Sunday, October 24, 2004

வலைப்பதிவுகளின் வழி நான் கற்றதும் பெற்றதும்...

சிலகாலமாகவே நம்மில் பலரும் சொல்லிக்கொண்டிருப்பது, முன்னர் திரு. சுஜாதா மட்டுமே எழுதி நாம் தெரிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் போய், இன்று வலைப்பதிவுகளின் மூலம் பல விடயங்கள் தெரிந்தகொள்ள முடிகிறதென்பது. அந்தவரிசையில் இந்தவார கற்றதும் பெற்றதும் தொடரில் வந்துள்ள சூப்பர்மேன் கிறிஸ்டோஃபர் ரீவ் பற்றியும், பிரெஞ்சு தத்துவஞானி ழாக் டெர்ரிடா பற்றிய விஷயமும்.

இது தொடர்பில் பத்ரி முன்னர் எழுதியிருந்த பதிவைத் தேடி இங்கே முடியவில்லை, மன்னிக்கவும். இந்த கட்டுடைக்கும் (deconstruction of the text) வித்தை பெட்டையின் சில பதிவுகளிலும் இருப்பதாகக் கூட குறிப்பிட்டிருந்தார். அனைவருக்கும் நன்றி.

4 comments:

அன்பு said...

இதை இங்கு குறிப்பிட்டதற்கு காரணம், வலைப்பதிவுகளில் தேவையான, உருப்படியான விஷயங்கள் வருகிறதென்பதுதான் - சுஜாதா சாரை குறைத்து மதிப்பிட அல்ல.

வீரமணிஇளங்கோ said...

அன்புவுக்கு வணக்கம்!!!

தங்கள் குப்பை நறுமணம் வீசுகிறது.
நான் தற்போதுதான் வலைப்பூவில் நுழைந்திருக்கிறேன்.நிறைய தொழிற்நுட்பவிஷயங்கள் இன்னும் பிடிபடவில்லை.
வலைப்பூவில் நீங்கள் சிங்கப்பூர் பற்றி எழுதியதைப் படித்தேன்.நல்ல பணி.
எங்கோ எங்களுக்கு அருகாமையில் தான் இருக்கிறீர்கள் போல.
அண்ணன் பிச்சினிக்காடு நூல்வெளியிட்டுப்பற்றிக்கூட குறிப்பிட்டிருந்தீர்கள்.எனவேதான் அருகாமை என்று சொன்னேன்.
நேரம் இருந்தால் கவிமாலைக்கு வாருங்கள்.மாதந்தோறும் இறுதி சனிக்கிழமைகளில்,கடற்கரைச்சாலையில்(அதாங்க பீச் ரோடு)
நன்றி அன்பு.

Anonymous said...

சுஜாதா சாருடைய இணைய தளம் ஏதேனும் பற்றி உங்களுக்கு தெரியுமா?

அன்பு said...

சுஜாதா அவருக்கென்று தனியாக வலை/வலைப்பதிவு ஏதும் வைத்திருக்கவில்லை(என்று நினைக்கிறேன்). அந்த குறையை நமது நண்பர் தேசிகன் போக்குகிறார்.

தேசிகனின் வலைப்பதிவு இங்கே...