிடைத்த நன்மை,
தமிழ்மணம் வலைவாசலின் மேலும் ஒரு மேம்பாடு: சூடான விவாதப் பொருள்

புதுசு கண்ணா புதுசு
Best கண்ணா Best
First கண்ணா First

பாலாஜி சுப்ரா ட்ராக்பேக், பிங்பேக் போன்றவைக்கு எளிய மாற்றாக இருக்கிறது என்று கூறி ஏற்கனவே நன்றி கூறியுள்ளார். (ட்ராக்பேக், பிங்பேக் - எப்படி பயன்படுத்த முடியும் என்று சொல்லுங்களேன்:)

இது manual-ஆக திரட்டப்பட்ட செய்திகளா? அல்லது programmed collection? (அதாவது முக்கியவார்த்தை(keyword - வீரப்பன்) ஒன்றை வைத்து திரட்டப்பட்டதா, இதுபோன்று தினமும் வருமா?)

நன்றி காசி(....). நவன் சொன்னதுபோல உங்களுக்கு மட்டும் நாளுக்கு 30 மணி நேரமல்ல, எங்களுக்கும்தான் - ஆனால் எதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைத்தான் உங்களைப்போன்றவர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டும்.

வாழ்த்துக்கள், தொடர்ந்து செல்லுங்கள், சிறப்பாக செய்யுங்கள்.

Monday, October 18, 2004

Padiththavai-ல் பிடித்தவை

கண்டிப்பா நீங்க படிக்கோணும்...நானும் அவர்களும்

எல்லாமே அரசியல்தான்...

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பில், இன்றைய தினசரியில் படித்த ஒரு செய்தி(யின் பின்விளைவு...)


....
அதிபர் புஷ் ஃபுளோரிடாவில் யூதர்களின் வாக்குகளை வெற்றிகொள்ள முயன்றார்.

யூதர்களுக்கு எதிராக முன்பு நடந்ததைப் போன்ற எதிர்ப்பு இயக்கம் இந்த நவீன உலகில் இனி ஒருபோதும் நடக்காது என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தும், கண்காணித்து வரும் என்று புஷ் உறுதி தெரிவித்தார்.

யூத அமெரிக்கர்கள் சென்ற 2000 அதிபர் தேர்தலில் புஷ்ஷை ஆதரிக்காமல் ஜனநாயகக் கட்சியின் அல்கோரை ஆதரித்தார்கள். ஆனால் அதிபர் புஷ் நிர்வாகம் இப்போது கைக்கொண்டு வரும் இஸ்ரேலுக்கு ஆதரவான அணுகுமுறை காரணமாக குடியரசுக் கட்சி அதிபருக்கு யூதர்களிடம் ஆதரவு அதிகமாகி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நமது ஊரில் நடக்கும் சாதிச்சங்க, மதவாத தொடர்பான அரசியலுக்கும் இந்த செய்திக்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா என்ன? அமெரிக்காவில் எல்லாம் அப்படி நடக்காதுப்பா... அமெரிக்க அரசியல் ரொம்ம்பப... சுத்தம் & யோக்கியம்.

கண்டத சொல்றேன்...

இன்று காலை பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கும்போது தற்செயலாக என் முன்னர் நின்று கொண்டிருந்த ஒரு பள்ளி/கல்லூரிப்பெண்ணின் (நம்ப இனப்பெண்தான்) தோளில் தொங்கிக்கொண்டிருந்த பையில் இணைத்திருந்த பேட்ஜ் (badge) ஒன்று (தெரியாத்தனமாக) கண்ணில் பட்டது. அதிலிருந்த வாசகம் இதுதான்:

Menopause
Mental Stress
Menstrual Cramp

Why all these problems starts with Men?

[ஏதோ பாத்த சரி... அதை இதுக்கு இங்கேன்றீங்களா...? அட போங்கப்பா:)]

சிங்கையின் தமிழ்முரசு தினம் ஒரு வாசகம் என்று தினமொரு பொன்/வெள்ளி/வெண்கல/மொழியை வெளியிட்டு வருகிறது. அதில் இன்று:

முட்டாள்களின் இதயம் அவர்கள் வாயில் இருக்கிறது.
ஞானிகளின் வாய் அவர்களின் இதயத்தில் இருக்கிறது.
- பிராங்கிளின்



Tuesday, October 12, 2004

Death of A Programmer

அனுதினமும் வரும் புதுப்புது மென்பொருள்களால் programming என்று சொல்லப்படும் கோட் எழுதும்வேலை குறைந்துகொண்டே வருகிறது. இப்பொது கிட்டத்தட்ட 75% கோடை மென்பொருள்களே எழுதிவிடுவதால்... இதே நிலை நீடிக்கும்போது இன்னும் ஒரு 5 - 10 வருடங்களில் Programmer என்ற ஒரு வேலை கேள்விக்குறியாகிவிடுமா? இப்போது படித்துவரும் கணிணித்துறை மாணவர்கள் அந்த நிலையிலிருந்து தப்பிக்க என்னவழி போன்றவற்றைப் பற்றி ஆராயும் ஒரு கட்டுரை: A Programmer's key to survival

Monday, October 11, 2004

பாதுகாப்பு (இல்லாத) பெட்டி

பாதுகாப்பு பெட்டிக்கே பாதுகாப்பு இல்லாட்டி அத எந்த பாதுகாப்புப்பெட்டிக்குள்ளார வைக்கிறது?

இந்தசேதி தெரியுமா சாமி ஒங்களுக்கு. போன வாரம் நடந்திச்சு, உங்கள்ட்ட சொல்லலாம், சொல்லாம்னு இருந்து வலைப்பூ நெருக்கடில்ல இது மறந்திருச்சு. வேறு எங்காவது படிச்சிருந்தா சரி, ஒருவேளை படிக்காட்டி இங்கே: Business Report - Hong Kong bank crushes more than customer's spirits

Sunday, October 10, 2004

என்னாலா மைக்?

சிங்கையின் தமிழ்முரசைச் சேர்ந்த லதா அவர்களின் கவிதை நூலான தீவெளியிலிருந்து ஒரு கவிதை இங்கே. கவிதைக்கும் என்னுடைய சிங்கையில் இந்தியர் நிலை பதிவுக்கும் தொடர்பேதுமில்லை.

என்னாலா மைக்?

உங்கப்பன் யாரோ
எங்கப்பன் யாரோ
யாருலா கண்டா?
நாம கூட்டாளிங்க
பீர் குடித்து
ஜாலியா இருப்போம்
வா லா மைக்
எடுத்துக்கோ 'எக்ஸ்டசி'
சும்மா
என்ஜாய் பண்ணுலா.

உங்கப்பன் யாரோ
எங்கப்பன் யாரோ
நாம மக்கள்ஸ்லா
நமக்குள்ளாற என்னாலா?
எவண்டா முறைச்சான்
காட்ரா
சொருவிடலாம்

உங்கப்பன் யாரோ
எங்கப்பன் யாரோ
யாருக்குலா தெரியும்?
இது உன் 'பசாலுலா'
நமக்கொன்னும் தெரியாது
குத்தினது யாருன்னு
கேட்டான்
சொல்லிட்டேன்லா
தமுளன்லா!

- லதா

Sunday, October 03, 2004

TMS மற்றும் KS Rajah

நண்பர் யாழ் சுதாகர் என்பார் இரு அருமையான பதிவுகளை ஆரம்பித்து, இரு அமர்க்களமான பதிவுகளை பதிந்துள்ளார். அதை படித்து, அனுபவித்துப் பாருங்கள் - மிகவும் இனிமை.

TMS பற்றிய பதிவு அமர்க்களமாக இருக்கிறது. ஒவ்வொரு பாடலையும் அருமையாக ரசித்து, உள்வாங்கி அனுபவத்திருக்கிறார் அந்த அனுபவம் இங்கே எழுத்தாக வந்துள்ளது, அருமை.

அதைவிட அருமையான பதிவு: இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே எஸ் ராஜா
பற்றியது. அந்த அமரருக்கு ஒரு கவிதாஞ்சலியாக தனது ஒலித்தொகுப்பு ஒன்றையும் இணைத்துள்ளார். அந்த "பிறந்த நாள்... இன்று பிறந்த நாள்..." ஓசையக்கேட்டவுடன் எனக்குள்ளேயும் இலங்கை வானொலியின் நினைவுகள் வந்துவிட்டது. அதிலும் சுதாகர் சொல்லும் 'குரு' பட உண்மை!

என்ன சொல்லி பாராட்டுவதென்றே தெரியவில்லை. ஒவ்வொருக்குள்ளும் எப்படியெல்லாம் திறமை ஒளிந்திருக்கிறது பாருங்களேன். சத்தியமாக திரு யாழ்சுதாகர் என்பாரை இதுவரை கேள்விப்பட்டதில்லை. அவரை வெளிக்கொண்டுவரும் ஊடகமாக இந்த "வலைப்பதிவு" இருப்பதுகண்டு புளகாங்கிதமடைகிறேன். இதைப்போன்ற திறமைசாலிகள், இலங்கை அன்பர்கள்/நண்பர்கள் அனுதினமும் புதுப்புது வலைப்பதிவுடன் வருகின்றார்கள். அவர்களை வாழ்த்தி வரவேற்போம்.

(பி.கு: மன்னிக்கவும் சுதாகர், BlogDriveல் எப்படி பின்னூட்டம் கொடுக்கவென்று தெரியவில்லை, அதனால் இங்கே.)

Friday, October 01, 2004

லல்லுவின் லொள்ளு

இந்திய ரயில்வே அமைச்சர் மாண்புமிகு லாலு அவர்கள் தான் பதவி ஏற்றதிலிருந்து பல சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். முதலில் காபி,தேனீருக்கு மண்கலையத்தைப் பயன்படுத்தவேண்டும். பின்னர் மோர், இளநீர் விற்க ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று அறிவித்திருந்தார்கள். அதன் பின்னர் ரயிலில் பயன்படுத்தும் இருக்கைகளுக்கு தேங்காய் நார் பயன்படுத்தவேண்டும்.

அந்த வரிசையில் இன்றைய தினசரி ஒன்றில் படித்த ஆக அண்மைய அறிவிப்பு:
ரயில்களில் மக்கள் பல் விளக்க 'வேப்பங்குச்சி' விற்கவேண்டும்.

இது இப்படியே போனால், வேறு என்னென்ன அறிவிப்பு வருமென்று கொஞ்சம் கற்பனைக்குதிரையை ஓடவிடுங்களேன்...

(எனக்கு முதலில் தோன்றியது, கூடியவிரைவில் கோவணம் விற்கப்படும் என்பது - ஆனால் அதைப் பொதுவில் சொல்லி உங்களிடம் வாங்கிக்கட்டிக்கொள்ள விரும்பவில்லை:)

Thursday, September 30, 2004

முத்து நெடுமாறன்

தமிழ் வளர்க்கும் அறிஞர்கள் என்ற வரிசையில், 'முரசு' முத்து நெடுமாறனின் நேர்காணல் நிலாச்சாரலில் வந்துள்ளது. சில வாரங்களுக்கு முன் சிங்கையில் நடந்த அனைத்துலக அரங்கில் தமிழ் மாநாட்டில், உலகில் முதன்முதலாக தமிழில் குறுந்தகவல் சேவையை AnjalMobile மூலம் அறிமுகப்படுத்தினார். தமிழின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முத்து, காசி, சுரதா போன்றவர்கள் செய்யும் சேவை அளப்பறியாதது. வாழ்த்துக்கள்.

Wednesday, September 29, 2004

ஓவியா - கோபி

ஆம் அது ஓவியா - என்று எழுதநினைத்தத்தான் டைப்பினேன்(உள்ளிட்டேன்). ஓவியர் கோபியை, எனக்குப்பிடித்த பெயரான ஓவியா என்றுதானே கூப்பிடவேண்டும்? நண்பர் கோபியின் கற்பனை இல்லம் என்ற தனது சுயமான முதல் ஓவியத்துக்கு நான் எழுதிய பின்னூட்டம்.

என்ன கோபி நான் எதாவது சொல்லுவேன்னு அதுக்கு முன்னாடியே ஒரு லிஸ்ட்லாம் வந்திருக்கு?

உண்மையில் நம்பமுடியவில்லை... பார்த்துவரைவதற்கும், பார்க்காமல் வரைவதற்கும் இவ்வளவு வித்தியாசமிருக்குமா என்று. இதில் அதிசயமான விஷயம் என்னவென்றால்... மற்ற எல்லா பாகங்களைவிடவும் - கஷ்டமான முகம் மிக அழகாக வந்திருக்கிறது. அதிலும், அந்தப்பெண் முகம் அமர்க்களம். (தங்கம் சொல்வது சரிதானோ!?:)

இது சுயமென்றால்... உங்களுக்குள்ளே ஒரு களத்தை நினைத்து, உருவங்களை உள்ளத்தில் உள்வாங்கி ஓவியத்தில் படைத்ததா?

அல்லது

ஓவியத்தைப் பார்க்காமல், மற்ற புகைப்படங்களை மாதிரியாக வைத்து வரைந்ததா?

இது முதல்வகை என்றால் - இரண்டாவவது வகைமூலம் சிறிது முயற்சி செய்துவிட்டு, முதல்வகையை முயலலாமே!?

இங்கு இந்த நிமிடம், இந்தப் பின்னூட்டத்தை எழுதும்போதுதான் உணர்கிறேன், ஓவியம் எவ்வளவு உன்னதம் என்று. பத்து பொருளை சில நிமிடம் காட்டி பிறகு மறைத்துவிட்டு, எது எங்கிருந்தது என்று கேட்டாலே ரெண்டுக்குமேல் காட்ட சிரமப்படும் எனக்கும் - நீங்களே கற்பனைசெய்து (கதா)பாத்திரங்கள் & உண்மையான பாத்திரங்கள் (கூஜா, ஊஞ்சல் இன்ன பிற...) என்று முடிவுசெய்து - அதை ஓவியமாக்குவதென்பது எவ்வளவு பெரிய திறமை? இதை யோசிக்கும்போது இன்னும் கல்சிற்பம்? எதுவும்குறையென்றால் அழித்து/அடித்து செதுக்க முடியுமா என்ன?

எது எப்படியோ கோபி - இந்த 34 வருட வாழ்க்கையில் ஒங்களோட ஒரு ஓவியத்தின் மூலம் - ஓவியத்தின் மீதும், சிற்பங்களின் மீதும் - அதை படைக்கும் உங்களைப்போன்ற ஓவிய, சிற்பக்கலைஞர்களின் மீதே பெரிய மதிப்புக் கொண்டுவந்துவிட்டீர்கள் - என் மனதில்.

மிக மிக நன்றி. தொடர்ந்து வரையுங்கள், வாழ்த்துக்கள்.

என்றென்றும் அன்புடன்,
அன்பு

Friday, September 24, 2004

குடைக்குள் மழை

ராஜாவின் குடைக்குள் மழை பற்றிய விமர்சனத்துக்கு எழில் அவர்களின் பின்னூட்டம் இது:

ராஜா,

ரஸல் க்ரோ நடித்து வெளிவந்த ஆங்கிலப்படமான " A beautiful Mind " - பார்த்திருந்தீர்களேயானால் குடைக்குள் மழை அதன் பாதிப்பிலமைந்த கதை என்று எளிதாகப் புரிந்திருக்கும். சில்வியா நாஸர் எனும் பெண் எழுத்தாளர் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே இப்படம் அமைந்திருந்தது. இப்புத்தகம் நோபெல் பரிசு பெற்ற ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறாகும். ஜான் நாஷ் எனும் கணித மேதை - அவருக்கு இந்த மன நோய் இருந்தது. அதைக் குணமாக்கி நோபெல் பரிசு பெறும் அளவுக்கு அவர் உயர்ந்ததை விளக்கும் புத்தகம் இது. திரைப்படத்தில் சில மசாலாக் காட்சிகள் இருப்பினும் ஓரளவு இயல்பாக அமைந்த திரைப்படம். ரஸல் க்ரொ-விற்கு சிறந்த நடிகர் - ஆஸ்கர் விருது வாங்கித்தந்த படம்.

