Tuesday, July 05, 2005

No more kuppai.com - இனியெல்லாம் குப்பை.வணி (வாணி!?)

வணக்கம்.

வழக்கம்போல சிங்கை தகவல்தொழிநுட்பததின் மூலம் தமிழுக்கு மேலும் ஒரு சிறப்பு செய்திருக்கிறது. தகவல் மேம்பாட்டு ஆணையம் (Infocomm Development Authority - IDA) வெளியிட்ட நேற்றைய அறிவிப்பின் படி இனி தமிழிலேயே வலைத்தளமுகவரி (URL - உரல்) வைத்துக்கொள்ள இயலும். அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு இங்கே...
இந்த திட்டம் முதல் ஆறுமாதத்துக்கு பரீட்சாத்தமுறையில் அமையும்.

இதைப்பற்றிய மேல் விபரத்திற்கு:http://www.idn.sg/

அது எப்படி செயல்படப்போகிறது?

பி.கு:
கடந்த நான்கைந்து வருடங்களாகவே இந்த முயற்சியில் i-dns.net என்ற நிறுவனம் இருந்தது தெரியும். அவர்களுடைய தளத்தில் இதுதொடர்பில் மேல்விபரம் உள்ளது. அந்நிறுவனத்தின் திரு. மணியம் சில தமிழ் இணைய மாநாடுகளில் இதுதொடர்பில் உரைநிகழ்த்தியதாக நினைவு.

8 comments:

குமரேஸ் said...

அன்பு,

2 வருடங்களுக்கு முன்னர் பரணி என்பவர் www.தோசை.com உட்பட 20 தமிழ் வலை முகவரிகளை பதிவு செய்து வைத்திருந்ததை இணையத்தில் காணக்கூடியதாக இருந்தது.

இப்பவும் வைத்திருக்கிறாரா தெரியவில்லை.

இப்பவும் தமிழ் வலை முகவரிகளை DNS வசதிப்படுத்துவதற்கு முடியவில்லையே, சரி இன்னும் கொஞ்ச நாட்களுக்கு காத்திருப்போம்

வானம்பாடி said...

இணைப்பில் உள்ள தகவல்படி பார்த்தால் 'குப்பை.கணி' என்றெல்லாம் வராது, வெறும் 'குப்பை.com' மட்டும்தான் சாத்தியம் போலிருக்கிறது. TLD பெயர்கள் இன்னமும் ICANN கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது, ICANN அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. :(

வீ. எம் said...

தகவலுக்கு நன்றி அன்பு.. நல்ல நல்ல தகவல் தர நீங்க அது என்ன குப்பை னு பேர் வலைப்பூ பேர் வெச்சிருகீங்க..
பெயர்காரணம் கூறுக !

வீ எம்

NambikkaiRAMA said...

நல்ல தகவல். வீ.எம் க்கு எழுந்த சந்தேகம் அடியேனுக்கும் எழுந்தது.தீர்த்து வையுங்கள்!

கருப்பு said...

புதுமையான தகவல் இது. கேள்விப்பட்டதில்லை நான். நன்றி அன்பு.

குமரேஸ் said...

சுதர்சன் சொல்வதுபோல்

"குப்பை.வாணி" என்றெல்லாம் வராது, வெறும் "குப்பை.com'' மட்டும்தான் சாத்தியம்.

இவ்விடயம் தொடர்பாக Verisign இன் multilingual systems பிரிவான i-Nav இன் Technical director பொறுப்பில் உள்ள Krall Gary என்பவரது (gkrall@verisign.com) மின் அஞ்சல்

"You may not register a Tamil domain name in the manner in which you have below. Only the hostname for a domain can be in Tamil. So in your example you would be registering: "ருபா.com" Through the registration process this domain would be converted to: "xn--xlclo4bcn.com" which is how you would delegate your name of your webserver in DNS"

மேலும் Internationalized Domain Names தொடர்பான சுட்டிகள்

http://idn.verisign-grs.com/index.jsp
http://idn.verisign-grs.com/plug-in/support/index.jsp

http://www.icann.org/registrars/accredited-list.html

அன்பு said...

ரொம்ப நன்றி நண்பர்களே - பல பயனுள்ள மேல் தகவலகள், சுட்டிகளுக்கும் நன்றி.

enRenRum-anbudan.BALA said...

அன்பு,
தகவலுக்கு நன்றி !

You give lot of useful information, so why do you call your blog "குப்பை" ?????