Saturday, October 01, 2005

்வ்வ்வ சக வலைப்பதிவர்களின் கவனத்துக்கு...

என் இனிய நண்பர்களுக்கு,

வணக்கம்.

நாமும் வலைப்பதிகிறோம் என்ற வகையில் ஒரு விடயத்தை இங்கு பகிர்ந்துகொள்ளவே நீண்ட நாள்களுக்குப்பிறகு இந்த ஒரு பதிவு.

இரு வாரங்களுக்கு முன் இங்கு இரு இளையர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாற்றப்பட்டனர். அவர்கள் மேல் உள்ள குற்றச்சாட்டு மத நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தங்களது வலைப்பதிவில் எழுதியதுதான் காரணம். அவர்கள் தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

இந்த வழக்கு தொடர்பான செய்திக்கு...

இந்த செய்தி கேள்விப்பட்டவுடன் இங்கு சிங்கையில் இணையத்தில் எழுதும் சக நண்பர்களிடம் இது தொடர்பாக பகிர்ந்து கொண்டேன்.

ஆனால் அதன் பின்னர் கடந்த வாரத்தில் இங்குள்ள பள்ளி மாணவ/மாணவிகள் தங்களது ஆசிரியர்கள் மீது பழிகூறி தரக்குறைவாக தங்களது வலைப்பதிவில் எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டு - அவர்களுடைய பதிவுகளை முடக்கி அவர்களையும் 3 நாளைக்கு பள்ளியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் மலேசியாவிலும், சில மாணவர்கள் இதுபோல் அத்துமீற - அவர்களை மாணவர்களுக்கு முன்னால் பொதுவில் தண்டணையளிக்கப்பட்டுள்ளது.

இப்படி அடிக்கடி செய்தி வந்து பரபரப்பாக இருப்பதால் இங்கு வானொலியிலும் இது பற்றி செய்திகள், சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது. நமது தமிழ் வானொலி ஒலி 96.8 லும் சிறப்புக்கண்ணோட்டம் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது, சட்ட தகவல்களுடன்.

இன்று Straits Times ஆங்கில ்ன் நாளிதழின் ST PodCastல் இது தொடர்பில் இன்று சிறப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

்ப் பாடொலிபரப்பு (PodCast:) பயன்படுத்தாதவர்களுக்காக அந்த ஒலிபரப்பின் எம்பி3 வடிவம் இங்கே:

பிரபலாகும் வலைப்பதிவுகள்...

வலைப்பதிவுகளைப் பற்றி வலைப்பதிவாளர்கள்

இது தொடர்பான ஒரு நேர்காணல்/கருத்துப் பரிமாற்றம்

அதனால், நாம் எழுதும் ஒவ்வொன்றும் பொதுவில் வைக்கிறோம் என்ற உள்ளுணர்வோடும், எச்சரிக்கையோடும், மனச்சாட்சியோடும் நமது படைப்புக்களை தொடர்வோம் - அது பதிவாக இருந்தாலும், பின்னூட்டமாக இருந்தாலும்.

10 comments:

தாணு said...

ப்ளாக்-ல் அத்துமீறுபவர்களுக்கும் தண்டனை உண்டு என்பதை அறிந்து மகிழ்ச்சியாக இருக்கிறது. பெண் வலைஞர்கள் நிம்மதிப் பெருமூச்சுவிடுவது கேட்கிறதா?
நன்றி

Vaa.Manikandan said...

mukamuudi pottuklaam nu yoosikkireen!
:)

ennathaan nadakkum nadakkattume
iruttinil needhi marayattume..
thannaalee velivarum thayangaathe
perum thalaikal iruppathaal kalankaathee

enRenRum-anbudan.BALA said...

Anbu,
Thanks for sharing this info.

erode soms said...

அன்பான கருத்தினால் ஆட்கொள்ளப்பட்டு
நண்பர்களானால் நன்றி

அன்பு said...