Posted by: எழில் at September 23, 2004 10:41 PM

நண்பர் எழிலுக்கு என்னுடைய பதில் இது:
(அதை அங்குசென்று படிக்காதவர்களுக்காக 'குடைக்குள் மழை'க்கு நாங்கள் செய்யும் பங்காக இங்கு ஒரு மறுபதிப்பு:)

அன்புக்குரிய எழில்,

குடைக்குள் மழை போல், ரஸல் க்ரோ நடித்திருக்கட்டும் அல்லது யாரோ நடித்திருக்கட்டும். கமலின் சுவாதி முக்தயம்(தானே!?) வந்து ஏழுவருடங்கள் கழித்துத்தான் Forest Gump வந்ததாக அண்மையில் கம்ல் கூறக் கேள்விப்பட்டேன். சண்டியரின் வித்தியாசமான கதைசொல்லும் பாணி ...'ஏதோ' ஆங்கிலப்படைத்தைப் பார்த்ததின் பாதிப்புதானே என்றதற்கு, இராமாயணம்/மகாபாரதம் காலத்துலேயே இதுபோன்ற கதைசொல்லும்பாணி இருக்குது என்றார். வித்தியாசமான, நல்ல படம் வரும்போதெல்லாம் பாராட்டுவதைவிட்டுவிட்டு இது போலதான் போனவருஷமே ஹாலிவுட்டில வந்துச்சே, அங்க வந்துச்சே, இங்க வந்துச்சேன்னு சொல்றத முதலில் விடுங்கப்பா. நீங்கள் சொல்லும் படத்தை சத்தியமாக நான் பார்க்கவோ, கேள்விப்படவோ இல்லை. அதனால், நான் கு.மழை பார்க்கும்போது வித்தியாசமாகத்தெரியப்போகிறது - ராஜாவைப் போல. நாலு பேருக்கு இது போய்சேரும்போது, இதுமாதிரி நாலு நல்லபடம் வர வாய்ப்பிருக்கிறது. தயவுசெய்து அதைக்கெடுக்க வேண்டாமே...

ராஜா சொல்வதுபோல் இது பாமரர்களுக்கான படமல்ல, உங்களைப்போன்ற புத்திசாலிகள் 'நான் இதை ஏற்கனவே' பாத்திருக்கிறனே என்பீர்கள். அதனால்தான், கமல்,பார்த்திபன்,மணி போன்ற வித்தியாசம்பண்ண நினைப்பவர்களும் - நீங்கள் கொடுக்கும்தோல்வியால் நாலு பாட்டு/நாலு பைட்டு ஃபார்முலாவுக்குப் போய்விடுகின்றனர். வேண்டாமே... பிளீஸ்!

நீங்கள் சொல்வதை தகவலாக சொல்லியிருந்தால் நன்றியோடு முடித்திருப்பேன். இதுமாதிரி ஏற்கனவே வந்திருக்கேன்னு, கால்மேலக் கால போட்டுக்கூறும் வெறும் விமர்சனமாக இருந்ததால்தான் இந்தப்பின்னூட்டம். மன்னிக்கவும், பிழையிருந்தால்! (என்ன பண்ண... எங்க பொண்ணு 'எழில்' தவறுசெய்தாலும் இதே கவனிப்புதான் :)

Posted by: அன்பு at September 24, 2004 04:07 AM

Thursday, September 23, 2004

இரக்கமற்ற அரக்கமனம்...

நான் தினமலர் தினமும் படிப்பதில்லை. சற்றுமுன் அலுவலக நண்பரொருவர் இன்றைய தினமலரில் படித்த செய்தியை அதிர்ச்சிமாறாமல் என்னிடம் பகிர்ந்துகொண்டார். அதை உங்களுக்கும் இங்கே... உண்மையா? கணிணி விளையாட்டா என்று தெரியவில்லை. கணினி விளையாட்டாகவே இருக்கக் கடவது.

Tuesday, September 21, 2004

கலாச்சார சீரழிவு

நண்பர் அருண் தனது அகரதூரிகையில் சென்னையில் நடந்த, பெண்ணைக் கேலிசெய்து அவருடைய சாவுக்கே காரணமான கோரநிகழ்வு பற்றி
எழுதியிருந்தார். அந்தப்பதிவுக்கு என்னுடைய பின்னூட்டம் இது:

சம்பவத்தில் இடம்பெற்ற பெண் ஒரு ஆங்கிலோ இந்தியன். அவர்களின் கலாச்சாரம் அதுவாக இருக்கலாம். அவருடன் இன்னொரு பெண்ணும்/பையனும் வந்ததாகவும் அவர்களையும் போலிசார் தேடிவருவதாகவும் படித்தேன். அதனால் அந்தப்பெண்ணைக் குறை சொல்லி பயனில்லை.

கல்தோன்றி மண்தோன்றா... கலாசாரத்தில் வந்த நம் தமிழர்களே இப்படி கலாசாரம் சீரழியும்படி நடந்துகொள்கிறார்களே என்பதை நினைத்தால்தான் மனசு வெம்புகிறது. இங்கு சிங்கப்பூரிலியே நல்ல நிலைமையில்லை - பல பப்/டிஸ்கோத்தேக்களில் இது போன்ற வன்முறை/கொலை நடக்கிறது. அதனால், இதை சட்டம் செய்யும் என்று காத்திராமல், நமக்கு என்ன தேவையென்று ஒவ்வொரு இளையர்களும், அவர்தம் பெற்றோரும் முடிவு செய்யவேண்டும். மேற்கத்தியக் கலாசாரத்தை நாம் கண்ணைமூடிக்கொண்டு பின்பற்ற முடியாது. ஒருகாலத்தில் உடன்படிக்கும் ஆண்,பெண் தங்களுக்குள் பேச இயலாத நிலையிலிருந்து தீடீரென்று - டேட்டிங்க், பப், டிஸ்கோ, அவுட்டிங், கெர்ள்ஃரிண்ட்,
பாய்ஃப்ரண்ட், சும்மா சேந்திருந்தோம் என்பதெல்லாம் வந்ததால் வரும் விளைவுதான் இது.

இது போன்ற நடவடிக்கைக்களுக்கு துணைகிடைத்தால் அவர்களுக்கு மட்டும் நட்டம். அதுபோன்ற வாய்ப்புக் கிடைக்காதவர்களால், இதுபோல் எல்லோருக்கும் நட்டம்.

முன்னொருமுறை இந்தியாடுடேயில்- பள்ளி, கல்லூரி மாணவ/மாணவியரின் செக்ஸ் லீலைகள் பற்றி சிறப்பிதழ் வந்தது. சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் கல்லூரி மாணவிகள், நடுத்தரவயது பெண்களே "அழைத்தால்வரும்" தொழில் புரிபவர்களாக இருக்கிறார்கள் என்ற செய்தி வருகிறது.

இதெயெல்லாம் அறியவரும்போது எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது.
இதுபோன்றவை நடக்காமல் இருக்க பெற்றோர்கள்தான் அதிகம் செய்யமுடியும் என்று தோன்றுகிறது. "...அவன் நல்லவனாவதும், தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே..." என்று வரும். இதில் அம்மாவை மட்டும் பழிசொல்லாமல், பெற்றோர், குடும்பம், சுற்றம் அதிகம் செய்யலாம். நல்லகுடும்பம், சூழ்நிலை வாழ்வை நல்வழிப்படுத்தும்.

இதுபோன்ற இளையர்கள் வருவது - நடுத்தர, தீடீர் பணக்கார வர்க்கங்களில் இருந்துதான்.

அவர்களுடைய பெற்றோர், பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாமல் - அவர்கள் தனது தொழிலிலோ, தனது சுயசந்தோசத்திலோ மூழ்குவதால் வரும் விளைவுதான் இது.

இன்றும், பெற்றோர்/சுற்றம் கண்முன் மனைவியுடைய கையைப்பிடிப்பது, தொடுவதே - ஒரு கலாசார மாற்றமாக நமக்குத்தோணுகிறது. அதேநேரம், இங்கு பேருந்து, ரயில், பொதுவிடம், ரோடு என்று எங்குபார்த்தாலும் - நாய் போன்று நடந்துகொள்வது அவர்களுடைய கலாசாரம். நாம் அதைநோக்கி போய்க்கொண்டிருக்கிறோம். இடையில் இதுபோன்ற பலநிகழ்வுகள் நடக்கும்!

நமது கலாச்சாரம் என்னதான் மாறினாலும் சமுதாயபயம் இருக்கவேண்டும். அது
அழியும்போது நாம் அழிந்து, நமது சந்ததியியனர் உதவாக்கரையாகிவிடும் அபாயமுண்டு.

(பி.கு: மன்னிக்கவும், HaloScan நாலுவரிக்குமேல் எழுத அனுமதிக்காகதால் நான் இங்கே பதிக்கவேண்டியிருக்கிறது. நண்பர்களே... ஏன் Haloscanஐத் தூக்கிவிட்டு பிளாக்ஸ்பாட்டுடைய கமெண்ட் பெட்டி பயன்படுத்தலாமே!?)

Monday, September 20, 2004

சிகரங்களை நோக்கி - வைரமுத்து

மனிதா!

உனக்கு முன்னால் இருந்து மறைந்த எல்லா மனிதர்களையும் இந்த நூற்றாண்டில் வென்றுவிட்டாய்.

வாழ்த்துக்கள்.

உன் அறிவாலும் அறிவியலாலும் தூரத்தையும் நேரத்தையும் சுருக்கிவிட்டாய்.

நன்றி.

இனி அடுத்த நூற்றாண்டில் ஒவ்வொரு மனிதனின் தலைக்கு மேலும் ஒரு செயற்கைக்கோள் பறக்க விடுவாய்.

மகிழ்ச்சி.

மனிதன் தான் விரும்புகிறவரைக்கும் மரணத்தைத் தள்ளிப்போடும் மந்திரத்தையும் நீ கண்டுபிடித்துவிடுவாய்.

அற்புதம்.

ஒலிவேக வாகனம் உற்பத்தி செய்வாய்.

அபாரம்.

ஒன்றை மட்டும் மறந்துவிடாதே.

மனிதநேசம் இருக்கட்டும்; இந்த மண்மண்டலம் இருக்கட்டும்.

நமக்கு முன்னே வாழ்ந்தவர்களின் சுவாசமெல்லாம் இந்தக் காற்றுமண்டலத்தில் இன்னும் இருக்கிறது.

இருக்கட்டும்.

* * * * * * * * *

கவிப்பேரரசு வைரமுத்துவின் "சிகரங்களை நோக்கி" (கவிதை/கதை/கட்டுரை) நூலின் அடிவாரத்தில் கவிஞரின் வரிகளவை. இந்த நூலின் முதல்பதிப்பு 1992-ல் வெளியானது. அன்று முதல், எனக்குப்பிடித்த கவிஞரின் புத்தகங்களில் தலையாயதாக இன்று வரை இருந்து வருகிறது. இதுவரை படிக்காத, ஆர்வமுள்ள நண்பர்கள் இருந்தால் - தேடிப் படியுங்கள், கண்டிப்பாக ரசிப்பீர்கள்.

Thursday, September 16, 2004

தொழில்நுட்பம் - இணைய தகவல்தளம்

அன்பர்களே இந்த வளைத்தளத்திற்கு சென்றிருக்கின்றீர்களா? தற்செயலாக ஏதோ தேடிக்கொண்டிருந்தபோது சிக்கியது. தனிக்குறியில் வடிவமைக்கப்பட்ட, தொழில்நுட்பத்தை தமிழில் கொடுக்கும்முகத்தான் அமைக்கப்பெற்றது. நேரம் கிடைக்கும்போது சென்றுபார்த்து அவர்களுக்கு ஒருவரி எழுதிப்போடுங்கள், ஊக்குவிப்பாக...தொழில்நுட்பம்

நண்பர் நவன் 'லினக்ஸ் உலகம்' ஆரம்பித்திருக்கிறார். இவைபோல நிறையவரவேண்டும். என்னைச்சுற்றியிருக்கும் சீன, ஜப்பானியர்கள் கணிணி/இணைய/புத்தகம் அனைத்தையும் அவர்கள் மொழியில் பாவிப்பதுபோல் நம்மவர்களும் பயன்படுத்தவேண்டும். அந்தமுயற்சியில் இறங்கும் இதுபோன்றவர்களை வரவேற்போம்.

Friday, September 10, 2004

புரூணை சுல்தான்

நேற்று என்னுடைய 'அரச திருமணம்' பற்றிய பதிவில் நான் கேள்விப்பட்டாதாக சில விஷயங்கள் எழுதியிருந்தேன். அது தொடர்பாக: New Internationalist magazine, May 2000

அந்தக்கட்டுரையின் ஒரு பகுதி இங்கே:
....
Well, a sizeable chunk of it went on the Sultan's palace, monstrosity that boasts 1,788 rooms and is larger than the Vatican-in a tiny country with just 300,000 inhabitants. When the Sultan's daughter turned 18 he bought her an Airbus. For himself he prefers his own jumbo jet, originally designed to carry over 400 people.
Great skill in extravagance has also been acquired by his brother, Prince Jefri. Having heard of Disneyland, he decided to build the Jerudong Park Playground in the capital, Bandar-Seri Begawan, at a cost of $1 billion.
Between them, the brothers Bolkiah own London's Dorchester Hotel, the New York Palace and the Plaza Athenee in Paris. After the Sultanate's independence from Britain in 1984 they bought 2,000 luxury limousines and became the world's biggest customers for Rolls Royce motor cars.

மேலும் சில தொடர்புகள்:

Brunei Sultan's Automotive Empire

Brunei starts to face up limit of natural wealth

Brunei, a nation-state of emergency, luxury and fantasy

TROUBLED KINGDOM

His Majesty The Sultan s Flight Brunei Royal Flight

Thursday, September 09, 2004

குரங்கு குல்லாய்க்காரன் கதை (புதிய பதிப்பு)

விகடனில் வந்த இந்தக்கேலிச் சித்திரத்தை இட்லி வடையில் வெளியிட்டு இருந்தார்கள்.


கார்ட்டூன் பற்றிய என்னுடைய பின்னூட்டம்:
(Haloscan என்னுடைய நீளக் கமெண்டை ஏற்றுக்கொள்ளாததால் (!?) இங்கே.)

சில தினங்களுக்கு முன்னர் இந்த குரங்கு/குல்லாய் கதையின் தொடர்ச்சி/மேம்படுத்தப்பட்ட பதிப்பு மின்னஞ்சலில் வந்தது, நீங்களும் படித்திருக்கலாம்.

"... அந்த குல்லாய்க்கார இளைஞனும் தான் அணிந்திருந்த குல்லாயைக் கழட்டி வீசினானாம். அதையடுத்து (தாத்தா சொன்னமாதிரி) குரங்குகளும் வீசியெறியும் என்று எதிர்பார்த்திருந்தான்.

அப்போது (கதையின் எதிர்பாரா திருப்பமாக) ஒரு குரங்கு மேலிருந்து ஓடி வந்து கனநேரத்தில் அவன்வீசிய குல்லாவையும் எடுத்துக்கொண்டு மேலே சென்றதாம். பின்னர் அங்கிருந்து கொண்டு சொல்லியதாம்:
'மடையா... ஒனக்கு மட்டும்தான் தாத்தா இருப்பாரா?' என்று".

அதனால, வெங்கையா உமாபாரதி மீண்டும் பதவி ஏற்கமாட்டார்னு - அறிக்கைகொடுத்துண்டிருக்கும்போதே, காங்கிரஸ் வேறுயாராவது பதவியேற்க ஏற்பாடு பண்ணிவிடப்போகிறது.

மதன் சார் இந்தப்புதுக்கதையப் படித்தாரா எனத் தெரியவில்லை. இந்தவார இறுதியில் அவர் சிங்கை வரும்போது, முடிந்தால் கேட்கவேண்டும். ஆம், கமலுடன் மதனும் கலந்து கொள்கிறார் அனைத்துலக அரங்கில் தமிழ் கருத்தரங்கில்.

மங்கலம், குழுஊக்குகறி, இடக்கரடக்கல் - நாஞ்சில் நாடன்

இருந்தாலும் இதெல்லாம் அதிகமில்லையா...?
அல்லது இப்படியெல்லாம் எழுதினால்தான், உயிர்மை-யில் பதிப்பிப்பார்களா?
எதைப்பற்றியா? மேலிடத்துச் சமாச்சாரம்...- Sify.com

40 வயதுக்குட்பட்ட கோடீஸ்வரர்கள்

நாற்பது வயதுக்குட்பட்ட கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடம் DELL-ன் மைக்கல் டெல்-லுக்குத்தான். முதல் பத்து இடங்களில் பெரும்பாலோனோர் தகவல்தொழில்நுட்பம், இணையம் தொடர்பான இ-பே, கூகிள், யாஹூ போன்றவைகள் சார்ந்தவர்கள்தான். Dell is richest American under 40

அரச திருமணம்

புரூணை மன்னர் சுல்தான் போல்கியாவின் மகன் இளவரசர் அல்முட்டாடி பில்லா
போலிகியா (30), திருமணம் ஒருவாராத்துக்கு மேலாக ஒரு விழாவாகவே
கொண்டாடப்பட்டு வருகிறது. 17வயதுப் பெண் ஒருவர் அரசகுலத்துக்குச் செல்கிறார்.
இங்கு சிங்கையிலிருந்து பிரதமர், மூத்த அமைச்சர் (முன்னாள் பிரதமர்), மதியுரை
அமைச்சர் (சிங்கப்பூரின் & இன்றைய பிரதமரின் தந்தையும், முதல் பிரதமரும்) ஆகிய
மூவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளச் சென்றுள்ளனர். அங்கு மூன்று நாட்கள் திருமண
நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். இதிலிருந்தே சிங்கப்பூர், புருணே சொந்தம் புரியும்.

