Sunday, February 13, 2005

அன்பர்தின வாழ்த்துக்கள்

அன்புக்குரிய உங்களுக்கு என் அன்பர்தின வாழ்த்துக்கள்.

ஆம், சிங்கப்பூர் தமிழ் ஊடகங்கள் Valentine's Day என்பதை மற்றவர்கள் போல் வெறும் காதலர் தினம் என்று கொச்சைப்படுத்துவதில்லை - அன்பர்கள் தினம் என்று கொண்டாடுகிறது. வானொலியில் பாடல் விரும்பிக்கேட்பதனாலும் சரி, அன்பர்தினம் முன்னிட்டு உல்லாசப்பயணத்துக்கு ஏற்பாடு செய்தாலும் காதலர்கள், கணவன்/மனைவி என்று மட்டுறுத்தாமல், நாம் அன்பு செலுத்தும் அனைவருக்குமான ஒரு நாளாகவே இது கடைப்பிடிக்கப்படுகிறது.

அதனால், அன்புக்குரிய உங்களுக்கு என் அன்பர்தின வாழ்த்துக்கள்.

மேலும் Valentine's Day தொடர்பில் இந்த வாரயிறுதியில் நடந்த சில நிகழ்வுகளும், தகவல்களும்:

செய்தி 1:
ஒரு காலத்தில் நான் இங்கு சிங்கை வந்தபுதிதில் பலரும் கேட்டிருக்கின்றனர், இந்தியர்கள் பெரும்பாலும் நிச்சயக்கப்பட்ட திருமணம் செய்வீர்களாமே!? தரகர்கள் கொடுக்கும் புகைப்படம் பார்த்து துணையை முடிவுசெய்வீர்களாமே என்று. நேற்று வந்த ஒரு செய்தி சொல்வது மேட்ச்மேக்கிங்க், டேட்டிங்க் நிறுவங்களின் தேவை அதிகரித்திருக்கிறது, ஆதாயமுள்ள ஒரு வர்த்தகதுறையாக முன்னேறி வருகிறது. It's Just Lunch (இது அமெரிக நிறுவனத்தின் சிங்கைப் பிரிவாம்), Two to Tango, Lunch Actually, Hotspots.com ... என்று பல நிறுவனங்கள் அரசின் Social Development Unit (SDU)வுக்கு உறுதுணையாக இருக்கிறது. சிங்கையில் பெரும்பாலும் காதல் திருமணம்தான் என்பதால் பெரும்பாலானவர்கள் பள்ளியிலேயே கைபிடித்து திரிகின்றனர். அது திருமணத்தில் இணைந்து நல்வாழ்வுக்கும் இட்டுச் செல்கிறது, இடையிலும் பிரிகின்றனர். அதனால், திருமணத்தில் இணைய இயலாத சிலர், காதல் அரங்கேறாத பலர், இன்னும் சில காரணங்களால் திருமணம் தள்ளிப்போகும் பலர் என்று இருக்கும் இளையர்களுக்கு இதுபோன்ற நிறுவங்கள் பெரும் வரப்பிரசாதம். இந்த வகையில் அரசின் SDU முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு துணைசென்றிருக்கிறது. இதுபோன்ற நிறுவனங்கள் தமிழர்களுக்கென்றும் இருக்கிறதும், சில நேரம் அத்தி பூத்தார்போல் மணமகன்/ள் தேவை வரிவிளம்பரங்கள் தமிழ்முரசில் வருவதுண்டு.

செய்தி 2:
13 முதல் 18 வயதுடைய சிங்கப்பூர இளையர்களில் ஐவரில் ஒருவர் உடலுறவில் ஈடுபடுவதாலும், கருக்கலைப்பு இன்னபிற செக்ஸ் தொடர்பான நோய்கள் அதிகரிப்பதாலும் ஒரு தன்னார்வ நிறுவனம் காத்திருப்பதில் அர்த்தமுண்டு - Worth Waiting For... என்ற சொற்றொடர் பதித்த பட்டைகளை(wrist bands) இளையர்களிடையே கொடுத்து தங்களுடைய அன்புக்குரியவர்களிடம் கொடுக்கச் செய்திருக்கிறது.

செய்தி 3:
மற்றொரு நடப்பில், தாய்லாந்தில் நடந்த கருத்துக்கணிப்பில் Valentine's Day என்பது மற்றொரு சாதாரண மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உண்ணும் விருந்தாக மட்டும் இல்லாமல் கிட்டத்தட்ட 100,000 இளையர்கள் உடலுறவில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக சொல்கிறது.

இதுபோன்றவற்றில் நம் இந்திய இளையர்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதும் வரும் செய்திகளில் தெரிகிறது. உலகம் போவதெங்கே...!?

2 comments:

Mookku Sundar said...

ஒரு கோணம்:

ஒரு ரவுண்டு போய்ட்டு மறுபடியும் புற்ப்பட்ட இடத்துக்கு வந்துடுவாங்க
கவலைப்பாதீங்க.

இன்னொரு கோணம்:

ஹி..ஹி.. அவங்களாவது என்ஜாய் பண்ணட்டுமே.. விடுங்க அன்பு.

Anonymous said...

சரியா சொன்னீங்க அன்பு ... 'அன்பர் தினம்' என்பது அழகான வார்த்தை. அது தொடும்தூரத்தின் நீளம் அதிகம். சன் டிவி போன்ற வெகுஜன வீச்சுள்ள ஊடகங்கள் தமிழ்நாட்டில் / உலகில் இந்த நல்ல தமிழ் வார்த்தையை அடுத்த 'காதலர் தின'த்திற்குள்ளாவது அறிமுகப்படுத்த மெனக்கெடலாம். But - கிடுவார்களா?

செய்தி : 1
சிங்கப்பூரில் - அடுத்தவர்களால் matchmaking செய்யப்படாமல், தங்களாலும் சரியான match-ஐ தேட முடியாமல் 'many people are reaching old age' என்ற உண்மையை எல்லோரும் உணர்ந்தே இருக்கிறார்கள். முதிர்கன்னிகள் என்ற சோகம் சிங்கப்பூர் இந்திய சமூகத்தில் அதிகமிருப்பதை பக்கத்திலிருந்து பார்க்கிறோம். இந்தச் சூழலில் திருமண ஏற்பாட்டு சேவை என்பது நிறைய நிறையத் தேவைதான்.....

அப்புறம் - செய்தி 3படி வாழாமல், செய்தி 2ன் படி வாழ்வதுதான் சரியான வாழ்க்கையென்றாலும், கால ஓட்டத்தில், வாழ்க்கை செய்தி 1ஐப்போல் ஆகிவிடுகிற வாய்ப்பு இருப்பதால், செய்தி 2ஐ நிராகரித்து, செய்தி 3ன்படி கடந்த காதலர் / அன்பர் தினத்தைக் கொண்டாடியிருக்கக் கூடிய அத்தனை அன்பர்களுக்கும் என்னால் சொல்லக்கூடியது ஒன்றே ஒன்றுதான் - Wish you many more happy returns of the day !!!


அன்புடன்
பாலு மணிமாறன்