Friday, October 22, 2004

சிரிப்பே அறியா சிடுமூஞ்சி...

சிரிப்பே அறியா சிடுமூஞ்சியை நினைத்து இன்று குமாரும் நேற்று ராஜாவும்
இன்னும் சிலரும் மிக வருத்தப்பட்டிருந்தனர்.

ஆனால் எனக்கென்னவோ அது ஒரு நகைச்சுவையான, மக்களை ஈர்க்கும் விளம்பரமாகத்தான் எடுத்துக்கொள்ளப்படுமே தவிர அதையும் மீறி அதில் தோன்றும் 'பிறன்மனை' பற்றியெல்லாம் என்னைப்போலவே, பெரும்பாலானவர்களும் சிந்திக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. வேண்டுமானால் லியோனி வகை பட்டிமன்றங்களில் 'பிரமாதம்ம்ம்...' என்பதுபோல் இதுவும் சொல்லிக்காட்டப்படும். வேறேதும் அதிர்ச்சியடையுமளவு இதில் அதிகம் ஒன்றுமில்லை.

ஆபாசமான மற்ற விளம்பரங்களைப் பற்றி அல்ல என்னுடைய கருத்து. இதுதான் இதுக்குத்தான்!

அதுபோக இன்னொருவகையில் பார்த்தால், நம் ஊரில் (ஏன் உலகத்தில் பல இடங்களிலும்) இருக்கும் சாதி/மத/சொந்தம்/பணத்துக்காக செய்துகொள்ளும் இதுபோன்ற அதிக வயதுவித்தியாசமான திருமணம் செய்பவர்களுக்கும், அதற்கு துணைபோவர்களுக்கும் கொடுக்கும் சாட்டையடியாக தோன்றுகிறது.

மேலும், இப்போதெல்லாம் பலரும் வேலையில் மூழ்கி குடும்பத்தை, குறிப்பாக மனைவியை/துணையை மறந்து திரியும் இதுபோன்ற சிடுமூஞ்சிகளுக்கு கொடுக்கும் ஒரு எச்சரிக்கையாக கூட எடுத்துக்கொள்ளலாம்.

சரி... சரி... நிறுத்திட்டேன்.

3 comments:

யோசிப்பவர் said...

இது போன்ற விஷயங்களில் கவலைப் படுவதற்கு என்ன இருக்கிறது என்று நினைக்கும் உங்களைப் போன்றவர்கள்தான் இந்த சமுதாயம் மேலும் கெடுகிறது(சரி, அதைத் திருத்த முடியாது!). இது போன்ற விளம்பரங்களைப் பார்க்கும் இளைய சமுதாயத்தினருக்கு பிறன் மனை நோக்குவது தவறான ஒன்றல்ல(உங்களுக்கே தவறாகத் தெரியவில்லையே!) என்ற எண்ணம் மனதில் பதிந்து போகாதா. எற்கெனவே கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதால்தான், உங்களைப் போன்றவர்களே தவறல்ல என்று நினைக்கும் வெட்கக்கேடான நிலைக்கு வந்திருக்கிறோம். இதை இப்படியே விடாமல் அனைவரும் இது போன்ற விஷயங்களை கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கண்டிக்கா விட்டாலும் ஆதரிக்காதீர்கள்!!!

Anonymous said...

அவள் விகடனில் வந்த வாசகி கடிதம்:

மைனா என்றொரு பெண். அவளுடைய கணவன் கஞ்சனாம். சமையலறையில் மைனா. அந்த வழியாக வந்த மைனர் அவளை ஜன்னல் வழியாக பார்க்கிறார். பக்கத்து கடையில் ஒரு மிட்டாய் வாங்கி சாப்பிடுகிறார். அதன் மணமும், புத்துணர்ச்சியும் ஜன்னல் வழியாக மைனாவிடம் சென்று அவளை மயக்கி மைனர் சைக்கிளின் பின்னால் செல்ல வைக்கிறது & இது ஒரு விளம்பரம்!

பெண்களை இது எவ்வளவு மட்டரகமாக சித்தரிக்கிறது பாருங்கள்! கணவனை விட்டு கண்டவனுடன் ஒரு பெண் செல்வாளா? அதேபோல் அது குளிர்பான விளம்பரங்களில் பெண்களை வெறும் உள்ளாடைகளில் காட்டுகிறார்கள். இப்படி கருத்துக்களில் ஆபாசம், காட்சியில் ஆபாசம் இருப்பதை தடை செய்ய மாட்டார்களா? இதுபோன்று விளம்பரப்படுத்தப்படும் பொருட்களை நாம் வாங்காமல் புறக்கணித்தால்தான் இனி இப்படி விளம்பரங்கள் வராது என்று கொதித்தெழுகிறார் மதுரை, வ.சந்திரா மாணிக்கம்.

Anonymous said...

என்னா தான் னகைச்சுவை விளம்பரம் என்றாலும் இது கொஞ்சம் அதிகம்.
ஆனால் இப்போது வரும் அதிகமான விளம்பரம்கள் இப்படி தான் இருக்கின்றன.
விளம்பரதிற்கு சென்சார் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அபர்ணா.