இந்தோனிசியா பிரதமர் மேகாவதி, பிலிப்பைன்ஸின்
அரோயோ, மலேசியாவின் படாவி ஆகியோரும் சென்று சேர்ந்து விட்டதாக செய்தி.
உலகின் மற்ற பல நாடுகளில் இருந்தும் தலைவர்கள் வந்தவண்ணம் உள்ளனர். Bruneians revel in wedding festivities

இந்த நேரத்தில் இன்னொரு தகவல்: சிங்கையின் பண மதிப்பும், புருணேயின் பண
மதிப்பும் ஒன்றுதான். இங்கு சகஜமாக புருணே காசும் எந்தக் கடையிலும் கொடுப்பார்கள்,
வாங்கிக்கொள்வார்கள். ஆனால் நான் இதுவரை பார்த்ததெல்லாம் $1 வெள்ளி
நோட்டுதான்.
எங்கள் சிங்கையின் சார்பில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட $10,000 நாணயமதிப்புகுரிய
4 நாணயம் வெளியிடப்பட்டு பரிசளிக்கப்படுகிறதாம். ஹீம்... இதெல்லாம் நம்ப
சுல்தானுக்கு ஒரு இதுவா... திருமணம் நடைபெறும் அரண்மனையில் 1,788 அறைகள்
இருக்கிறதாம்.
சுல்தானைப்பற்றி முன்னர் கேள்விப்பட்ட செய்திகள்:
1) வளர்ப்பு மகன் திருமணத்துக்கு லெக்சஸ் கார் கொடுத்தது ஒரு விஷயமா என்ன? நம்ப
சுல்தான் தனது மகள் பிறந்த நாளுக்கு ஒரு விமானம் வாங்கிக்கொடுத்ததாகவும். அதை
மகளுக்குப் பிடித்த வண்ணம் மாற்றி அடிக்கவே பல ஆயிரம் வெள்ளிகள் செலவழித்ததாகவும்
கேள்வி.
2) அவருடைய பிறந்தநாள் புருணேயின் அரசு விடுமுறை. அவருடைய ஒரு பிறந்த
நாளுக்கு - மைக்கல் ஜாக்ஷனின் கச்சேரி நடந்தது.
3) உலக அழகி போட்டி நடைபெறும் அரங்கின் முதல் சில இருக்கைககள் இவருக்காகவே
ஒதுக்கப்படும்.
சரிங்க அதெல்லாம் இருக்கட்டும்... இந்த மன்னர்களெல்லாம் எப்படி உருவானார்கள்?
இன்னும் எப்படி இப்போதும் தொடர்கிறார்கள் என்று தெரியவில்லை. நம்ப இங்கிலாந்து
ராணி, அதான் கையில ஒரு பைய மாட்டிட்டு அவ்வப்போது காட்சி தருவார்களே!?
இதுபோல், மலேசியாவிலும் மன்னர் இருக்கிறார், தாய்லாந்து மன்னர் எல்லாம்
அவ்வப்போது அரசு மாறும்போது செய்தியில் தோன்றுவார்கள்.
இந்த மன்னர்களைப் பற்றி, எனக்கெதாவது சொல்லுங்களேன். அல்லது இது தொடர்பான
எதாவது சுட்டி இருந்தாலும் சொல்லுங்க...

அரசதிருமண புகைப்படங்கள்

என்னுடைய முந்தையபதிவில் சில தொடுப்புகள் இங்கு சிங்கையின் Straits Times-ல் இருந்து கொடுத்திருந்தேன். ஒருவேளை அங்கு சென்று பார்க்காதவர்களுக்காக...

மணமகனுக்கு அவர் தாயார் மருதாணி பூசும் சடங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்


மணமகளுக்கு மாமனார் மன்னர் சுல்தான் மருதாணி பூசும் வைபவத்தின் போது..


சிங்கை அரசின் திருமணப்பரிசு

மலிவுவிலை விமானசேவை

இந்த மலிவுவிலை விமானசேவையைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
கடந்த சில மாதங்களாக சிங்கை, மலேசியாவில் சூடு பறக்கிறது.முதலில் புகையைக்கிளப்பியது ஏர் ஏசியாதான். சிங்கை ->
கோலாலம்பூர் விமானக்கட்டணம் சில நூறு சிங்கப்பூர் வெள்ளிகள் என்ற நிலையில்,
தீடீரென்று இந்த ஏர் ஏசியா கட்டணம் $9 மட்டும்தான் (அதாங்க ஒன்பது வெள்ளி
மட்டும்தான்) என்று அறிவித்தது. ஆனால், விமானம் மலேசியாவின் ஜொகூரிலிருந்து
கிளம்பும் - அதே நேரத்தில் சிங்கை முதல் ஜொகூர் வரை இலவச பேருந்து சேவையும்
உண்டு என்றெல்லாம் அறிவித்தது. மேலும், ஏர் ஏசியா சிங்கப்பூரின் சாங்கி விமான
நிலையத்தை பயன்படுத்த அனுமதிகேட்டும், கட்டணத்தைக் குறைக்கவேண்டும் என்றும்
கேட்டுக்கொண்டது. முதலில் இதில் அதிகக் கவனம் செலுத்தாத சிங்கை அரசு, மலேசியா
தவிர்த்து - ஏர் ஏசியா பாங்காக், ஆஸ்திரேலியாவின் காண்டாஸும் இதுபோன்ற சேவை
வழங்கப்போவது அறிந்து - உடன் விழித்துக்கொண்டு, மலிவுவிலை விமானச்
சேவைக்கென்றே ஒரு விமான முனையம் கட்டப்படும் என்றும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
முதலீட்டுடன் வேல்யுஏர் ஆரம்பிப்பதாக அறிவித்தது.
உடனே சிங்கப்பூரிலிருந்தே டைகர் ஏர்வேஸ் தொடங்கும் அறிவிப்பு. அப்புறம், சாங்கியிலிருந்தே பாங்காக்
செல்லும் 'தாய்-ஏர் ஏசியா' அறிவிப்பு. அதே மாதிரி விலையிலும் ஒருத்தர் $9 என்று
அறிவித்தால் இன்னொருவர் $1 என்று அறிவித்தார்கள். (அந்த விலைகளுக்குப்பின்னால்
வழக்கம்போல * ** # @ ! 1 ... எல்லாம் இருப்பது வேறு விஷயம்) இன்று
இன்னும் கேவலமாக சிங்கப்பூர் -> தாய்லாந்தின் பாங்காக்கு $0.49 காசுகள் (இங்கு
பேருந்தில்கூட குறைந்தபட்சக் கட்டணம் $0.60 காசு).
இதுபோல் இந்தியாவிலும் நம்ப மல்லையா 'கிங்ஃபிஷரை'ப் பறக்கவிட இருப்பதாகப்
படித்தேன், இங்கும் பதிந்தது நினைவிருக்கலாம். நேற்றைய செய்த்தித்தாளில் டெக்கான்
ஏர்லைன்ஸ் ரூபாய் 500-க்கு சென்னையிலிருந்து - டெல்லிக்கு அழைத்துச் செல்வதாக
கேள்வி.
எது எப்படியிருந்தாலும் சிங்கப்பூர் -> சென்னை மட்டும் $850 முதல் $1200-தான்
இன்னும். பாங்காக் அல்லது கொழும்பு அல்லது கொச்சின் வழியாக போவதாக இருந்தால்
$650ல் முயற்சி செய்யலாம். ஆனால், அதே பயணநேரம் கொண்ட ஹாங்காங்-க்கு $
300-க்கெல்லாம் சீட்டு கிடைக்கிறது - இதற்கு எப்போ விமோசனம் கிடைக்குமோ!?
அதெல்லாம் சரிப்பா... இதெல்லாம் எப்படி சாத்தியம் என்பதை இந்த மரமண்டைக்கு
கொஞ்சம் சொல்லுங்கப்பா ... பிளீஸ்!

Monday, August 30, 2004

அந்திமழையின் மேலும் சில துளிகள்...

***

SPB ஒவ்வொருமுறை பாடிமுடிக்கும்போதும் ஒரு பெண்மணி மேடையின் பின்புறம் இருந்து ஓடிவந்து யார்மூலமாவது அடுத்த பாடலுக்கான பக்கத்தைப் புரட்டுக்கொண்டுவந்து கொடுப்பதும், பாடிய நூலை வாங்கிச்செல்வதும் பல பாடலுக்குத் தொடர்ந்தது. ஆனால் மேடையின் முன்புறமோ, SPB-யிடம் நேரடியாகவோ வந்து வாங்கிச் செல்லவில்லை. ஒருபாடலின் இறுதியில் வழக்கம்போல் நோட்டை வாங்க வந்து ஓரத்தில் நிற்கும்போது SPB "நோட்டை கையை நீட்டிக் கொடுக்காமல், இங்க வாங்கம்மா, இங்க வாங்க, பக்கத்துல வாங்க, முன்னாடி வாங்கன்னு சொல்லிண்டே கிட்டத்தட்ட இழுத்தணைத்து அழைத்து வந்தார்..."
உடனே ஜானகிம்மா சொன்னாங்க, 'அவங்க Mrs. SPB' என்று... இப்போது சிலகாலமாக அவங்களும் உடன்வந்து, இப்படி உதவிகள் பல செய்கிறார்கள் என்று SPB சிலாகித்துக்கூறினார்கள்.

***

பிண்ணனி இசை அளித்த 'ரகுராஜ் சக்ரவர்த்தி' இசைக்குழு எனக்குத்தெரிந்து 80-களின் பின்பகுதியில் இருந்து சென்னையில் பலநேரம் அன்றாடம் நிகழ்ச்சி கொடுக்கும் ஒரு குழு. சென்னையின் பல சுவர்கள் - இவர்களுடைய நிகழ்ச்சி 'ராஜா முத்தையா மன்றத்தில்' நடைபெறுவதாக பெரிய பெரிய சுவரொட்டிகளை சுமந்து நிற்கும். அந்த அனுபவம் பெரிதாகக் கை கொடுத்தது.

***
இவையெல்லாவற்றுக்கும் மேலாக - வேறு பாடக, பாடகியர் இன்றி, இசையமைப்பாளர் யாருடைய ஆளுமையும் இல்லாத ஒரு சுதந்திரம் அவர்களுக்கு மேலும் ஆத்மார்த்தமாக பாட இயைந்தது.

***

இந்த இசை நிகழ்ச்சிகள் ஏன் கடற்கரை கலையரங்கு எஸ்பிளனேட் இசையரங்கில் (Concert Hall) அல்லாமல் நாடக அரங்கில் (Theatre) நடத்தப்படுகிறது? சற்றுமுன் அரங்கவாடகையை ஒப்பிட்டபோது ஒன்றும் அதிக வித்தியாசமில்லை. அவர்கள் குறிப்பிட்டுள்ள எல்லாத்தகுதியுமிருக்கிறது.

இந்த நேரத்தில் எஸ்பிளனேட் பற்றி:

சிங்கையை ஆசிய கலைகள் மையமாக ஆக்கவும், கலைகளை ஊக்குவிக்கவும் பெரும் பொருட்செலவில் 2002ம் ஆண்டின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்தக் Esplanade - Theatres On The Bay - கடலோரக் கலையரங்கம். இது சிங்கப்பூரர்களால் அதிகம் ருசிக்கப்படும் டுரியன்* பழ வடிவிலேயே வடிவமைக்கப்பட்டது. சிட்னி ஓபரா ஹவுஸ், விக்டோரியா ஹால் போல இதுவும் பெயர்பெற முயற்சி நடக்கிறது.

*டுரியன் - சிங்கை, மலேசியா வந்திருந்தால் இதைப் பார்த்திருக்கும் வாய்ப்புண்டு. வராதவர்களுக்கு - சிங்கை அரசால் ரயிலில் எல்லாம் எடுத்துச் சென்றால் அதன் நறுமணம் 'வீசும்' என்ற தடை செய்யப்பட்ட ஒன்று. ஆனால், அந்த வாடையை சகித்து சாப்பிட ஆரம்பித்தால் விடமாட்டார்கள்!. ருசி பிடித்தவர்களுக்கு பல உணவுவகைகள் டுரியன் சுவையில் கிடைக்கும். நான் இதுநாள் வரை ருசித்ததில்லை. நண்பரொருவர் கூறினார் - வாரயிறுதியில் டுரியன் வியாபாரம் சூடு பிடிக்குமாம், மலிவுவிலை வயாகரா என்பதால்!

அந்திமழை

ஒரு இனிய இசைமழை அந்தியில் ஆரம்பித்து பின்னிரவு இனிதே நிறைவுற்றது.
ஆம்... பிரபலப் பிண்ணனிப் பாடகர் எஸ்.பி.பாலா, பாடகி ஜானகி ஆகியோரின் அந்திமழை இன்னிசை மழை மன்னிக்கவும், நிகழ்ச்சியைத்தான் குறிப்பிடுகிறேன்.

எஸ்பிளனேட் கலையரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட நேரத்துக்குட் தொடங்கிவிடும் என்று அனைவரும் தெரிந்துவைத்திருந்ததால், மற்ற இந்தியக்கலை நிகழ்ச்சிகளுக்கு வருவது போலல்லாமல் குறிப்பிட்ட நேரத்துக்குமுன் பெரும்பாலோனோர் வந்தமர்ந்திருந்தது - நமக்கும் புதியது, நிகழ்ச்சிக்கும் முதல் சிறப்பு.

ஒலி 96.8ன் ரஃபியின் ஒரு சிறிய முன்னுரைக்குப்பின், திருமதி ஜானகி 'செந்தூரப்பூவே... செந்தூரப்பூவே...' ஆரம்பித்தார்கள், அரங்கமேகூடி கையொலி எழுப்பியது. அப்புறம், நிகழ்ச்சியின் தலைப்புப்பாடலான 'அந்திமழை பொழிகிறது...' திருமதி ஜானகி, திரு பாலா இருவருமிணைந்து பாடினர் - மீண்டும் ஒரு பெரிய பாராட்டொலி - ரசிகர்களிடமிருந்து. அப்புறம் அதைவிடச்சிறப்பாக 'மலரே மௌனமா...' அனைவரையும் ரசிக்கவைத்தது.

இதற்கிடையில் பாலாவும், ஜானகியும் பாடுவதைவிட அவர்களுக்கிடையே உள்ள புரிந்துணர்வு மிகவும் பாராட்டத்தக்கது. பாலா அந்தப் பாடலைப்பற்றி கூறும்போது, 'இந்தப் பாடல் நான் தனியா டிராக் பாடினேன், ஜானகிம்மா தனியா வந்து பாடினாங்க. இருந்தாலும் இருவரும் ஒரே நேரத்தில் பாடிய உணர்வு இருக்கும். அதான், எங்களுக்குள்ளிருக்கும் 34 வருட புரிந்துணர்வு. நான் எந்தந்த வரிகள்ள குறும்பு பண்ணுவேன்னு அவங்களுக்குத்தெரியும், அவங்க எங்கங்க சில்மிஷம் பண்ணுவாங்கன்னு எனக்குத்தெரியும். அதன்படி, எங்களால அப்படிப் பாடமுடிந்தது' என்று கூறிவிட்டு, பாடும்போதே ஜானகி அவர்களை கொஞ்சம் சீண்டுவது போல் செய்தார்கள். அதற்கு திருமதி ஜானகி, பாடல் முடிந்தபின் சொன்னார், 'சின்னப் பையன், இப்படித்தான் எதாவது குறும்பு பண்ணிண்டே இருப்பாரு... போறாங்க விடுங்க' என்று சொல்லி சிரித்தார்கள். உடன் பாலா, 'அம்மா... நான் எதாவது தப்பு செஞ்சா அடிங்க... ஹிட்டு மேல ஹிட்டு கொடுத்த நீங்க என்ன 'ஹிட்'டுனா என்ன தப்பு?' என்று கூறி சிர்த்தார்கள். இந்த ஒரு தாய், பிள்ளை சேஷ்டை நிகழ்ச்சி முழுவதும் சர்க்கரையாக இனித்தது.

அப்புறம், 'அடியே மனம் நில்லுனா நிக்காதடி' உடன் அந்த உணர்வை மாற்ற 'தேனே தென்பாண்டி மீனே...' அப்புறம் பாடல் ஒலிப்பதிவின்போதே பாலாவை சிரமத்துக்குட்படுத்திய 'சங்கீத ஜாதிமுல்லை...' அனயாசாமாக அவருக்குள் கட்டுப்பட்டது. அப்புறம் திருமதி ஜானகியின், 'நெஞ்சினிலே நெஞ்சினிலே...', 'ஊருசனம் தூங்கிடுச்சு' என்று தொடர்ந்தது. அப்புறம் பாலாவின், 'காதலின் தீபமொன்று...'

