Monday, April 18, 2005

உங்க ஊர்லயும் இருக்குதா!?

சிங்கையில் உள்ள இந்திய தூதரகம், தனது வழக்கமான சேவைகளுடன் ஒலி/ஒளி வட்டுக்கள், நாடாக்கள் எல்லாம் கூட இரவலுக்கு கொடுக்கிறதாமே? ஆமாவா!? யாரும் பயன்படுத்தியிருக்கிறீர்களா (தெரியும், இங்கு சிங்கையில் கூட தூதரகத்தில் அருகில் ஜாகை வைத்திருக்கும், ஒருவருக்குமட்டும்தான் பயன் என்று:) இரண்டு காரணம் - மற்றவருக்கு வேலை நேரம் ஒத்துவராது, இன்னொன்று எல்லாமே हिन्डि / हिन्दि

இது மாதிரி உங்க ஊர்லயும் உண்டா:)

5 comments:

அன்பு said...

ரொம்ப நன்றி, இதச் சொல்றதுக்குதானே வந்தீங்க!?

हिन्डि / हिन्दि

சும்மாதான்(இது தமிழ் சும்மாதாங்க:)
நம்ப கோபியோட உதவில சும்மா(இதுவும்தான்:) hindi, hindhi-ன்னு அடித்துப்பார்த்தேன். இதுல்ல எது சரி? எதுவும் சரியில்லையா? அட போங்கப்பா:)

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

அன்பின் அன்பு
தகவலுக்கு நன்றி.
முஜேபீ ஹிந்தீ மாலும் ஹை !
எடுக்கலாம்தான்.ஆனால், நேரம்?
உங்க 'ஹிந்தி' (இரண்டுமே)தவறு,..: (
எழுத்துப்பிழை இருக்கு,.
சரிசரி, தட்டிப் பார்த்து
கத்துக்கவேண்டியதுதான்றீங்களா?
ம்,. அதுவும் சரிதான்.
எழுத்துரு தகவல்கள் (ஹிந்திக்கு)
கொடுங்கள். நன்றி. அன்புடன், ஜெயந்தி

அன்பு said...

ஹலோ ஜெயந்தி,

हिन्डि (Hindi) / हिन्दि (Hindhi)
அதனால் हिन्दि (இரண்டாவது) என்பது சரிதான் என்று ஹிந்தி மட்டுமே படித்த (தமிழ்) நண்பர் சொல்கிறாரே!? ஆப்கோ-பி ஹிந்தி தோடச-தான் மாலுமா:)

எழுத்துரு தகவலுக்கு மேலே உள்ள கோபியைச் சொடுக்குங்கள்:)

Anonymous said...

இந்த நாட்டிலும் அப்பிடித்தான்.... ஆனா எல்லாம் இந்தி

Anonymous said...

हिंदि என்பதே சரி என நினைக்கிறேன். காமராஜ் மொழி மாற்றியில் (hi-mdhi) எனத் தட்ட வேண்டியிருக்கும்.

ம்... எப்படி சரி செய்யலாம் என யோசிக்கிறேன்.