Thursday, September 09, 2004

குரங்கு குல்லாய்க்காரன் கதை (புதிய பதிப்பு)

விகடனில் வந்த இந்தக்கேலிச் சித்திரத்தை இட்லி வடையில் வெளியிட்டு இருந்தார்கள்.


கார்ட்டூன் பற்றிய என்னுடைய பின்னூட்டம்:
(Haloscan என்னுடைய நீளக் கமெண்டை ஏற்றுக்கொள்ளாததால் (!?) இங்கே.)

சில தினங்களுக்கு முன்னர் இந்த குரங்கு/குல்லாய் கதையின் தொடர்ச்சி/மேம்படுத்தப்பட்ட பதிப்பு மின்னஞ்சலில் வந்தது, நீங்களும் படித்திருக்கலாம்.

"... அந்த குல்லாய்க்கார இளைஞனும் தான் அணிந்திருந்த குல்லாயைக் கழட்டி வீசினானாம். அதையடுத்து (தாத்தா சொன்னமாதிரி) குரங்குகளும் வீசியெறியும் என்று எதிர்பார்த்திருந்தான்.

அப்போது (கதையின் எதிர்பாரா திருப்பமாக) ஒரு குரங்கு மேலிருந்து ஓடி வந்து கனநேரத்தில் அவன்வீசிய குல்லாவையும் எடுத்துக்கொண்டு மேலே சென்றதாம். பின்னர் அங்கிருந்து கொண்டு சொல்லியதாம்:
'மடையா... ஒனக்கு மட்டும்தான் தாத்தா இருப்பாரா?' என்று".

அதனால, வெங்கையா உமாபாரதி மீண்டும் பதவி ஏற்கமாட்டார்னு - அறிக்கைகொடுத்துண்டிருக்கும்போதே, காங்கிரஸ் வேறுயாராவது பதவியேற்க ஏற்பாடு பண்ணிவிடப்போகிறது.

மதன் சார் இந்தப்புதுக்கதையப் படித்தாரா எனத் தெரியவில்லை. இந்தவார இறுதியில் அவர் சிங்கை வரும்போது, முடிந்தால் கேட்கவேண்டும். ஆம், கமலுடன் மதனும் கலந்து கொள்கிறார் அனைத்துலக அரங்கில் தமிழ் கருத்தரங்கில்.

2 comments:

Mullai said...

முதலிலை சொல்லுங்க. உங்களுக்கு தாத்தா இருக்கிறாரா?

அன்பு எனது பதிவில் நீங்கள் எழுதிய கருத்து தவறுதலாக அழிந்து விட்டது. தவறுக்கு வருந்துகிறேன்

அன்பு said...

முல்லை...
பின்னூட்டத்திற்கு நன்றி. என்னுடைய தாத்தா தவறி, சில காலம் ஆகிவிட்டது. மேலும், எனக்கு விபரம் தெரிந்து இதுபோன்ற கதையேதும் சொன்னதில்லை (அல்லது அப்படி பழகியதில்லை).

அது சரி, நீங்கள் என்ன அழிந்துவிட்டது என்கின்றீர்கள்? நீங்கள் குறிப்பிடுவது இட்லிவடை பின்னூட்டத்தையா? - அப்படியென்றால், அங்கு இப்போது இருக்கிறதே - வருத்தப்படும்படி ஒன்றும் நடக்கவில்லை.