மீண்டும் ஜானகி 'காற்றில் எந்தன் தீபம்...' ஏற்றி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார்கள். அதைவிட, 'மச்சான... மச்சானப் பாத்தீகளா...' பாடலை கும்மாளமாய்ப் பாடி, அனைவரையும் தாளம்போடச்செய்து பாடலின் முடிவில், அந்தப்பெண் தன்னோட மச்சான், தனக்கில்லாமல் வேறொரு பெண்ணுக்கு நிச்சயமானவுடன், அதே வரிகளை சோகமாக அந்தப்பெண் பாடுவதாகப் பாடியது அனைவருடைய் மனத்தையும் பிழிந்தது உண்மை.

அதன்பின், பாலா அவர்கள் 'இசைக்கு மொழியில்லை, இப்பல்லாம் என்னிடமோ ஜானகியம்மாவிடமோ 'உங்களுடைய தாய்மொழி எது?' என்று கேட்டால் 'இசை' என்போம். இசையென்பது தெய்வ மொழி' என்றெல்லாம் ஓரளவு முன்னுரை பேசிவிட்டு, 'தேர மேரா பீச்சுமே..' ஹிந்தி பாடலை ஆரம்பித்தவுடன் மீண்டும் ரசிகர் கைதட்டலில் அரங்கமே அதிர்ந்தது என்றுதான் சொல்லவேண்டும். அதன் தொடர்ச்சியாக, 'சங்கரா...' என்ற சங்கராபரண தெலுங்குப்பாடலையும் உச்சஷ்தாயில் பாடி பாராட்டை அள்ளிச்சென்றார். சில பாடல்களுக்குப்பிறகு, குழுப்பாடகி திருமதி ரம்யா-வுடன் இணைந்து 'சக்கரை இனிக்கிற சக்கரை...' ஹிட்டைக் கொடுத்தார்.

அப்புறம் இசைஇமையங்கள் இளையராஜா, விஷ்வநாதன் இணைந்து இசையமைத்த 'தேடும் கண்பார்வை...' பாடலை பாலாவும், ஜானகியும் தனது தேனினுமினிய குரலில் கொடுத்தனர். அப்புறம் 'குட்மார்னிங்க்... டூத்பேஷ்டிருக்கு, பிரஷ் இருக்கு எந்திரு மாமா...' என்று ஜானகி குழந்தை மிகவும் இனிமையாகப் பாடி அனைவரையும் ஆச்சரியத்துக்குட்படுத்தியது.

இடையில் உள்ளூர் பாடகர் விஜய் ஆனந்த், எஸ்.பி.பாலாவுடன் இணைந்து 'என்னம்மா கண்ணு சவுக்கியமா...' பாடலை அருமையாக, தைரியமாகப் பாடினார். பாலாவும் நல்ல ஆதரவு கொடுத்து, பாராட்டுத் தெரிவித்தது அவருடைய உயர்ந்த பண்பைப் பறைசாற்றியது. பாடல்வரியொன்றில், விஜய் 'யானைக்கு சின்ன்பூனை போட்டியா' என்று தொடர்ந்தார். பாலா உடனே சிர்த்துக்கொண்டே, 'யாரு யானை ஆரு பூனை?' என்று கேட்டு அனைவரையும் சிரிக்கவைத்தார்கள்.

இவையெல்லாவற்றுக்கும் மேலாக, ஒன்பது நபர் மட்டும் கொண்ட - ஆனால் நவமணிகள் - சென்னை ரகுராஜ் சக்ரவர்த்தி இசைக்குழுவினர் பாராட்டுக்குரியவர்கள். அருமையான இசை. எப்போதும்போல, இந்தக்குழுவிலும் என்னை மிகவும் ஈர்த்தவர் தப்ளா கலைஞர்தான். திரு. மதுசூதனனுடைய பத்து விரலும் நர்த்தனமாடுகிறது என்றுதான் சொல்லவேண்டும். அதிலும், முன்னேற்பாடு ஏதுமில்லாமல் ரசிகர்கள் வேண்டுகோளுக்கினங்க திருமதி. ஜானகி - ஹிந்தியின் பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் பழைய பாடலான 'மெஹர்...'ருக்கு அவர் வேறொரு தாளத்தில் ஆரம்ப்பித்து - பாலா கொடுத்த குறிப்பை கனநேரத்தில் புரிந்து தாளக்கட்டை மாற்றி பாடலுடன் இயைந்தது அருமை. அதே போல் ஏற்பாடில்லாமல், 10.30 மணிக்கும் மேலாக ரசிகர்களின் வேண்டுகோளுக்கினங்க பாடிய, 'மார்கழித் திங்களல்லவோ...', 'இஞ்சி இடுப்பழகா' வும் அருமை.

ஆனால், எஸ்பிளனேட் அரங்கில் இதுதான் முதல் இந்திய திரையிசை நிகழ்ச்சியல்ல. கடந்த வருடத்தில் பாடகி சித்ரா, மது பாலகிருஷ்ணாவுடன் வந்து இதே போல் ஒரு சிறிய இசைக்குழுவுடன் ஒரு அருமையான நிகழ்ச்சி கொடுத்தார்.

சரி எது எப்படியிருந்தாலும், பாலாவும் மற்றும் குழுவினரும் பாராட்டியபடி ஒரு அருமையான ரசிகர் கூட்டத்தை சந்தித்த நிறைவு. 2000 பேர் அமர்ந்து அரங்கே நிறைந்திருந்தாலும், கை தட்டல் ஓசை ஒன்றுதான் கேட்டது நிகழ்ச்சியின் இறுதிவரை. மொத்தத்தில் ஒரு அருமையான இசைநிகழ்ச்சிக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது என்பது மட்டும் உறுதி.

Saturday, August 28, 2004

நீளம் தாண்டும் அஞ்சு

ஒலிம்பிக் நீளம்தாண்டுதலின் இறுதிச்சுற்றுக்கு தகுதிச்சுற்றில் அஞ்சு தனது முதல் முயற்சியிலேயே குறைந்தபட்சத்தகுதியான 6.65 மீட்டரைவிட அதிகமாக 6.69 தாண்டிவிட்டதால் ரொம்ப சந்தோஷமாக இருந்தேன்.

ஆனால் இறுதியாட்டத்தில் இப்படியா இந்த மூண்று ரஷ்யப் பெண்களும் 7 மீட்டருக்கு சர்வசாதாரணமாகத் தாண்டுவார்கள்? பாவம், அஞ்சுவின் கனவே 7 மீட்டர்தான் - அவரால் சராசரியாக 6.83மீ தாண்டி 6-வதாகத்தான் வரமுடிந்தது.

ஹீம்... என்னசெய்ய அடுத்த ஒலிம்பிக்லயாவது பதக்கம் வாங்கட்டும் - அப்போ அந்த மூணு பொண்ணுங்களுக்கும் இன்னும் நாளுவயது கூடி வயசாகிடும்ல... அய்யோ இவருக்கும் கூடிடுமே! என்னவோ பண்ணுங்கப்பா இப்படி யாராவது தனிப்பட்ட முறையில் சாதனைசெய்து பதக்கம் வாங்கினாத்தான் ஆச்சு.

ஹாக்கி குழு/நிர்வாகம் சண்டையெல்லாம் வேளைக்கு ஆகாது.

Wednesday, August 25, 2004

தேசியதினப் பேரணி உரை

சிங்கப்பூர் புதிய பிரதமர் லீ சியன் லூங் அவர்கள் கடந்த ஞாயிறு (22/ஆகஸ்ட்) தேசியதினப் பேரணி உரை நிகழ்த்தினார்கள்.

சிங்கப்பூரின் தேசியதினம் (சுதந்திரதினம்) ஆகஸ்ட் 9 என்றாலும் அன்றிரவு தேசியவிளையாட்டரங்கில் மரியாதை அணிவகுப்பு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், வாணவேடிக்கை என்று முடிந்துவிடும் - யாரும் உரையாற்றுவதில்லை. அதற்குப் பதில் தொடரும் 2-வது ஞாயிறன்று (இந்தமுறை 22/ஆகஸ்ட்) எதாவது உள்ளரங்கில் கடந்தசில வருடங்களாக தேசியப்பல்கலைக்கழக கலாச்சார மைய அரங்கில் நடப்பது வழக்கம். (இங்குதான் அனைத்துலக அரங்கில் தமிழ் நடக்க இருக்கிறது).

துணைப்பிரதமர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடித்தளத் தலைவர்கள் (Grassroot Leaders), தொழிலதபர்கள், நிறுவனத்தலைவர்கள், ஊடகப்பிரதிநிதிகள், பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் என்று அழைக்கப்பட்ட (அது அழைத்துவரப்பட்ட... இது வேற...) பிரதிநிதிகள் ஏறக்குறைய 2000 பேர் கலந்துகொண்டனர். வானொலி, தொலைக்காட்சி, வலை-யில் நேரடி ஒலி/ஒளிபரப்பானது. நமக்கு வழக்கம்போல் 'வசந்தம் சென்ட்ரல்'தான் (தமிழ் சேவை - நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் பிரதமரின் உரை உடனுக்குடன் ஒலிபரப்பப் படும்). இரவு 8.15 மணிக்கு ஆரம்பித்து 11.20 வரை சளைக்காமல், வந்திருந்தவர்களுக்கும் இனிமையாக மலாய், மாண்டரின்(சீனம்), ஆங்கிலத்தில் 3 மணி நேரம் தன்னுடைய முதல் தேசியதினப் பேரணி உரை நிகழ்த்தினார்.

முன்வரிசையில் முதல் பிரதமரும் (25 வருடம்) பின்னர் மூத்த அமைச்சரும் (14 வருடம்) இப்போது மதியுரை அமைச்சருமான (Minister-Mentor) பிரதமரின் தந்தை லீ குவான் இயூ மற்றும் முந்தைய பிரதமரும் (14 வருடம்), தற்போதைய மூத்த அமைச்சர் (Senior Minister) கோ சோ டொங் அவர்களும், நிரந்தரத் துணைப்பிரதமர் டாக்டர் டோனி டான், புதிய து.பி பேராசிரியர் ஜெயக்குமார், மற்ற அமைச்சர்கள் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர்.

பல முக்கியக் கொள்கை மாறுதல்கள் (இளையர்களை அரசியலில் பங்கேற்க அழைப்பு, உள்ளரங்கு/பேச்சாளர் சதுக்கத்தில் கூட்டம் நடத்த காவல்துறை முன்அனுமதி தேவையில்லை, கேசினோ தொடங்க அனுமதியளிக்கப்படலாம்..., பயன்படுத்தும் அளவுக்கு மட்டும் மின்கட்டணம் இன்னும் பல...)

மற்றும் சில சலுகைகளாக - திருமணமாகாதவர்கள், குழைந்தை பெற்றுக்கொள்ள் நேரமில்லாதவர்களுக்காக, (முன்மாதிரியாக அரசு ஊழியர்களுக்கு) வாரத்தில் 5 நாள் வேலை,

12 வயதுக்குள்ள குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வைத்திருக்கும் வேலையால் தீர்வை (இப்போது $350) குறைப்பு,

வருமானவரி தள்ளுபடி ஒரு குழந்தை மட்டும் உள்ளவருக்கும் நீட்டிப்பு... என்று சில சலுகைகள் அறிவித்தார்.

ஒரே சீனக் கொள்கை மறு உறுதி செய்யப்பட்டது. தைவானுக்கு சிங்கப்பூர் ஆதரவு கிடையாது...

எல்லாவற்றுக்கும் மேலாக, அனைவரும் எதிர்பார்த்தபடி இல்லாமல் சிரித்தமுகத்துடன், நகைக்சுவை இழையோட, எந்தவித அலுப்புமில்லாமல் 3 மணி நேரம் நின்று கொண்டே உரையாற்றியது மிகச்சிறப்பு.

பிரதமரின் முழு உரைக்கு...

எதில் முதலீடு செய்யலாம்?

சும்மா ஒரு சமூகசேவைதான்... எதில்/எப்படி முதலீடு செய்யலாம்னு யோசிச்சிட்டே இருந்துடாதீங்க, இதைப்படிங்க அல்லது திருப்பதி உண்டியல்ல போடுங்க.What’s the right investment mix for you?

Monday, August 23, 2004

அனைத்துலக அரங்கில் தமிழ்

அனைவருக்கும் வணக்கம்.

இந்தவார இறுதியில் அனைத்துலக அரங்கில் தமிழ் என்றொரு இருநாள் நிகழ்வை சிங்கை தேசியப்பல்கலைக்கழக - கலைகள் மன்றம் நடத்துகிறது. தமிழும்,தமிழரும் பற்றி கவிஞர் மு. மேத்தா, நடிகர் கமல், சுதா ரகுநாதன், நம்ப முரசு நெடுமாறன், சிங்கையின் உண(ர்)வோடியைந்த NTUC FairPrice-ன் சந்திரதாஸ், எஸ்.பொ ஆகியோர் உரையாற்றுகிறார்கள். சிறப்பாக இருக்கும்... (எனக்கு வாரயிறுதி வகுப்பு இருந்தால் கூட முத்து பேசும்போது போய்விட்டு வரவேண்டும்.)

சிலவருடங்களாகவே இந்த நல்ல ஏற்பாடு நடந்து வருகிறது. கடந்த வருடம், திரு ப.சிதம்பரம், திருமதி. பத்மா சுப்ரமணியம், இயக்குநர் பாலச்சந்தர் & சிலர் கலந்து கொண்டதாக நினைவு.

சிங்கையில் இருப்பவர்கள் கலந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், மற்றவர்களுக்கு முடிந்தால் எழுதுகிறேன்.

Tuesday, August 17, 2004

புதுசல்ல கண்ணா புதுசல்ல...

இன்னிக்கு சன் செய்தியில், கலைஞர் திருமணமண்டபத்தில் - மறைந்த திரு முரசொலி மாறனின் அஞ்சல் தலை, கவரை திருமதி சோனியா வெளியிட திருமதி மாறன், கலைஞர், முரசொலி மாறன் பெற்றுக்கொண்டனர். தயாநிதி மாறன் பரிசுகளை எடுத்துகொடுத்து உதவிசெய்தார். வழக்கம்போல் கலைஞரின் நிழல் சண்முகசுந்தரம் பின்னாடி உட்காந்திருந்தார். (சபாநாயகர்) சோம்நாத் சட்டர்ஜி, (ஹிந்து) என். ராம் மேடையில் இருந்தனர். மத்திய அமைச்சர்கள் இளங்கோவன், ரகுபதி இன்னும் ஏனைய அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களெல்லாம் விழாவை கீழே அமர்ந்து கண்டு களித்தனராம்.

திருமதி. சோனியா பேசும்போது - கலைஞரிடம் தனிப்பட்ட முறையில் சொல்லவேண்டிய, 'பொடா சட்டம் இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும், சென்னைக்கு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் வந்தாச்சு, செம்மொழி சட்டம் விரைவில் வரும்' என்றார்கள்.

கூட்டத்துலேயே சோனியா மேடம் பேசிட்டதால, கலைஞரும் அவர்பங்குக்கு அம்மா தலைமையில் கூட்டணிஆட்சி தொடரவேண்டும், அதுக்கு கம்யூனிஸ்டும் ஒத்துழைக்க வேண்டுமென்றார்.

எனக்கு ஒண்ணு மட்டும் புரியல்ல... இந்த அஞசல் தலை-லாம் அரசுதான வெளியிடும். மாநிலக்கட்சிகள் வெளியிடமுடியுமா....?

எண்ணன்ணே சொல்றிங்க... ஆங்..... என்ன... ஓ...
நடந்தது அரசு விழாதான்றீங்களா? அதனாலதான் அந்த போஸ்ட்மாஸ்டர் ஜெனரலையும் ஒரு சேர்ர போட்டு ஒக்கார வச்சுருந்தாங்களா?

அப்போ சரிண்ணே... நமக்கென்ன வந்துச்சு....


Friday, August 13, 2004

புத்தக அலமாரி

வாவ்.... விகடன் புக் கிளப்! வேற.... நல்லாதான் இருக்கு. ஆனால், ஒரு சில பக்கங்கள் குமுதம் வாடை அடிக்குதுள்ள!?

இருந்தாலும் பெரிய கடுப்பு, இப்படி முழுதும் மாத்துணவங்க - யுனிக்கோடுக்கு மாத்தித்தொலைக்க வேண்டியதுதான...

உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

அந்த வரிசையில் (எந்த வரிசையிலா? முந்தைய பதிவைப் படியுங்கள்) இந்த தொடரும் பயனுள்ள ஒன்று...சமயலறை மருத்துவம் கிட்டத்தட்ட இதே தலைப்பில் என்னிடம் ஒரு புத்தகம் உண்டு, யாருக்காவது மெல் விபரம் வேண்டுமென்றால் - பிரதி சனி காலை 10-12க்குள் சிங்கை ஹில்டன் விடுதியில் சந்தியுங்கள்....

