Sunday, October 03, 2004

TMS மற்றும் KS Rajah

நண்பர் யாழ் சுதாகர் என்பார் இரு அருமையான பதிவுகளை ஆரம்பித்து, இரு அமர்க்களமான பதிவுகளை பதிந்துள்ளார். அதை படித்து, அனுபவித்துப் பாருங்கள் - மிகவும் இனிமை.

TMS பற்றிய பதிவு அமர்க்களமாக இருக்கிறது. ஒவ்வொரு பாடலையும் அருமையாக ரசித்து, உள்வாங்கி அனுபவத்திருக்கிறார் அந்த அனுபவம் இங்கே எழுத்தாக வந்துள்ளது, அருமை.

அதைவிட அருமையான பதிவு: இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே எஸ் ராஜா
பற்றியது. அந்த அமரருக்கு ஒரு கவிதாஞ்சலியாக தனது ஒலித்தொகுப்பு ஒன்றையும் இணைத்துள்ளார். அந்த "பிறந்த நாள்... இன்று பிறந்த நாள்..." ஓசையக்கேட்டவுடன் எனக்குள்ளேயும் இலங்கை வானொலியின் நினைவுகள் வந்துவிட்டது. அதிலும் சுதாகர் சொல்லும் 'குரு' பட உண்மை!

என்ன சொல்லி பாராட்டுவதென்றே தெரியவில்லை. ஒவ்வொருக்குள்ளும் எப்படியெல்லாம் திறமை ஒளிந்திருக்கிறது பாருங்களேன். சத்தியமாக திரு யாழ்சுதாகர் என்பாரை இதுவரை கேள்விப்பட்டதில்லை. அவரை வெளிக்கொண்டுவரும் ஊடகமாக இந்த "வலைப்பதிவு" இருப்பதுகண்டு புளகாங்கிதமடைகிறேன். இதைப்போன்ற திறமைசாலிகள், இலங்கை அன்பர்கள்/நண்பர்கள் அனுதினமும் புதுப்புது வலைப்பதிவுடன் வருகின்றார்கள். அவர்களை வாழ்த்தி வரவேற்போம்.

(பி.கு: மன்னிக்கவும் சுதாகர், BlogDriveல் எப்படி பின்னூட்டம் கொடுக்கவென்று தெரியவில்லை, அதனால் இங்கே.)

6 comments:

அன்பு said...

நடிகர்திலகத்துக்கும் ஒரு தனி வலைப்பதிவு ஒன்றை அமைத்திருக்கிறார். அதிலும் நடிகர் திலகத்தின் பொன்விழா ஆண்டையொட்டிய நினைவு பாடல் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

அய்யோ... இதையெல்லாம் எழுதியபிறகுதான் ஒரு பின்னூட்டத்திலிருந்து அறிகிறேன்... அந்த யாழ் சுதாகர் வேறுயாருமல்ல: நம்ப சுரதா-தான்.

அய்யா என்ன இப்படி சக்கைப்போடு போடுறீங்க. தொழில்நுட்பத்தில் உங்களின் திறமைகண்டே ஆடிப்போய் இருக்கிறேன், இன்று இது வேறயா. அடப்போங்கய்யா, உங்களை மாதிரி ஆட்களால்- இப்போது நாமெல்லாம் ஏன் இருக்கிறோம் என்று வெறி வருகிறது.

தொடர்ந்து செய்யுங்கள் அருமை.

அன்பு said...

ஒரு அவசரவேலை காத்திருந்தாலும், அதை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என்னை கட்டிப்போட்டு விட்டீர்கள். உங்கள் ஆக்ரமிப்பு சத்தியமாக இந்த ஒருமணி நேரத்துடன் முடியாது - என்னுள் ஆட்கொண்டுவிட்டீர்கள், உங்கள் கவிதாஞ்சலி மூலம்.

இதுவரை இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒலி/ஒளிபரப்பு நிறுவங்கள்தான் செய்யக்கேட்டிருக்கிறேன். ஆனால், ஒரு தனிப்பட்டவராக - உங்களின் தமிழ், அனுபவம், முதல்தர ரசிப்புத்தன்மை மற்றும் தொழில்நுட்பம் இயைந்த திறமையால் இப்படியொரு அஞ்சலி செலுத்தியிருகிறீர்களே, உங்களை என்ன சொல்லிப்பாராட்டுவது.

உங்களைப்போன்றவர்களால் 'தமிழ்' மிகவும் கொடுத்துவைத்திருக்கிறது. வலைப்பதிவின் நீள, அகலம் பிரமிக்கவைக்கிறது.

suratha yarlvanan said...

கவுத்திட்டீங்களே:)

யாழ் சுதாகர் எனது அண்ணன்.சூரியன் FM இல் இரவு நேரத் தொகுப்பாளராக இருக்கிறார்

அன்பு said...

கவுத்தியது நீங்கதானய்யா... மொட்டையான :) நான் விளங்கியது அப்படி. இப்ப என்ன குறைஞ்சு போச்சு... பாராட்டுக்கள் ஒன்றுமாகாது, உங்களிருவருக்கும் தகும்.

Chandravathanaa said...

suratha kulappirinkal..!
mukamoodiyai kalattunko.

Unknown said...

இந்த பெயர்க்குழப்பங்கள் மட்டும் தீரவே தீராதுப்பா!!