்வ் வாரந்தோறும் ஒலிபரப்பாகும் கணிணி சம்பந்தமான நிகழ்ச்சியில் இன்று/இப்போது PodCasting ்தொ தொடர்பான ஒரு நேர்காணல் இடம்பெறுகிறது கேட்க: www.oli.sg

Ganesh Gopalasubramanian said...

சர்ச்சைக்குரிய பதிவாக இருந்தாலும் நேர்த்தியாக கையாளப்பட வேண்டும். தமிழ்மணத்தில் கூட ஒற்றுமையில்லை என்று மதி வருத்தப்பட்டிருந்தார்.

//நாம் எழுதும் ஒவ்வொன்றும் பொதுவில் வைக்கிறோம் என்ற உள்ளுணர்வோடும், எச்சரிக்கையோடும், மனச்சாட்சியோடும் நமது படைப்புக்களை தொடர்வோம் //
நீங்கள் சமூக அக்கறையோடு நல்ல கருத்தைத் தந்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்

b said...

அன்பு,

நேற்றுத் தொலைக்காட்சியில் காட்டினார்கள். அவர்கள் இருவருக்கும் சிறைதண்டணை கொடுத்தது பற்றி.

அவர்கள் இருவரும் தமிழக அரசியல்வாதிகள்போல சிரித்துக் கொண்டே கோர்ட்டுக்குச் சென்றார்கள்!!!

அன்பு said...

ஆம், வெள்ளியன்ற அளித்த தீர்ப்பின்படி - ஒருவருக்கு ஒருமாத சிறைத்தண்டனையும், இன்னொருவருக்கு ஒரு நாள் சிறைத்தண்டனையும் + 5000 வெள்ளி அபராதமும் அளித்து தீர்ப்பாகியுள்ளது.

இதுபற்றிய மேல்விபரத்துக்கு:

Jail terms, fines – and a warning

Convicted for sedition, blogger insists: 'I'm no racist'

The Blogopolis@Singapore

அன்பு said...

//அவர்கள் இருவரும் தமிழக அரசியல்வாதிகள்போல சிரித்துக் கொண்டே கோர்ட்டுக்குச் சென்றார்கள்!!!

ஆம் இப்போதெல்லாம் 'யாருக்கும் வெட்கமில்லை'... என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.
(முடிந்தால் இதுபற்றி தள்ளிப்போட்டுவந்த ஒரு பதிவை இன்று இட முயற்சிக்கிறேன்.)

அன்பு said...

முன்றாமவர் 17 வயது ஹிவாய் ஷி-யின் மீதான வழக்கு நேற்று விசாராணைக்கு வந்தது. இவர் தனது சிறுவயதில் (7வயதில்) தன்னுடைய சிறுவயது தம்பி உடல்நலமில்லாமல், மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல டாக்ஸிக்கு காத்திருந்தபோது, அவர்களுக்கு முன்னர் காத்திருந்த ஒரு மலாய் ஜோடி டாக்சியை எடுத்துச்சென்ன்றுவிட, இவர்களுக்கு டாக்ஸி கிடைத்து மருத்துவமனைக்கு சென்று சேருவதற்கள் தம்பி இறக்க - அந்த வடு - மலாய் இனத்தவர்மீது சுடுசொற்களை தனது வலைப்பதிவில் அள்ளிவீச இன்று வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. அந்தப்பையனுக்கு O-Level மறுதேர்வு நடந்துவருவதால் தேர்வு முடிந்த மறுதினம் நவம்பர் 24ல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும். இவர் மேலுள்ள வழக்கு கீழறுப்பு சட்டத்தின் (Seduction Act) கீழ் வருவதால் -குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டணை அதிகமாக இருக்கும்போலிருக்கிறது.
மேல் விபரத்துக்கு...

இதற்கிடையில் நேற்று சட்ட அமைச்சர் - இந்தசட்டத்துக்கான தற்போதைய 5 வருடசிறை போதாது என்று கருத்துக்கூறியுள்ளதாக எங்கோ கேள்விப்பட்டேன்.