ஆனந்த விகடன் - ஹெல்ப் லைன்

விகடனில் விகடன் தாத்தாவையே பேண்ட் போடவைத்துவிட்டதை (சன் டிவி விளம்பரத்தில்) முன்னிட்டு பல புதிய பகுதிகள்/தொடர்கள் வந்திருக்கிறது.

அதில் குறிப்பிடத்தக்க ஒன்று இந்த ஆனந்த விகடன் - ஹெல்ப் லைன்
நமக்கு, நமது மக்களுக்கு பயனுள்ள ஒரு தொடர். எழுத்து மிக நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. கொஞ்ச நாளுக்கு முன்னாடி பத்ரி தன்னுடைய வலைப்பதிவில் எழுதியிருந்தாரே 'உள்ளிருந்து கொண்டு கதவை அடைத்துக்கொண்ட ஒரு குழந்தை பற்றி' அந்த விஷயத்தில் கூட 101ஐ அழைக்கலாமான்னு ரட்சிகா ஆண்டிட்ட கேக்கலாம் அல்லது 101-டமே...

Wednesday, August 11, 2004

சிங்கப்பூர் - நேற்று இன்று நாளை...

சிங்கப்பூருக்கு இது மிகவும் முக்கியமான வாரம்...
1965ல் மலேயாவிலிருந்து (இப்போது மலேசியா) பிரிந்ததில் இருந்து சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் இயூ பிரதமர் பதவிவகுத்து வந்து ஏறக்குறைய 25 வருடங்களுக்குப்பின்னர் திரு கோ சோக் டோங்-கிடம் 28 நவம்பர் 1990ல் ஒப்படைத்து விட்டு, பிரதமர் கோவின் அமைச்சரவையில் 'மூத்த அமைச்சர்' பதவியில் இருந்து வந்தார்.

நேற்று...

14 வருடங்களுக்குப்பிறகு, நேற்று 10/ஆகஸ்ட்/2004 காலை 10 மணியளவில் (ஏற்கனவே திட்டமிட்டபடி) அதிபர் எஸ் ஆர் நாதன் அவர்களை சந்தித்து தனது பதவி விலகலைக் கொடுத்துவிட்டு புதிய பிரதமராக தனது அமைச்சரவையில் முதல் துணைப்பிரதமராக இருக்கும் திரு லீ சியான் யாங் - அவர்களை பிரதமராக நியமிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.

அதனை ஏற்று காலை 11 மணிக்கு தன்னை சந்தித்த திரு லீயை அதிபர் நாதன் புதிய பிரதமராக பதவியேற்கும்படி கூறி புதிய அமைச்சரவையையும் அமைக்கப் பணித்துள்ளார்கள்.

அதன்படி சிறிது நேரத்தில் தனது புதிய அமைச்சரவைப் பட்டியலை, புதிய பிரதமாராகப் பதவியேற்கும் திரு லீ வெளியிட்டார். அதில் அவர் இது வரை வகித்து வந்த நிதியமைச்சர் பொறுப்பை மட்டும் வைத்துக்கொண்டு, புதிய நாணய வாரியத் தலைவராகவும் (Monetary Authority of Singapore - MAS), மூத்த அமைச்சராகவும் பிரதமர்பதவி துறந்த திரு கோ பதவியேற்கிறார். இதுவரை மூத்த அமைச்சர் பொறுப்பிலிருந்த தனது தந்தைக்கு 'மதியுரை அமைச்சர்' (Minister Mentor) என்ற பதவி கொடுத்துள்ளார்கள்.

எப்போதும்போல திரு டோனி டான் - துணைப்பிரதமராக திரு லீயின் அமைச்சரவையிலும் தொடர்வார்கள். (திரு நெடுஞ்செழியனை ஞாபகம் இருக்கிறதா!?) இவர் அடுத்த ஜீனில் பதவி ஓய்வு பெரும்போது இப்போது உள்துறை அமைச்சராக இருக்கும் திரு வோங் கான் செங் துணைப்பிரதமராவார்.

திரு கோவின் அமைச்சரவையில் சட்ட, வெளியுறவு அமைச்சராக இருந்த திரு ஜெயக்குமார் அவர்கள் துணைப்பிரதமர் ஆகிறார்கள். அத்துடன் தான் பார்த்துவந்த சட்டம், வெளியுறவு கொள்கையையும் (மட்டும், வெளியுறவு திரு. ஜார்ஜ் யோவுக்கு...) தொடர்வார்கள்.

திரு தர்மன் சண்முகரத்னம் முழுக் கல்வியமைச்சர் பதவியுடன், நாணய வாரியத் துணைத்தலைவர் பதவியும் கூடுதலாக வகிப்பார்கள்.

திரு பாலாஜி சதாசிவம் துணை சுகாதார அமைச்சராகிறார்.

திரு விவியன் பாலகிருஷ்ணன் - சமூக, இளையர், விளையாட்டுத்துறை

மேலும் சிலர் பதவிஉயர்வு பெற்றுள்ளார்கள்,
சில புதியவர்கள் அமைச்சர் பதவி பெற்றுள்ளார்கள்
சிங்கை வரலாற்றில் முதன்முதலாக
பெண் அமைச்சர்கள் இருவர் (திருமதி லிம் லீ ஹிவா, திருமதி யூ ஃபூ யீஷுன்) பதவியேற்க இருக்கின்றனர்.

இன்று

நாளை இரவு பதவியேற்க ஏற்பாடு நடந்து வருக்கிறது,
(நான் இங்கு பதிந்து கொண்டிருக்கிறேன்...)

நாளை

திரு. லீ சியான் யாங் இரவு 8 மணியளவில் பிரதமர் பதவியேற்க உள்ளார்கள். அவரது புதிய அமைச்சரவையும் பதவியேற்கும். திரு லீயைப்பற்றி எழுதும்போது நம்ப மு.க.ஸ்டாலின் ஞாபகம் வராமலிருந்தால் உலக அரசியல் தெரியாதென்றாகிவிடும். இங்கும் வெளிப்படையாக இல்லையென்றாலும் அந்த முணுமுணுப்பு உண்டு. அதேபோல் இங்குள்ள Straits Times பத்திரிக்கையில் கருத்துக்கணிப்பு நடத்தி திரு லீ பிரதமர் பதவிக்கு முழுத்தகுதி உடையவர், முன்னாள் பிரதமர்/முன்னாள் மூத்த அமைச்சர் மகன் என்று இல்லாவிட்டாலும் அவர் பதவிக்கு தகுதியுடையவர் என்று முடிவு தெரிவித்தது.

எது எப்படியிருந்தாலும், புதிய பிரதமர் சிங்கப்பூரை புதிய உட்சத்துக்கு கொண்டுசெல்வார் என்று நம்பலாம். வாழ்த்துக்கள்.

(இப்போதைக்கு இது போதும்... ஆங்காங்கே ஹைபர்லிங்க் கொடுக்கலாம்னு நெனச்சேன், அவசரத்துல முடியல - நாளைக்கு முடிந்தால் இணணக்க முயற்சிக்கிறேன்).



Thursday, August 05, 2004

சும்மா ஆராய்ச்சிதான்...

படம் போடுறது இவ்ளோ சுளுவுதானா..? எதுவுமே ஆராய்ச்சி பண்ணாதாம்பா தெரியுது இல்ல...!
ஆராய்ச்சி இன்னும் முடியல...

இது சர்தார்ஜி ஜோக் - அல்ல...

It's Balle, Balle in Canadian Parliament

Wednesday, August 04, 2004

சாதனைச் செல்வி: மாளவிகா!

இந்தப் பெண்ணின் வாழ்க்கையைப்பற்றி முன்னர் படிக்காமல் விட்டிருந்தால் - படிக்க: சாதனைச் செல்வி: மாளவிகா!

Tuesday, August 03, 2004

நவீன அம்மா

அம்மா,
பால் கொடுக்கவில்லையென
உன்பால் எனக்கில்லை கோபம்!

நீ கொடுக்கும் முத்தம்கூட
கடிகாரத்தின் துணையோடுதானே!

எந்தக் கோட்டையைப் பிடிக்க
அரைவேக்காடு அரிசியை
அள்ளிப்போட்டுக்கொண்டு
இப்படி ஓடுகிறாய்?
என்னுடைய 'டாட்டா'
காற்றில் வீணாய்ப்போகிறதே!

பள்ளிப் புத்தகத்தில்
'நிலா நிலா வா வா!', என
அம்மா சோறு ஊட்டுகிறாள்!
ஆனால்,
புறமுதுகிட்ட வீரனைப்போல்
சோர்ந்து திரும்பும் நீ,
அவசரச் சட்டம்போல்
சமையலறையில் புகும் உனக்கு,
அப்பாவின் புதுப்புது அர்ச்சனைகள்!
நீ தட்சணை கொடுத்தும்,
ஏன் இந்த அர்ச்சனைகள்?

நீ தூங்கம்மா, தூங்கு,
நான் உனக்குத்
தாலாட்டுப் பாடுகிறேன்!

- ஆர். ஆனந்தி

'தினத்தந்தி குடும்பமலர் - 25/07/2004' வந்த இந்தக் கவிதை இன்று
தினம் ஒரு கவிதையாக வெளியாகியுள்ளது.

நல்ல கவிதை கணையாழியில்தான்
வெளிவரவேண்டுமென்பதில்லை.
குடும்பமலர், வாரமலரிலும் வரலாம்.
நல்ல கவிதைகளைத் தேடி, தேடி
தினம் ஒரு கவிதை
கொணர்ந்தமெக்கு சேர்க்கும்
நண்பர் சொக்கனுக்கு
கோடானுகோடி நன்றி.



Monday, August 02, 2004

ரகிசியமாய்... ரகிசியமாய்....

பேரு மட்டும்தான் - ரகசியா... இல்லை சாரி ரகிசியா...

மஞ்சள் மகிமை

என்ன தலைப்பே ஒருமாதிரியா இருக்குதா...?
மஞ்சளோட மகிமை தெரிந்து அங்க உள்ள பசங்க patent வாங்கி வச்சாட்டுனுங்க, இங்க நம்ம ஊட்டு பொண்ணுங்க மஞ்சளைத் துறந்து Gillette பக்கம் போய்ட்டாங்க என்ன பண்றது, கலிகாலம்....மங்களகரமான மஞ்சள் - ராஜம் முரளி

அழைப்பு மையம்

"வேலைக்குப் போனாதான் படிச்சதுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கும்.
பணத்தைக்கொட்டி, கஷ்டப்பட்டுப் படிச்சுருக்கோம்.
வீட்டு மொட்ட மாடியில நிலாவை முறாச்சுப் பார்த்துட்டு,
ஒருநாள் கல்யாணம் பண்ணிட்டு அதே நிலவை
வேற வீட்டு மாடியிலுருந்து பாத்திட்டு இருக்க முடியாது."

என்னமா பேசுறாங்க பாருங்கப்பா...
ஒருபக்கம் 'அழகி தற்கொலை'ன்னு படிக்கறப்ப
கவலையா இருந்தாலும் - இந்த துர்கா, அகல்யா, சுஜாதா பேச்சைக் கேட்டால் ஒரு தன்னம்பிக்கை பிறக்கிறது, சந்தோஷம். கால் சென்டர் - அகல்யா

குப்பையைப் பற்றி...

மகா சனங்களே வணக்கம்.

இதுவரை 'குப்பை'யைப்பற்றி வலைப்பூக்களில் பிரபலங்கள் பரபரப்பாக எழுதிவந்தார்கள். இந்தவாரம் முதல் குப்பையைப்பற்றி ஒரு சிறப்புத்தொடரே வெளியிட ஆனந்தவிகடன் குழுவில் அவர்களாகவே முடிவுசெய்து (சத்தியமா நான் காசு ஏதும் கொடுக்கலிங்க, மேலும் இது ஆதரவாளர் தொடரும் அல்ல...) குப்பையென்பது இது குடும்ப சமாசாரம் (பொம்பளங்க சமாசாரம்னு எழுதி, அகில உலக மாதர் சங்கம் கொடி பிடிச்சுட்டாங்கண்ணா... - தப்பிச்சேன்) என்பதால் அவள்விகடனில் தொடர் வருகிறது. பிரபல (பெண் - அப்படின்னு சொல்லலமோ அதுக்கும் எதாவது மாதரணி திட்டுவார்களோ!?) எழுத்தாளர் அனுராதா ரமணணும், புகழ்பெற்ற சினிமா, தொலைக்காட்சி பிரபலம் நளினி ராமராசர்(சரியா தெரியல...) அவர்களும் ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.

அதனால... மேல படிங்க...

Friday, July 30, 2004

திரைகடல் ஓடியும்

ராசாஆஆஆ ரொம்ப நன்றிப்பா இந்த தொடர்பு கொடுத்ததுக்கு....கிருபா கல்க்கிட்ட போ...

Thursday, July 29, 2004

வீடு வாங்கலாம் வாங்க

வீடு வாங்கலாம் வாங்கன்னு புதுசா குமுதத்துல ஒரு தொடர் ஆரம்பிச்சுருக்காங்க... விருப்பமிருந்தால் படிக்கலாமே.வீடு வாங்கலாம் வாங்க

வயது வந்தவர்க்கு மட்டும்...

இதுவரை தமிழ்லினிக்ஸ், குவாண்டம் கணிணி எழுதி பென்குயினுக்கு தமிழ் கற்றுத்தந்த நமது ஜப்பான் டொக்டர் வெங்கட் தனது விஞ்ஞான் ஞானத்தின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிள்ளார்...ஆணுரைகள்

நல்லகாலம் பொறக்குது... நல்லகாலம் பொறக்குது...

என்னதான் அம்மாவும், லொல்லுவும், சோரனும் பொரச்சி பண்ணாலும் - இந்தியர்களாகிய நம்பளவிட, சிலர் இந்தியா மேல் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள் அதிலிரிந்து பெறப்போகும் வருமானத்தை நம்பித்தான் செய்தாலும், அந்த நம்பிக்கையே நமக்கொரு பலம்தானே... நீங்க என்ன சொல்றீக?India draws world's biggest pvt equity fund

Wednesday, July 28, 2004

The Tata Legacy

ஜெயா, சசி பூர்வீகத்தையே எத்தனை நாள் குடையறது...?rediff.com: The Tata Legacy

இதென்ன கலாட்டா...!?

ஹீம்... நாமெல்லாம் இங்க வலைல எதாவது எழுதறதோட சரி, இதுமாதிரி பெரியவங்க இதுமாதிரி ஆர்ப்பாட்டமில்லாம மிரட்டினால்தான் எதாவது முன்னேற்றம் வரும்னா - அப்படியாவது இந்தியா முன்னேறட்டும்.Wipro threatens to quit Bangalore

சுய மதிப்பீடா? தம்பட்டமா?

எனக்கு CGEY-யில் வேலைசெய்தபோது இருந்த இந்த கஷ்டம், நண்பருக்கும் உண்டு போல...பரிசல்

Sunday, July 25, 2004

பொழப்பு - ஹரணி

பொழப்பு

நான்கு மணி அலாரம் நிறுத்தி
ஐந்து மணிவரை தவணைத் தூக்கம்!
உறங்கும் பிள்ளைகள் விடுத்து
ஆறிருபது பாயிண்ட் டு பாயிண்டில்
"வாங்க சார் வணக்கம்!"
கண்டக்டர் சிரிப்புடன் தொடங்கும்
திங்கள்!
பேச்சு - சிரிப்பு - தலையாட்டல்
தஞ்சை - கும்பகோணம்
கும்பகோணம் - மாயவரம்
மாயவரம் - சிதம்பரம்
ஓட்டமும் நடையுமாய்
வருகைப் பதிவில் மணி பத்து...!
இயந்திரப் பகற்பொழுது
எச்சில் துப்பலாய் கரையும்
மாலை பாசஞ்சர் ரயில்
அரையடிக்கு ஒரு ஸ்டேஷன்
ரயில்விட்டு பேருந்திலேறி
தளர்ந்த நடையில்
வீடேற பிள்ளைகள்
உறங்கியிருக்கும்...!
உறங்கும் முகங்கள்
பார்க்க மறந்து போகுமெல்லாம்...
நாளையேனும் எக்ஸ்பிரஸ் பிடித்து
முன்னதாக வந்தால்
ஏதேனும் பேசலாம்
பிள்ளைகளிடம் உறங்கும்முன்!

- ஹரணி

சமீபத்திய குமுதம் ஜங்ஷனில் வந்த கவிதை.
உண்மையிலேயே இங்கு சிங்கையில்தான் என்றிருந்தேன்,
ஊரிலும் நாய் பொலப்புதானா!?

இதைப்படிசுட்டீங்களா மொதல்ல....

உலகின் எந்த மூலையில் பஞசம், பட்டினி, உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டாலும் சரி, ஆபத்பாந்தவனாக ஓடிச்சென்று அதிரடி திட்டங்கள் மூலமாக அப்பகுதியிலுள்ள வறட்சியை விரட்டிட்யடிக்கிறார் இந்த தமிழர்: சுரேஷ் சந்திரபாபு

Thursday, July 22, 2004

வரலாறுகாணாத மாற்றம்...

தலிவர் முதல் அடித்தட்டு, மேல், நடுத்தட்டு தொண்டர்களும், உலகத்தமிழ் மக்களும் தமிழ் வலைப்பதிவில் எதைப்படிக்க, எது எப்படி என்று கொழம்பி வந்ததால் வெண்ணிலா தொலைக்காட்சி, ஏசி நீல்'டாட்', ஓசி மார்க், லொவேலா காலேஷு, ஏண்டி டிவி இன்னும் ரொம்பப்பேரு சேந்து ஒலகத்தமிழர்கள் பலரின் அபிப்ரரயப்படி ஒருவழியா - வலைப்பதிவுகள அட்டவணைப்படுத்தினார்கள். இது தொடர்பாக, ஒட்டுமொத்த நிறுவனம் சார்பில் பொரபசர் டொக்டர் கர்த்துக்காணி பேசும்போது:

1) இது எந்த தராதரத்தின்படியும் பிரிக்கப்படவில்லையென்றும்,
2) ஒலகத்துல்ல உல்ல எள்ளா வழைப்பதிவுகளையும் தீர ஆராய்ச்சி செஞதாகவும்,
3) தனிப்பட்டவரை எந்தவிதத்திலும் பாதிக்காமல்,
4) அவர்களுடைய உள்ளடக்கத்தை மட்டுமே கருத்தில் கொண்டு
இந்த கருத்துக்கணிப்பு நடைபெற்றதாகக் கூறினார்கள்.

நிறுவனம் கொடுத்த இறுதி அட்டவணைய, செயல்குழு, பொதுக்குழுவெல்லாம் கூடி ஒருவழியாக ஏற்றுக்கொண்டு இன்றே பதிக்க ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. மேலும், பொதுசனம் வேறு எதாச்சு, இதுல்ல மாற்றச் சொன்னாக்க - தலிவரே அதை யோசிச்சு முடிவெடுக்கும் , புல் சொதந்திரத்தையும் பொது/செயல் குழு தலிவெருக்கே அளித்துள்ளது...

அதனால, சகோதரர்களே, சகோதரர்களே, என் உயிரிழும் மேலான ....
(ட்ப்.... ட்ப்ப்... ட்ப்ப் ...பீஈஈஇ பீஇ.... ) அமைதி ... அமைதி ....
உடன்பிறப்புக்களே... என் ரத்தத்தின் ரத்தங்களே....ன ....
(ட்ப்.... ட்ப்ப்... ட்ப்ப் ...பீஈஈஇ பீஇ.... ) அமைதி ... அமைதி ....

எதவாது மாற்றமோ, யோசனைகளோ, மழித்தல், நீட்டலோ இருந்தாச் சொல்லுங்க...
ஒங்கள் காலுக்குச் செருப்பா ....
(ட்ப்.... ட்ப்ப்... ட்ப்ப் ...பீஈஈஇ பீஇ.... ) அமைதி ... அமைதி ....
இருந்து நெறெவேத்துறேன்... ஒடனே மாத்தச்சொல்றேன்.
எந்த மறுகேள்வியும் கேக்கபடாது... (சத்தியமா பதிலும் எதிர்பாக்க குடாது).

சனகன மண.....

என்ன செய்யப்போகிறேன்...

கும்பகோண தீ விபத்து தொடர்பில், நம்மில் பலரும் நம்முடைய எண்ணங்களை, யோசனைகளை வலையில் பதித்து வருகிறோம். ஒரு சிலர் அதற்கும் மேல் ஆக்ககரமான காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் திரு. சுந்தரவடிவேலுடைய பாராட்டுக்குரிய முயற்சியொன்று...என்ன செய்யலாம்

Mallya, Airbus sign airline deal

இதுவரை கிங்ஃபிஷர் நம்ம உள்ளாரப் போய் நம்மள பறக்கவச்சுது,
இனிமேல் நாம கிங்ஃபிஷர் உள்ளாரப் போய் பறக்கலாம்...Mallya, Airbus sign airline deal

Wednesday, July 21, 2004

மேலும் சில கும்பகோணக் குழப்பங்கள்...

இன்று செய்தித்தாளில் படித்த மேலுமிரு குழப்பங்கள்:

1) கைது செய்யப்பட்ட பள்ளித்தாளாளர், முதல்வர் ஜெ-யை வழக்கிலிருந்த விடுவித்த நீதியரசரின் சகோதரர்

2) பள்ளியின் சத்துணவு ஆயாவின் ஆச்சரியமான கேள்வி:
"நான் அன்னிக்கு சமையலுக்கு அடுப்பே பத்தவக்கலியே... அதுக்குமுன்னால எங்கேருந்து ராசா நெருப்பு வந்துச்சு...?"

Tuesday, July 20, 2004

முரடா மிரட்டாதே...

இது எனக்கு அல்லது ஒங்களுக்குன்னு இல்ல - பெரும்பாலும் நாம எல்லாரும் படிக்கவேண்டிய ஒன்று. கொஞ்ச நேரம், இந்த கணிணியைலாம் மூடிட்டு போய் குழந்தைங்களோட விளையாடலாம், வாங்க...குழந்தையென்னும் தெயவம்...

கணவரிடம் எல்லா ரகசியங்களையும் பெண்கள் சொல்லலாமா?

உனக்குள் நானும்
எனக்குள் நீயுமாய்
கரையும் இம் மணித்துளிகள்
நம் மரணம் வரை
நம்மோடு வேண்டும்!

இதைப்படிங்க மொதல்ல...ன்னு சொல்லிட்டு என்னோட மனைவி படிக்கச் சொன்னதை நீங்களும்தான் படிங்களேன்...கணவரிடம் எல்லா ரகசியங்களையும் பெண்கள் சொல்லலாமா?

கும்பகோணத் துயரச் சம்பவம்

இந்த துயரச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குண்டாக்கியது உண்மை. அதிலிருந்து விடுபட்டு, இது ஏன் நடந்தது, திருவரங்கம், கும்பகோணம் என்று தொடராமல் இருக்கச்செய்வது எப்படி? அதற்கும் பலரும் பல வகையிலும் உதவி வருகிறார்கள், பாராட்டப்படவேண்டிய விஷயம். இதைவிடுத்து நடந்த சம்பவம் தொடர்பாக பல செய்திகள் வெளிவருகிறது...

1) துன்பியல் நடந்த கட்டிடத்தில் 3 பள்ளி நடந்து வந்தது. தமிழ், ஆங்கில வழி சிறுவர் பள்ளி மற்றும் பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளி. சத்துணவு திட்டம் மூலம் அதிக ஆதாயமடைய, (அரசு அனுமதிக்காத) ஆங்கில வழிபடிக்கும் குழந்தைகளையும் சேர்த்து கணக்கு காட்டி பள்ளிநிர்வாகம் அரசுப்பணம் பெற்று வந்ததாகவும் - அன்றையதினம், கண்காணிப்பாளர் வருவதாக இருந்ததால் கீழ்தளங்களில் இருந்த ஆங்கிலவழி பயிலும் பாலகர்களையும் - அவர்கள் அணிந்திருக்கும் ஷீ, டை முதலியவற்றை கழட்டிவீட்டு மேல்தளத்தில் உள்ள தமிழ்வழி வகுப்பில் அடைத்தாக ஒரு தகவல். இதை தான் மேல்தளத்துக்கு செல்வதற்கு முன்னர் தீ பிடித்து விட்டதால் உயிர் தப்பிய ஒரு சிறுவன் உறுதிப்படுத்தியிருக்கிறான்.

2) ஆசிரிய/ஆசிரியைகள் குடும்பத்தோடு தலைமறைவு - இதுதான் இதுவரை அறிந்த செய்தி. இப்போது படித்த செய்தியொன்று சொல்கிறது: "யாரும் தலைமறைவாகவில்லை - அனைவரும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கேட்டுக்கொண்டபடி தெரியாத இடத்தில் உள்ளனர்."
"ஒரு ஆசிரியை நடந்த களேபர அதிர்ச்சியில் அரசியல்வாதிவலி(நெஞ்சு) வந்து மருத்துவமனையில் அனுமதி"
"காப்பாற்றப்போன கர்ப்பிணி ஆசிரியரை கூட்டத்தினர் யாரோ அடிவயிற்றில் இடித்து விட கர்ப்பம் கலைந்து இரத்தவெள்ளத்தில் மயக்கம்"

3) காப்பாற்ற சென்ற பொதுஜனம் ஒருவர் மரணம்

4) தொலைக்காட்சியில் இந்த செய்தி பார்த்து 'அய்யோ...'வென்று கதறிய மாணவி மரணம்.

இதெல்லாம் ஏன். ஏன் நாம் திருந்தக்கூடாது, தப்பு செய்பவனைத் திருத்தக்கூடாது?
திருந்துவோம், திருத்துவோம்.

Monday, July 19, 2004

புதுசு... இது புதுசு...

புதுப் படம் - அதாங்க தமில்ல நியூ திரைப்படம் இணணய உலகில் முதன் முதலாக...பல புதிய திரைப்படங்கள்... மேலும் விபரங்களுக்கு குட்டி ஜப்பான்

Friday, July 16, 2004

எளிய தமிழில் இனிய மார்க்கெட்டிங்...

நண்பர் மீனாக்ஷ் தன்னுடைய தொழில் சம்பந்தமாக, எளிய தமிழில் இனிய மார்க்கெட்டிங் என்று ஒரு வலைப்பதிவு வைத்து தொடர்ந்து எழுதிவருக்கிறார், படித்திருக்கின்றீர்களா? மார்க்கெட்டிங் தொழில் அதுக்கும் நமக்கும் சம்பந்தமில்லையேன்னு என்னைய மாதிரி நீங்களும் இதை கிளிக் பண்ணாம விட்டுடாதீங்க... அப்புறம் உண்மையாக you really going to miss something. மார்க்கெட்டிங் தொழில் நமக்கெதுக்குன்னு இல்ல, இந்த காலகட்டத்துள்ள ஆளாளுக்கு மீனாக்ஷ் மாதிர் கிளம்பிருக்காங்கல்ல்... அவங்களைப் புரிந்துகொள்ள, அவர்களிடமிருந்து தப்பிக்கவாவது இதை படிப்பது அவசியம்.
எளிய தமிழில் இனிய மார்க்கெட்டிங்...
 
அப்படி இல்லாட்டிக்கூட இந்த படத்தைபாருங்களேன்...
ஹோண்டாவின் புதிய அக்கார்ட் கார் விளம்பரம்
இந்த விளம்பரம்பற்றி மேலதிக விபரங்களுக்கு...

சினிமா பாட்டு...

நண்பர் கவிஞர் சேவியர்
தீடிரென்று (ஒருவேளை யுகபாரதி ஆத்மநண்பராகி வருவதாலோ!)
சினிமா பாட்டு எழுத முயற்சித்து
உயிரெழுத்துவில் இட்டிருந்தார்...
அது இங்கே:
 
 
0
காதலை யாரடி காதலாய்ப் பார்த்தது -
உயிர்க் காதலை யாரடி உயிராய்ப் பார்த்தது.
காதல் யாரைத் தீண்ட மறுத்தது -
அடி காதலை ஏன்ஊர் தீண்ட மறுக்குது ?
****
எண்ணை இல்லா விளக்கும் வீணடி
காதல் இல்லா வாழ்க்கை ஏனடி
எரியும் சுடரில் இருட்டு ஏதடி -
உயிர் காதல் சுடரை அணைப்பதேனடி ?
காதல் தானே துளியாய் விழுந்து முத்தாய் மாறும் அதிசயம் -
அந்த முத்தைச் சுமக்கும் சிப்பியை உலகம் நித்தம் வையும் நிச்சயம்
எதிர்நீச்சல் போடுவதென்றால் கால்கள் வலிக்கும் கவலை விடு.
உயிர்க்காதல் வாடுவதென்றால் வலிகளைக் கூட வாழ விடு.
****
உச்சிக் கிளையில் ஒற்றைப் பறவை சோகம் சொல்லி அழுகிறது -
அந்த அழுகைக் துளிகள் வீழும் நிலத்தில் கண்ணீர் அருவி எழுகிறது.
புல்லாங் குழலில் நுழைந்த காற்றும் இசையைச் சொல்ல மறுக்கிறது -
வெறும் மூச்சுக் காற்றை வெளியே தள்ளி உலகை அதுவும் வெறுக்கிறது.
 நேசக் கூடு எரிகிறதென்றால் தண்ணீர் ஊற்றி அணைத்து விடு
எரியும் கூட்டில் இருக்கும் உயிரை உயிருக்குள்ளே பிணைத்து விடு.
 
0
 
இந்தப்பாடலை படித்து விட்டி கவிதாயினி புதியமாதவி எழுதியது:
 
என்ன சேவியர் நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்?
கண்ணதாசன் காலத்திலா?
சினிமாப் பாடல் என்றால் நடு நடுவில்
சம்மந்தா சம்மந்தமில்லாமல் ஏதாவது
"டணக்கு டணக்கு டணக்கு தான்..
உனக்கும் எனக்கும் காதல்தான்.."
என்றெல்லாம் வந்தாக வேண்டும்.
 "ஒட்டகத்தைக் கட்டிக்கோ.."னு
எதையாவது கட்டிப்பிடிக்க முடியாததை எல்லாம் சொல்லனும்.
அப்புறம் வெள்ளூடை தரித்த தேவதைகள் லாலா போடறமாதிரி
ஒரு மெட்டு போட்டாகனும்.
 
ஏதோ சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன்னு..
 
நாம்ப நண்பருக்கு நம்பலால முடிஞ்சத
சொல்லணும்ல... அதான நாயம்...

ஆமாம், சேவியர்
இதெல்லாம் கண்டிப்பாக இல்லாவிட்டால்
ஹோட்டல் அறையில் அடைத்துவைத்து
"டணக்கு டணக்கு டணக்கு தான்..
உனக்கும் எனக்கும் காதல்தான்.."
வரும்வரை இயக்குநரும், இசையமப்பாளரும், தயாரிப்பாளரும்
விடமாட்டார்கள்.

ஒருமுறை சிங்கையில் வைரமுத்து பேசும்போது சொன்னார்கள்,
முதல்வனில் உச்சக்கட்டத்தில் வரும்
"உப்புக்கருவாடு ஊறவச்ச சோறு..."
பாடல் தோன்றிய பிண்ணனியை.
சிரிக்கச் சிரிக்க சொன்னார்கள்.

அந்தக் கதை சூழ்நிலைக்கு ஒரு இனிமையான பாடலொன்று
(வரிகள் மறந்துவிட்டது - something like
ஓலைக்குடிசை
நிலவொளி... இத்யாதி இத்யாதி).
என்று முதலி எழுதியிருந்தாராம்,
ரேஹ்மானும் இனிமையான் இசை கூட்டியிருந்தாராம்.
எல்லோரும் முதலில் கூடிப் பாராட்டினார்களாம்.
ரொம்ப அருமை என்று.

அப்புறம் வீட்டுக்கு வந்த பிறகு
நள்ளிரவு 1.30க்கு சங்கர் தொலைபேசி எழுப்பினராம்...

வைமுத்து: என்ன சங்கர் இந்த நேரத்துல்ல...
சங்கர்        : இல்ல சார் இன்னிக்கு எழுதுன பாட்டு ரொம்ப நல்லாருக்கு,
                      இனிமையா இருக்குன்னு எல்லோரும் சொல்றாங்க சார்...
வைமுத்து: ரொம்ப சந்தோசம்ப்பா, அதைச் சொல்லவா இந்நேரம் கூப்பிட்டீங்க...
சங்கர்        :இல்ல சார், எல்லாரும் இனிமையாருக்குங்கிறது - எனக்கு
                      கொஞம் பயமாருக்கு சார்.
வைமுத்து: ஏன் சங்கர்?
சங்கர்        : இல்ல சார் அந்தப் பாட்டு climax scenela வருது,
                      அப்பப்போய் இவ்ளோ சுலோவா பாட்டுப் போட்டா எடுபடாது சார்ர்ர்ர்...
வைமுத்து: இப்ப என்னப்பா பண்ணச்சொல்ற...?
சங்கர்        : எதாவது fast beataa மாத்தலாம் சார்..
வைமுத்து: ஹ்ம்ம்.... என்னப்பா மாத்தரது... கதாநாயகன்
நகரவாழ்க்கையவிட்டு விலகி கிராமத்து வாழ்க்கையைக் காட்டணும்
அங்க என்ன இருக்கும்..... குடிசை, பழைய கஞ்சி, குடிசையத்தவிர...
அப்படின்னுட்டு. இப்படி வச்சுக்கோன்னு கோபமா...

(இதை கவிஞரோட... குரல்ல படிங்க...)

உப்புக் கருவாடு.
ஊரவச்ச சோறு.
ஊட்டிவிட வேணுமடி எனக்கு....
முத்தமிட்டு நெத்தியில
மார்புக்கு மத்தியில
செத்துவிட தோணுதடி எனக்கு...

அப்படின்னு ரொம்ப கோபத்துல்ல போன்ல பல்லவியைச் சொன்னாராம்.
அதை அந்த நேரத்துலயே ரெஹ்மாண்ட போன்ல சொல்லி ட்யூன் போட்டார்களாம்.

அதேபோல அன்று வந்திருந்த இயக்குநர் K.S. ரவிக்குமார் சொல்லியது.
"இதை சென்னையில இருக்கும்போது சொல்லமுடியாது,
இப்போது சொல்றேன் - வைரமுத்து கோஞ்சம் costly கவிஞர்.
அதனாலதான் அவர என்னோட எல்லாப் படத்துலயும் use பண்ணிக்க முடியல.
சரி போங்கண்ணு எதாவது ஒரு பாட்டு மட்டும் கேட்டாலும்
அப்படியெழுத மாட்டாரு, ரொம்ப முரண்டு பிடிப்பாரு..."

(இதற்கு கவிஞர் பேசும்போது சொன்னது:
நண்பர் ரவிக்குமார் என்னைக் காஸ்ட்லி கவிஞர்னு சொன்னார்...
இப்போ அவருக்கு சொல்லிக்கிறேன்.
அவர் எந்தப்படத்துக்கு அவரோட சம்பளத்தை குறைத்துக்கொள்வாரோ
அந்தப்படத்துக்கு நான் என்னோட சம்பளத்தை குறைச்சுக்கிறேன்...

ரவிக்குமார் சிரிச்சுட்டு கீழ குனிஞ்சுண்டார்...)

அப்புறம் ரவிக்குமார் பேசும்போது
ரஜினி-நான்-வைரமுத்து-ரெஹ்மான் சேந்தாலே சில்வர் ஜுப்ளிதான்.
முத்து, படையப்பா அந்த வரிசல கண்டிப்ப ஜக்குபாயும் வரும் என்றார்.

மேலும் ரேஹ்மான் பத்தி பேசும்போது... (அன்போட...)
"அவன் ரேஹ்மான் கொஞம் வித்தியாசமான ஆளு
நைட்லதான் work பண்ணுவான்.
அது போக, அவன் அடிக்கடி மந்திரம் ஓதுறதால
மசூதில்ல ஒருமாதிரி பாடற மாதிரியே ஒரு sound உடுவான்.
அப்படித்தான் 'முத்து' படத்துக்கு பாடலுக்கு இசையமைக்கும்போது...

உல்லல்லிலே...உல்லல்லிலே...
உளுவாளிலே..உளுவாளிலே..

அப்படிங்கிற மாதிரி எதோ சவுண்ட் உட்டுட்டு
இதான் பல்லவின்னு, கவிஞர சரணம் எழுதச்சொன்னான்.

அப்புறம் நான் கவிஞரை பாத்து சிரிச்சுட்டே
ஒகே.. உளுவாளி-ன்னு ஒரு போர்டவச்சு அது ஒரு ஊர்பேருன்னு வச்சுட்டு
உளுவாளிலே...
 முத்து வந்தல்லோன்னு...
 எதாவது எழுதுங்கன்னு சொன்னாராம்...

அதனால... அண்ணே செவியர்
நெரயா அதுமாதிரி
டண்டணக்கா...டணக்குணக்கால்லாம்...
போட்டு பழகுகங்க..

ஹ..ஹா..சும்மா சொன்னேன்...
 
உண்மையிலேயே பாடல் அருமையாக இருக்குது.
வித்யாசேகரிடமோ, பரத்வாஜிடமோ
கொடுத்தால் அருமையாக வரும்.
வாழ்த்துக்கள்
கூடிய சீக்கிரம்
சினிமாவில் வலம் வருவீர்கள்
ஒரு யுகபாரதி, பா.விஜய், அறிவுமதி மாதிரி...

வாழ்த்துக்கள்.

என்றென்றும் அன்புடன்,
அன்பு
 

London footwear firm apologises...

ஏன் இந்த திருட்டு நாய்ங்க இது மாதிரி ஜட்டில, பிரால, செருப்புலன்னு எதாவது போடுறானுங்க அப்புறம் அதுபத்தி எதுவும் தெரியாதுன்னு சொல்லி மன்னிப்பு கேக்கிறானுங்க...?The Hindu Business Line : London footwear firm apologises for offending Hindu sentiments

75 students killed in inferno

Kumbakonam (TN), July 16. (PTI): At least 75 students, mostly girls, and some teachers were charred to death and 100 injured when a fire swept through a private middle school in this town in Tamil Nadu's Thanjavur district today.
Read More...

நடிகை அல்ல... அக்மார்க் அம்மா

மேட்டுக்குடி வாழ்க்கை, கான்வெந்த் படிப்பு... ஆனாலும் வாய்க்கு வாய் 'அம்மம... அம்மா..." நான் கண்டிப்பான அம்மா

அதிர்ச்சி தகவல்கள்...

சற்றுமுன்னர் நண்பர் பாலாஜி விகடனில் வந்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

கும்பகோணம்:
தனியார் பள்ளியில் பயங்கர தீ விபத்து,
100க்கும் மேற்பட்ட மாணவிகள் பலி.

ஏதோ சத்துணவுக்கூடத்தில் தீ மூண்டுவிட்டது போலிருக்கிறது. ஸ்ரீரங்கம் திருமணமண்டப் அதிர்ச்சி, கடந்தவாரம் ஸ்பென்ஸர் பிளாசாவில் தீ.
நம்ம ஊருல என்னப்பா நடக்குது... ஏன் இதுமாதிரி அடிக்கடி நடக்குது? Welcome to Vikatan.com:

அசிங்கமான (எடத்து) குப்பை...

அண்ணே வணக்கம். இது அசிங்கமோ, உணர்வோ, மதமோ சம்பந்தப்பட்டது அல்ல, அப்படி எதாவது தப்புண்ணா மன்னிச்சுக்கோங்க. இது சும்மா நம்ம(அதாவது என்னோட) பொதுஅறிவ வளத்துகொள்ளத்தான், சரி பீடிகை போதும். நேற்றொரு வெசயம் கேளுவிப் பட்டேன் உண்மையா? ஆண்கள் 'சுன்னத்' செய்யப்படுவது போல - பெண்களுக்கும் உண்டாமே, நெசமா? (குறிப்பாக இங்க சிங்கை, மலேசியாவில்....). எனக்குத்தெரியும் அது சுத்தத்தை, சுகாதாரத்தை முன்னிறுத்தி செய்யபடுகிறது என்று.

எனக்கொரு கவிதை வேணுமடா...

நம்ப ரஜினி ராம்கியோட ரவுசப் பாருங்க...எனக்கொரு கவிதை வேணுமடா...

பஜ்ஜி தின்ன கதை...

நான் இல்லீங்க... நண்பர் 'சுவடுகள்' சங்கரோட பஜ்ஜி தின்ன கதை

Tuesday, July 13, 2004

அப்பப்பா...

ஹீம்... என்ன மாதிரி நேரம் கிடைக்கிறப்பல்லாம் எங்கயாவது மவுஸ் போனபோக்குல போய்ட்டே இருக்காம, சிலருக்கு இப்படியெல்லாம் பயனுள்ளவகையில எதாவது செய்யணும்னு தோணுது பாருங்களேன்... காதல்.காம் சிரமப்பட்டு நிறைய திரைப்பாடல்களின் வரிவடிவம் கொடுத்துள்ளார்கள். அது போல, கவிதைகளையும் - அழகிய படங்களுடன்... நம்ப உயிரெழுத்து கற்பகத்தோட கைவண்ண்ம் (அப்படின்னு நெனைக்கிறேன்!)

என்னமோ நடக்குது...

என்னமோ நடக்குது...

Techies join Pune rush, give up green card comforts

An article from Indian Express and posted the whole article here just to ensure everyone read it. Techies join Pune rush, give up green card comforts

Techies join Pune rush, give up green card comforts
Family ties, career opportunities, fat pay packets trigger reverse brain drain

SUDIPTA DATTA

Posted online: Tuesday, July 13, 2004 at 0030 hours IST

PUNE, JULY 12: • Vijay Mhaskar graduated from IIT Powai in the 80s and moved to the US in 1992. Ten years later, and after a stint at Sun Microsystems in San Diego, he moved back to India — to Pune and Veritas.

• Ram Pazhayannur, a mechanical engineer from Pune University, who went to the US in 1993, gave up a lucrative job with cGate in Minneapolis and returned home — to Pune and Persistent Systems.

• Abhay Patil, an MTech from IIT Powai, went to the US in 1993, but decided to shift base nine years later — to Pune and a startup CXO Systems

A reverse brain drain is on, and no one’s complaining. Many home-grown software professionals and engineers who went overseas in the late 80s and 90s are giving up the green card for an India posting.

‘‘India’s a fertile ground for out-of-the-box creative thinkers, reminiscent of the Silicon Valley of the 90s,” says Ram Pazhayannur, head of business development, at Persistent.

Having said that, Pazhayannur moved to personal reasons: ‘‘My parents are growing old and I wanted my daughter who’s about to enter first grade to be educated in India because education here is better than the West.” But moving back wouldn’t have been easy if he hadn’t found the right job. ‘‘It took me two years to find the right one,” he admits.

With Persistent undergoing one of the most important phases of its life cycle (read unprecedented growth), the onus is on him to take a 30-people company to a 3,000-people — and that’s a challenge he found difficult to refuse.

For Vijay Mhaskar too, the overriding reason was family, but the financial security that Veritas offered was a big draw. ‘‘By moving back I can have the best of both worlds... live at home and enjoy the good life because we are being paid so much better.” Ditto for Sharad Kamath, a manager at Veritas, who moved back from the US last October. ‘‘America is a good place to visit, look around, save some money... but I always wanted to come back to India.”

Once Abhay Patil, Director (India Operations) of CXO Systems, decided to come back to India in 2000. It took him two years to make the right career choice. As Pazhayannur knows, patience is the key. ‘‘It can never be a spur-of-the-moment decision. You have to prepare yourself mentally so that the transition is smooth.”

All agree that in the 10 years or so they were away, there have been a lot of positive changes: India has bridged the gap in the knowledge sector with the US; technology has improved; so has quality of life. But most important is the visible change in the work culture. Says Pazhayannur: ‘‘At least in the IT industry, there is no hint of red-tapism... we work to deadlines and have to deliver, which makes the job dynamic.”

Tarun Mathur, Chief Marketing Officer, Indus Software, pins it down to outsourcing. For a techie, this is where the action is because a great deal of technological work is being outsourced to India. No wonder the Americans are livid with outsourcing — they are not only losing jobs but trained personnel too.

Sunday, July 11, 2004

உயிரெழுத்து குழுமம்

மரத்திலேறி
கச்சேரிவைக்கிறது
சிறகு முளைத்த புல்லாங்குழல்
- சக்திகா

இது போன்ற பல நல்லகவிதைகளை
மரவண்டு தினம்கொண்டு சேர்ப்பார்.

என்னைப்போல்தான் அவர்களும்
கணிணியைக்கட்டியழுகிறார்கள்
என்றாலும், என்னைப்போல் படிப்பதோடல்லாமல்
பலரும் நல்ல பல கவிதைகள் எழுதுவதுண்டு.
அதனால் அவர்கள் வெறும் கணிணியர் மட்டுமல்ல
நல்ல கவிஞர்கள்

தொடர்ந்து தெரிந்துகொள்ள:
உயிரெழுத்து

Wednesday, July 07, 2004

என்னங்க Officela ரொம்ப வேலையா...

என்னங்க Officela ரொம்ப வேலையா... அதெல்லாம் எப்போதும் இருக்கிறதுதானே, அது கிடக்கட்டும், கொஞ்சம் இதப்படிங்க மொதல்ல...MSNBC - The Secret Lives of Wives: "The Secret Lives of Wives"

Saturday, July 03, 2004

கந்துவட்டித் தடைச் சட்டம்

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னால் ஜெயலலிதா அரசு எக்கச்சக்கமாக கந்துவட்டிக்குக் கடன் கொடுக்கும் கூட்டத்தை வழிக்குக் கொண்டுவரும் வரையில் ஒரு அவசரச் சட்டத்தை இயற்றியிருந்தார். [Tamil Nadu Prohibition of Charging Exorbitant Interest Ordinance, 2003]. இது பின்னர் சட்டசபையில் சட்டமாக மாற்றப்பட்டது.

அப்பொழுது எல்லோரும் இதை வரவேற்றனர். தெருவெங்கும் 'கந்துவட்டியைத் தடை செய்த புண்ணியவதியே வாழ்க!' என்றெல்லாம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஆனால் எந்த செய்தித்தாளும், இதழும் இதன் விவரங்களைக் குறிப்பிடவில்லை. அவ்வளவு முட்டாள்தனமாக இயற்றப்பட்டுள்ளது இந்த சட்டம் என்று இப்பொழுதுதான் புரிகிறது.

இன்றைய தி பிசினஸ் லைன் செய்தியில் சென்னை உயர்நீதி மன்றம் மேற்படி சட்டத்திற்கு இடைக்காலத் தடை வழங்கியுள்ளது. இந்த சட்டம் என்ன சொல்கிறது?கந்துவட்டித் தடைச் சட்டம்

Thursday, July 01, 2004

ஓடிவரும் முதுமை

ஓடிவரும் முதுமை

எ.வீ.பொங்கல்

ஊரில் அம்மா பொங்கலன்று இதுமாதிரிதான் ஒரு large scale குழம்பு வைப்பார்கள் - தெருவில் கேட்கும் அனைவருக்கும் கொடுப்பதற்கு. எனக்கு எல்லாத்தையும் விட அதுதான் பிடிக்கும்... எ.வீ.பொங்கல்

Wednesday, June 30, 2004

ஒரு விபரீத ஜோடி

என்னப்பா இது...? இந்தியாவில GirlFriend-னு ஒரு படம் வந்திருக்குதுன்னு பரபரப்பா பேசினாங்க... இந்த வார 'அவள் விகடன்' ல அப்படி ஒரு ஜோடியின் வாழ்வுபற்றிய கட்டுரையே வந்திருக்குது...ஒரு விபரீத ஜோடி

Keep It Short and Sweet (KISS)

முத்தத்துக்கு விளக்கம் தெரியும்தானே...!?

பணம் சம்பாதிக்கலாம் வாங்க...

கையில சும்மா இருக்கிற பணத்தை, இது மாதிரி எதாவது பண்ணுங்களேன்...பணம் சம்பாதிக்கலாம் வாங்க...

தமிழ் செம்மொழி

தமிழ் செம்மொழி

ஒரு பெப்சி நேரம்....

ஹெல்லோ யாருங்க..உமாங்களா? பெப்சி உமாங்களா? சன் டிவி பெப்சி உமாங்களா? உண்மையாத்தானே சொல்லுறீங்க, ஐயோ சந்தோசமா இருக்கே! ஏங்க, உண்மையிலே பெப்சி உமாங்களா? ஐயோ..நிஜமாவே பெப்சி உமாங்களா?

ஹா ஹா ஹா (சிரிக்கிறார்)

ஆமாங்க, நான் தான். சொல்லுங்க, உங்க பேரு என்ன? எங்கேயிருந்து பேசுறீங்க. என்ன பண்ணிண்டுருக்கேள்?

ஹெல்லோ பெப்சி உங்கள் ஜாய்ஸ்....

சலாம் கலாம்

கலாம் சிறப்பிதழ்

Bill Gates brushes off threat of Linux - Sify.com

Bill Gates brushes off threat of Linux - Sify.com

திரையுலகச் செய்திகள்

திரையுலகச் செய்திகள்

மன்மோகன்சிங்கின் மனக்கவலை

மன்மோகன்சிங்கின் மனக்கவலை

Tuesday, June 29, 2004

கஜேந்திரா

பாபா கவுண்ட் டவுன் இஸ்டாப்பு ஆயி போச்சி, இப்போ கஜேந்திரா கவுண்ட் இஸ்டார்ட்டு ஆயிக்கீது. கஜேந்திரரு மரவெட்டி ஐயாவ சைடு காட்ட மரவெட்டி ஐயாவோட சிஸ்யப்புள்ளிங்கோ சிலுத்துக்கின்னாங்கோ. கஜேந்திரரோட அடிபொடிங்களும் சொம்மா இர்க்குமா, அதுங்களும் "கஜேந்திரரு பவரு காட்றோம் பாரு"ன்னு அட்ச்சி ஆடுதுங்கோ.
கஜேந்திரா

மோதி மிதித்து விடு பாப்பா!

ARUN VIEWS

விண்கப்பல் ஒன்று

விண்கப்பலொன்று

Friday, June 25, 2004

வருக "கிராப்பு' தலை பெண்கள்!

வருக "கிராப்பு' தலை பெண்கள்!

வளர்ந்த இந்தியா : நாம் என்ன செய்யவேண்டும்?

இந்தியக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு ஆ.ப.ஜெ. அப்துல்கலாமின் வளர்ந்த இந்தியா : நாம் என்ன செய்யவேண்டும்?

கவிதாயினி சுகிர்தராணி

இந்த பெண்கவிஞர்கள் சிலர் பற்றி - குறிப்பாக குட்டி ரேவதி (அவருடைய "புத்தகத்தலைப்பு"க்காக), சல்மா, சுகிர்தராணி என்று எழுத, பேசக்கேட்டிருக்கிறேன். அவர்களுடைய கவிதையெதுவும் படித்ததில்லை என்ப்தால், ஏனென்று புரியவில்லை. இன்று கவிதாயினி சுகிர்தராணி பற்றிய ஒரு கட்டுரை, அவருடய கவிதையுடன் வந்திருக்கிறது - படித்துப்பாருங்கள்... கவிதாயினி சுகிர்தராணி

தமிழில் நவீன கவிதைகள் - தொடர் கட்டுரை

யுகபாரதி, மனுஷ்யபுத்திரன் இன்னும் பலர்...

min manjari/மின் மஞ்சரி

min manjari/மின் மஞ்சரி

தவறு எங்கே

தவறு எங்கே - 'நேசமுடன்' வெங்கடேஷ் & பத்ரி

Friday, June 18, 2004

சங்கம் - தமிழ் பல்துறை விவாதக்களம்

சங்கம் - தமிழ் பல்துறை விவாதக்களம்

அப்பன் பெயர் தெரியாத குழந்தை

வழக்கமாக சாக்கடை ஓரத்தில் கண்டெடுக்கப்படும், சேரியில் வளரும், ஐந்து வயதில் பீடி பிடிக்கும்,... மொத்தத்தில் புதிய பாதை பார்த்திபனைப் போல இருக்கும். இதுதான் காலம் காலமாக நமக்குத் தெரிந்தது. ஏனென்றால் இந்த சமூகத்தில் அப்பன் பெயர் தெரியவேண்டியது மிகவும் அவசியம்.

இனி...

இரண்டு அம்மாக்கள் சேர்ந்து ஒரு குழந்தையை உருவாக்க முடியும். ஆண்களே தேவையில்லை இந்த உலகில்? ஆச்சரியமாக இருக்கிறதா? சமீபத்தில் இது எலிகளில் சாத்தியமாகியிருக்கிறது.

கவனிக்கவும். இதற்குத் தேவை இரண்டு அம்மாக்கள். எனவே இது நகலாக்கம் இல்லை. நகலாக்கத்தில் ஒரு உயிரி தன்னைத்தானே நகலெடுத்துக் கொள்கிறது. ஆனால் இந்த முறையில் ஆணும் பெண்ணும் இணைந்து உருவாவதைப் போலவே "இரண்டு வேறு" உயிரினங்கள் இணைந்து குழந்தையைப் பெற்றெடுத்திருக்கின்றன
அப்பன் பெயர் தெரியாத குழந்தை

Thursday, June 17, 2004

பத்ரி பற்றி...

நான் தினமும் செல்லும் ஒரு வலைப்பதிவு, நண்பர் பத்ரியுடடயது. அவர் பதிப்பது எல்லாமே யான்பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும் வகையிலுருப்பதால், என் குப்பையிலிருந்து இணைப்பு கொடுத்து வருகிறேன். இங்கு அவரைப்பற்றி அவரே எழுதிய ஒரு சிறு குறிப்பு: பத்ரி பற்றி...

அரசு நிதிநிலை 2020 - நீண்டகால முன்னோக்கு

அரசு நிதிநிலை 2020 - நீண்டகால முன்னோக்கு

Wednesday, June 16, 2004

The President of India : Welcome

நமது அதிபர் கலாம் அய்யாவின் அதிகாரபூர்வ இணையப்பக்கம். இதன் மூலம் அதிபரைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளவும், அதிபர் மாளிகையை வலம் வரவும் இயலும். The President of India : Welcome

கிரிக்கெட் கவரேஜ்

இந்த வாரம் தமிழோவியத்தில் கிரிக்கெட் கவரேஜ் பற்றி. தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் கிரிக்கெட் ஒளிபரப்பு எப்படி நம்மை வந்தடைகிறது? பின்னணியில் வேலை செய்பவர்கள் யார் என்பதைப் பற்றிய சிறு குறிப்பு. கட்டுரையில் ஒரு பரிசுக்கான கேள்வியும் உண்டு.
கிரிக்கெட் கவரேஜ்

அட்சரம் பழகியது

அட்சரம் பழகியது

எஸ். ராமகிருஷ்ணன் "படித்ததும் பிடித்ததும்"

எஸ். ராமகிருஷ்ணன் "படித்ததும் பிடித்ததும்"

Monday, June 14, 2004

எ-கலப்பை (ஒரு இலவச தமிழ் மென்பொருள் - யுனிக்கோடுடன்...)

எ-கலப்பை

சற்றே நிமிர்ந்தேன்... தலைசுத்திப் போனேன்...

வணக்கம்.

ஓரிரு வாரங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு சாகித்ய அகாதமி விருதை பெற்றதை முன்னிட்டு பாராட்டு விழா இங்கு சிங்கையிலும், மலேசியாவிலும் நடந்தது. விழாவில் பேசிய அனைவரும் இது தொடக்கம்தான், விரைவில் நோபல் பரிசு பெற்றுத்தர வேண்டும் என்று வேண்டினார்கள்.
கவிப்பேரரசு பேசும்போது, தமிழ் செம்மொழியாகும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அறுதியிட்டு, உறுதியுடன் கூறினார்கள். இப்போது அறிவிப்பு வெளியாகிவிட்டது. நன்றி.

விழாவன்றுதான் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' வாங்கினேன், படித்த வரை மிகவும் சிறப்பாக இருக்கிறது, நல்ல அனுபவம் - கிராமத்து வாழ்வை பேயத்தேவருடன்
நாமும் வாழ முடிகிறது.

விழாவுக்கு முதல்நாளிரவு கவிஞருடைய "கேள்விகளால் ஒரு வேள்வி"
(வெவ்வேறு நேரத்தில், வடிவத்தில் வந்த கவிஞரின் கேள்வி/பதில் தொகுப்பு)
புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தேன் அதிலிருந்து ஒரு பகுதி:

கேள்வி: நீங்கள் ரசித்த சில புதுக்கவிதைகளைச் சொல்ல முடியுமா?

பதில்:
அழகாகச் சொல்லுவேன். அது எனக்கு ஆனந்தமல்லவா?

அண்ணன் மீராவின் அச்சுக்கு வராத ஒரு கவிதையைப் பார்க்க
நேர்ந்தது.

அப்படியே சொக்கிப் போனேன்.

புதுக்கவிதையென்பது அழகியலுக்கு அந்நியமானது என்ற கருத்து
பரவலாகப் பரப்பப்படுகிறது.

அல்ல; அப்படியல்ல.....

(என்று தொடர்கிறது... இடையில்...)

இன்னும் ஒரு கவிதை.

அங்க வர்ணனையக்கூட ஒரு கவிஞன் எவ்வளவு அழகாகச்
சொல்லியிருக்கிறான்
என்று வியந்து வியந்து வியப்பின் உச்சிக்குச் சென்று விழுந்து
விட்டேன்.

நுட்பமான ஒரு விஷயத்தையும் அவன் செப்பமாகச் சொல்லியிருக்கிறான்.

நான் படித்த அந்தக் கவிதை நயமாக இருக்கிறது.
ஆனாலும் உங்களுக்குச் சொல்ல எனக்குப் பயமாக இருக்கிறது.

தன் காதலியைப் பார்த்து அவனது கவிதை கண்ணடிக்கிறது.

பிறகு சொல்கிறது;

"உன் இடையப்
பார்த்தபோது
பிரம்மன் கஞ்சன் என்று நினைத்தேன்.
சற்றே நிமிர்ந்தேன்
அவன் வள்ளலென்று
கண்டு கொண்டேன்."

இப்படியெல்லாம் அழகுணர்ச்சியின் அடையாளங்களாக மட்டுமல்ல -
போர் முரசின் குரல்களாக ஒலிக்கும் புதுக்கவிதைகளையும்
ஓராயிரம் உதாரணம் காட்ட முடியும்.

(என்று பதில் மேலும் தொடர்கிறது).

இந்த நூல் ஆறேழு வருடமாக என்னிடம் இருந்தாலும் கூட
அந்தப்பக்கத்தை அன்றுதான் வாசித்த நினைவு.
படித்தவுடன் உண்மையில் மிகுந்த (இன்ப) அதிர்ச்சி.

ஜீன்ஸ் -திரைப்பாடல்கள் வெளியானதிலுருந்து இன்று வரை
இந்தப் பாடல் வரிகளைக்குறிப்பிட்டு
கவியரசையும், ஐஸ்வர்யாவையும் புகழ்ந்து வந்திருக்கிறோம்.
ஆனால் அந்த புதுக்கவிதைக்கு சொந்தக்காரன் யாரோ!?

பி.கு:
என்னிடம் இருப்பது நூலின் மூன்றாவது பதிப்பு - ஜனவரி 1995ல்
வெளியானது.
அதில் கவிஞர் கையெழுத்திட்டுருப்பது 15.11.84 என்ற தேதியுடன்,
அதனால் நூலின் முதல் பதிப்பு 1984-லேயே வெளியாயிருக்கிறது.
அதை எப்படிப் பயன்படுத்தியுள்ளார் பாருங்கள்...
அந்த அழகுணர்ச்சி பாராட்டுக்குரியது.
முன்னர் ரோஜா வெளியானபோது,
"சின்ன சின்ன ஆசை..."யைக்கூட யாரோ என்னோடது என்ற
செய்தி படித்த நினைவு.

என்றென்றும் அன்புடன்,
அன்பு

யுனிகோடும் தமிழ் இணையமும்

யுனிகோடும் தமிழ் இணையமும்

E M E R G I C . o r g: Rajesh Jain's Weblog on Emerging Technologies, Enterprises and Markets

E M E R G I C . o r g: Rajesh Jain's Weblog on Emerging Technologies, Enterprises and Markets

செம்மொழி தமிழ்

தமிழ் செம்மொழி என்று ஒரு வழியாக (கழுத்தைப்பிடித்து) அறிவிக்க வைத்தாகிவிட்டது. சரி... செம்மொழி என்றால் என்ன? ஒரு மொழி செம்மொழி என்று வகைப்படுத்த என்ன தகுதி வேண்டும்? அதனால் என்ன பயன்?... இதெல்லாம் என்னைப்போலவே உங்களுக்கும் தோன்றுகிறதுதானே!?

இங்கு ஒலியில் (சிங்கை வானொலி - ஒலி 96.8) ஒலியின் தலைவர் பாண்டியன், கவிஞர் வைரமுத்தைப் பிடித்து - அவர் குரலில் இது தொடர்ப்பக செம்மொழி பற்றி கூறியதை ஓரிரு தினங்களுக்கு முன்னர் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பினார்கள். அதன் ஒரு பகுதியை இப்போது அவ்வப்போது ஒலி பரப்பி வருகிறார்கள். கலைஞரும் சன்- னில் வழக்கம்போல் தோன்றி - செம்மொழியினால் என்னபயன் என்று கூறினார்கள். சென்ற வார துக்ளக் அட்டையில் ஒரு கருத்துப்படம் (cartoon) வந்திருந்தது... (கலைஞர் அவர்குழாமுடன் - 'இந்தா தமிழ்செம்மொழி அறிவிப்பு வந்தாச்சு, உன்னுடைய கவலைகள் யாவும் தீர்ந்தாச்சு என்று தமிழ் பாமர மக்களைப் பார்த்து கூறுவதாக...). அதனால் கலைஞரோ, கவிஞரோ சொன்னால் - அரசியல் பம்மாத்தாக தெரியலாம். அதனால் இந்த தமிழ் செம்மொழி பற்றி
George L. Hart, Professor of Tamil, Chair in TamilStudies, University of Berkeley முன்னொருமுறை எழுதியது. இவர் அரு�

தினமலரின் ஒழுக்கக்கேடு

நண்பர்கள் பாலாஜி, செல்வா ஆகியோர் தினமலர் தொடர்ந்து படிப்பவர்கள். அதிலும் தேர்தலின்போது தினமலர் தொஅட்ர்ந்து எழுதிவந்த ராமதாஸ்/ரஜினி தொஅடர்பான காரசாரமான செய்திகளை ரசித்து படித்து, விவாதித்து வந்தனர். இப்போது தினமலர் வெளியிட்டு வந்த வாசகர் கடிதம் தொடர்பான சர்ச்சை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக கிரிகின்ஃபோ பத்ரி தன்னுடைய வலப்பதிவில் இட்டுள்ளார், தொடர்ந்து பட்யுங்கள்: தினமலரின் ஒழுக்கக்கேடு

Friday, June 11, 2004

அழகாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுங்க்ள்...

அழகாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுங்க்ள்...

Jayanthi Sankar from Singapore has brilliantly analysed the World-Over education.

அமுதசுரபி @ Sify.com

இதுவும் மெட்டிஒலி பற்றித்தான்...

Snegithi Welcomes You

ரஜினிக்கு வாசகர் கடிதம் - குமுதம்

ரஜினிக்கு வாசகர் கடிதம் - You need to login to read...

Yahoo! Groups : uyirezuththu Messages : Message 5265 of 5266

Yahoo! Groups : uyirezuththu Messages : Message 5265 of 5266

எப்போ கல்யாணம் ஐஸ்வர்யா?

எப்போ கல்யாணம் ஐஸ்வர்யா ரஜினி?

A quantum leap in global cash management - TCS/Standard Chartered Story

TCS - Lead feature >: "Standard Chartered Bank gets the edge with a feature-rich, global cash management solution.

With widespread operations in the Asia-Pacific, South Asia, the Middle East, Africa, the UK and the Americas, Standard Chartered Bank's (SCB) global network is among the largest in the world. The bank has 30,000 professionals working in over 500 offices in more than 50 countries serving both consumer banking and wholesale banking customers.
To meet the pressing needs of corporate clients, SCB needed an IT-enabled global cash management solution. TCS came up with an elegant solution: Quantum Leap, a comprehensive cash management solution, backed by innovative technology, which offers an array of services to SCB's corporate customers."

Holy bikinis come off as Cavalli falls on his feet - The Times of India

Holy bikinis come off as Cavalli falls on his feet - The Times of India

TCS to offer 5.54 cr shares via IPO

TCS to offer 5.54 cr shares via IPO

India's largest information technology company Tata Consultancy Services Ltd will offer 5.54 crore (55.4 million) equity shares of Re 1 each, including a fresh issue of 2.27 crore (22.7 million) shares, in its initial public offering through a book-building route.

Rediff.com: Top 10

Rediff.com: Top Emailed Links

No takers for Vajpayee's BMWs

No takers for Vajpayee's BMWs

Onkar Singh in New Delhi | June 10, 2004 15:48 IST | Rediff

Four luxury BMW cars, custom fitted for then prime minister Atal Bihari Vajpayee, have become a headache for the new government.

While Prime Minister Dr Manmohan Singh, known for his dislike for ostentation, is reluctantly using two of them, there are no takers for the rest.

The cars, that cost the government Rs 5 crore (Rs 50 million) a piece, are armoured vehicles capable of withstanding a landmine blast. They are fitted with latest security and communication equipment.

According to well placed sources, President A P J Abdul Kalam, Vice-President Bhairon Singh Shekhawat and Congress president Sonia Gandhi have all refused to use the cars.

S M Khan, the President's press secretary, said Rashtrapati Bhavan does not need the vehicle.

"At the moment there is no such proposal with us. The President's fleet of cars is complete and he uses a Mercedes for travelling. Hence, we do not require any more vehicles," Khan told rediff.com

"Why should the President touch the hot potato? Even the vice-president does not seem to be interested in them (the cars)," a senior intelligence official said.

Sonia too has made clear her preference for Ambassador cars.

The four BMWs were bought about six months ago on advice from the Special Protection Group, which provides protection to the prime minister, his family, former prime ministers and their families.

Dr Singh, who drove a white Maruti 800 till he was appointed prime minister, was uncomfortable with the idea of moving around in a BMW. But the SPG put its foot down.

What must also bother Dr Singh is the fuel efficiency of these cars. According to sources, Vajpayee's office spent around Rs 20 lakh (Rs 2 million) these past six months on fuel for these automobiles.

Top Bharatiya Janata Party leaders now claim that only one BMW was initially ordered for use by Vajpayee. But SPG agents objected because a single BMW would have stood out like a sour thumb in a cavalcade of cars that the prime minister travels in and become a security nightmare.

That is one reason why Ambassador cars have been preferred for so long by Indian VIPs.